மேக்மீ மெடல் 
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 13 Test
 9th std – Tamil Unit 4
1. Photo Copier என்பதன் தமிழ்ச் சொல்லாக்கம்
அ) தொலைநகல் இயந்திரம்            ஆ) நகல் இயந்திரம்    
இ) ஒளிப்படி இயந்திரம்             ஈ) ஒலிப்படி இயந்திரம்
2. உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு
அ) 1959        ஆ) 1958            இ) 1938         ஈ) 1939
3. கிரேக்க மொழிச் சொல்லான “சீரோகிராஃபி” என்பதன் பொருள்
அ) உலர் எழுத்துமுறை         ஆ) ஒளிப்படி எழுத்துமுறை    
இ) ஜெராக்ஸ் முறை            ஈ) கந்தக எழுத்துமுறை
4.ஒளிப்படி இயந்திரத்தை 1959 ல் உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்?
அ) செஸ்டர் கார்ல்சன்         ஆ) அலெக்சாண்டர் பெயின்
இ) ஹாங்க் மாக்னஸ்கி        ஈ) ஜான் ஜெப்பர்டு பாரன்
5. _____ தட்டைக் கொண்டு செஸ்டர் கார்ல்சன் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
அ) ஜிங்க் தடவிய தட்டு        ஆ) கந்தகம் தடவிய துத்தநாக தட்டு
இ) காப்பர் தட்டு            ஈ) தங்கம் முலாம் பூசிய தட்டு
6. ஜியோவன்னி காசில்லி கண்டுபிடிப்பை கொண்டு பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 1865         ஆ) 1846        இ) 1985            ஈ) 1938
7. பான்டெலிகிராஃப் என்பது ____ வகை கருவி.
அ) ஒளிப்படி இயந்திரம்        ஆ) தொலைநகல்கருவி    
இ) ஒலிப்படி கருவி            ஈ) நகலெடுக்கும் கருவி
8. 1985 ல் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார்?
அ) அலெக்சாண்டர் பெயின்        ஆ) ஜியோவான்னி காசில்லி
இ) செஸ்டர் கார்ல்சன்        ஈ) ஹாங்க் மாக்னஸ்கி
9. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் கருவி எது?
அ) காமாஃபேக்ஸ்       ஆ) பான்டெலிகிராப்            இ) சீரோகிராஃபி            ஈ) ஆல்பா ஃபேக்ஸ்
10.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவரின் குழு தானியங்கி பண இயந்திரத்தை முதலில் நிறுவினர்.
2. பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 அன்று தானியக்க பண இயந்திரத்தை அமைத்தது.
அ) இரண்டும் சரி    ஆ) 1 சரி, 2 தவறு     இ) 1 தவறு, 2 சரி    ஈ) இரண்டும் தவறு
11.கூற்று: தானியங்கி பண இயந்திரம் எதிர்காலத்தில் குறைந்து விடக் கூடும்.
காரணம்: பெருகி வரும் இணைய பயன்பாடு மற்றும் பணமற்ற வணிக முறையை நடைமுறைப்படுத்துவதால்.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல    ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம்             ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
12. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் வங்கி அட்டைகளின் ____ பகுதியை விற்பனைக் கருவியில் தேய்ப்பதன் மூலம் வணிக பரிமாற்றம் நடைபெறுகிறது.
அ) காந்தப்பட்டை        ஆ) கருப்புப்பட்டை        இ) தாமிரம்        ஈ) சில்லு
13.கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?
அ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு         ஆ) அலெக்சாண்டர் பெயின்
இ) செஸ்டர் கார்ல்சன்        ஈ) ஹாங்க் மாக்னஸ்கி
14.ஆட்ரியன் ஆஷ்பீல்டு கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்ற ஆண்டு
அ) 1959            ஆ) 1958            இ) 1962         ஈ) 1972
15. தமிழகத்தில் திறன் அட்டைகளுடன் கீழ்க்கண்ட எந்த விவரங்கள் சேர்க்கப்படுகின்றன.
1. முகவரி    2. வங்கி கணக்கு எண்        3. ஆதார் எண்  4. அலைபேசி எண்5. கையொப்பம்
அ) 1, 2, 3        ஆ) 1, 3, 4, 5            இ) 1, 3, 4         ஈ) அனைத்தும்
16.இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் கண்டுபிடித்த ஆண்டு
அ) 1979         ஆ) 1989            இ) 1969            ஈ) 1959
17.இணையவழி மளிகைக்கடை எங்கு எப்போது முதலில் தொடங்கப்பட்டது
அ) அமெரிக்கா, 1979      ஆ) கனடா, 1979     இ) அமெரிக்கா, 1989          ஈ) ஆஸ்திரேலியா, 1989
18. இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இணைய வழி பயணச்சீட்டு வசதியை அறிமுகப்ப்டுத்திய ஆண்டு
அ) 1991            ஆ) 2002             இ) 2012            ஈ) 2015
19. IRCTC இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது எப்போது?
அ) 2015 டிசம்பர் 1    ஆ) 2015 ஆகஸ்ட் 1        இ) 2015 ஏப்ரல் 1         ஈ) 2015 மே 1
20. IRCTC இணையதளத்தை ஒரே நேரத்தில் எத்தனை பயனர்கள் பயன்படுத்தலாம்
அ) 3, 00, 000         ஆ) 30, 000        இ) 30, 00, 000            ஈ) 3, 000
21. பொருத்துக
1. குறியீடுகளை மின்னாற்றல் மூலம் அச்சிடுவது – i) 1846
2. தொலைநகல் கருவி சேவை – ii) 1865
3. தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பம் – iii) 1985
4. இணைய வணிகம் – iv) 1979
5. வையக விரிவு வலை வழங்கி – v) 1990
அ) i ii iii iv v        ஆ) ii iii i v iv            இ) v ii i iv iii            ஈ) iv iii v ii i
22. பொருத்துக.
1. குறியீடுகளை மின்னாற்றல் மூலம் – i) மைக்கேல் ஆல் ட்ரிச் அச்சிடுவது
2. பான்டெலிகிராஃப் – ii) ஹாங்க் மாக்னஸ்கி
3. காமா ஃபேக்ஸ் – iii) அலெக்சாண்டர் பெயின்
4. இணைய வணிகம் – iv) ஜியோவான்னி காசில்லி
5. வையக விரிவு வலை வழங்கி – v) டிம் பெர்னர்ஸ்லீ
அ) i ii iii iv v        ஆ) ii iii i v iv            இ) iii iv ii i v            ஈ) iv iii v ii i
23. பொருத்துக.
1. www Server – i) வையக விரிவு வலை வழங்கி
2. Swiping machine – ii) அட்டை பயன்படுத்தும் இயந்திரம்
3. Fax – iii) தொலைநகல் இயந்திரம்
4. Photo Copier – iv) ஒளிப்படி இயந்திரம்
அ) i ii iii iv        ஆ) ii iii i iv        இ) ii i iv iii        ஈ) iv iii ii i
24.“ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் ” என்ற வரிகள் யாருடையது?
அ) கண்ணதாசன்    ஆ) வைரமுத்து     இ) வாலி
25.இலக்கணக் குறிப்புத் தருக.
பண்பும் அன்பும், இனமும் மொழியும்
அ) உம்மைத் தொகைகள்                ஆ) உவமைத் தொகைகள்
இ) எண்ணும்மைகள்                     ஈ) பண்புத்தொகைகள்
26. கவிஞர் வைரமுத்து அவர்கள் கீழ்க்கண்ட எந்த விருதினை பெற்றுள்ளார்
அ) பத்மஸ்ரீ    ஆ) பாரத ரத்னா    இ) பத்மபூஷண்     ஈ) துரோணாச்சார்யா விருது
27. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி ”
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
அ) புறநானூறு     ஆ) அகநானூறு    இ) சீவக சிந்தாமணி        ஈ) மணிமேகலை
28. பெருந்தச்சனைக் கூவி, “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றார் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்? 
அ) புறநானூறு     ஆ) அகநானூறு    இ) சீவக சிந்தாமணி        ஈ) மணிமேகலை 
29. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. தொல்காப்பியத்தில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
2. இந்நூலில் கூறிப்பிட்டுள்ள பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
அ) அனைத்தும் சரி     ஆ) 1 மட்டும் சரி    இ) 2 மட்டும் சரி    ஈ) இரண்டும் தவறு
30. தமிழகத்தை சேர்ந்த சிவன் இஸ்ரோவின் எத்தனையாவது தலைவர்?
அ) 6            ஆ) 7            இ) 8            ஈ) 9
31. இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்?
அ) அப்துல்கலாம்        ஆ) மயில்சாமி அண்ணாதுரை    இ) சிவன்         ஈ) வளர்மதி
32. சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த ஆண்டு
அ) 2014            ஆ) 2015         இ) 2016            ஈ) 2017
33.சிவன் அவர்களின் சொந்த ஊர் எது?
அ) வல்லங்குமாரவிளை – இராமநாதபுரம் அருகில்
ஆ) வல்லங்குமாரவிளை – தூத்துக்குடி அருகில்
இ) வல்லங்குமாரவிளை – நாகர்கோவில் அருகில்
ஈ) வல்லங்குமாரவிளை – நாகப்பட்டிணம் அருகில்
34.பி. எஸ். எல். வி திட்டத்தை தொடங்க இந்திய அரசு இசைவு தந்த ஆண்டு ______.
அ) 1969            ஆ) 1972            இ) 1982        ஈ) 1983
35.சிவன் அவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலி____. 
அ) விக்ரம் சாராபாய்        ஆ) ஹோமி பாபா    இ) அருணன் சுப்பையா         ஈ) சித்தாரா 
36. விக்ரம் சாராபாய் அவர்கள் ____ என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமாக இருந்தார்.
அ) ரோகினி        ஆ) ஆரியபட்டா     இ) பி. எஸ். எல். வி        ஈ) ஜி. எஸ். எல். வி
37. விக்ரம் சாராபாய் அவர்கள் செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக ____ இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.
அ) 24000        ஆ) 25000            இ) 2400        ஈ) 2500
38.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது?
அ) ஹைதராபாத்    ஆ) பெங்களுர்                இ) திருவனந்தபுரம்               ஈ) திருநெல்வேலி
39. அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவராக பணியாற்றினார்
அ) 9         ஆ) 10            இ) 11             ஈ) 12
40. ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) விக்ரம் சாராபாய்        ஆ) ஹோமி பாபா        இ) அருணன் சுப்பையா    ஈ) அப்துல் கலாம்
41.அப்துல்கலாம் அவர்கள் கீழ்க்கண் எந்த நிறுவனங்களில் விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார்
1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
2. இந்திய அணுசக்தி துறை
3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
அ) அனைத்தும்        ஆ) 1, 2            இ) 1, 3                 ஈ) 2, 3
42. அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் உயரிய விருதான ___ விருதை பெற்றுள்ளார்.
அ) பத்மஸ்ரீ        ஆ) பாரத ரத்னா     இ) பத்மபூஷண்    ஈ) துரோணாச்சார்யா
43. ______ ஆண்டு முதல் இரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவியிருக்கின்றன.
அ) 1947            ஆ) 1957         இ) 1949            ஈ) 1969
44. கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
அ) வளர்மதி அவர்கள் அரியலூரில் பிறந்தவர்.
ஆ) 2014ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார். 
இ) இஸ்ரோவில் 1984 முதல் பணியாற்றி வருகிறார்.
ஈ) 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
45. அருணன் சுப்பையா அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
அ) கோதைசேரி – தூத்துக்குடி            ஆ) கோதைசேரி – திருநெல்வேலி
இ) ஏர்வாடி – தேனி                ஈ) ஏர்வாடி – தூத்துக்குடி
46.அருணன் சுப்பையா அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு
அ) 1983        ஆ) 1984        இ) 1985            ஈ) 1986
47.அருணன் சுப்பையா அவர்கள் இந்திய விண்வெளித் துறையின் எந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக உள்ளார்.
அ) சூரியன் சுற்றுகலன் திட்டம்                 ஆ) சந்திரன் சுற்றுகலன் திட்டம்.
இ) செவ்வாய் சுற்றுகலன் திட்டம்             ஈ) வியாழன் சுற்றுகலன் திட்டம்
48. மங்கள் யான் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 2012            ஆ) 2013             இ) 2014            ஈ) 2015
49. நிலவுக்கு முதன்முதலில் அனுப்பிய ஆய்வுக் கலம் சந்திராயன் மற்றும் சந்திராயன் 2 திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் யார்?
அ) விக்ரம் சாராபாய்           ஆ) மயில்சாமி அண்ணாதுரை
இ) அருணன் சுப்பையா        ஈ) அப்துல் கலாம்
50. கீழ்க்கண்டவற்றுள் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பெற்ற விருது எது?
அ) பாரத ரத்னா            ஆ) பத்ம பூஷண்    
இ) பத்மஸ்ரீ                ஈ) சர். சி. வி. இராமன் நினைவு அறிவியல் விருது
 

 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment