LATEST

Wednesday, February 28, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 12 Test - 9th std Tamil Unit 3

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 12 Test
 
 கேள்விகள் : 55                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________
 

9th- unit 3


1. “எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல்
அ) நற்றிணை        ஆ) அகநானூறு        இ) கலித்தொகை     ஈ) குறுந்தொகை

2. இயற்கையை சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் சங்க காலத் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதை விளக்குவது
அ) ஏறு தழுவுதல்     ஆ) விவசாயம்        இ) சங்க இலக்கியங்கள்    ஈ) கல்வெட்டுகள்

3. எருது கட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை ____ பள்ளு பதிவு செய்துள்ளது.
அ) கண்ணுடையம்மன்      ஆ) முத்தாளம்மன்    இ) கித்தேரியம்மாள்        ஈ) முத்துக்குமாரசாமி

4. எருது பொருதார் கல் எம்மாவட்டத்தில் உள்ளது?
அ) சேலம்         ஆ) நாமக்கல்        இ) திருநெல்வேலி    ஈ) காஞ்சிபுரம்

5.வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை____.
அ) வேளாண்மை    ஆ) மாடுகள்         இ) விலங்குகள்    ஈ) பறவைகள்

6. ஏறு தழுவுதல் பற்றி கீழ்க்கண்ட எந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது.
1. சிலப்பதிகாரம்    2. பள்ளு    3. புறப்பொருள் வெண்பாமாலை    4. கலித்தொகை
அ) 1, 4            ஆ) 1, 2, 4        இ) 2, 4        ஈ) அனைத்தும்

7. “எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு, கலங்கினர் பலர்” என்ற அடிகள் எதை பற்றி கூறுகின்றன
அ) ஏறு தழுவும் இளைஞர்கள்                ஆ) ஏறுதழுவுதல் களம்
இ) ஏறுதழுவுதலை காணும் மக்கள்            ஈ) ஏறுதழுவுதலில் ஈடுபடும் மாடுகள்

8. “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்” என்ற அடிகள் எதை பற்றியது
அ) ஏறு தழுவும். இளைஞர்கள்        ஆ) ஏறுதழுவுதல் களம்
இ) ஏறுதழுவுதலை காணும் மக்கள்    ஈ) ஏறுதழுவுதலில் ஈடுபடும் மாடுகள்

9. காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?
அ) எகிப்து, கிரீட் தீவு         ஆ) எகிப்து, கிரீஸ்    இ) எகிப்து, மலேசியா      ஈ) எகிப்து, கிரேக்கம்

10. காளைப் போர் குறித்த பெனி – ஹாசன் சித்திரங்கள் எங்குள்ளன?
அ) கிரீட்        ஆ) சீனா        இ) எகிப்து         ஈ) பார்சிலோனியா

11. கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?
அ) நீலகிரி – கரிக்கையூர்    ஆ) மதுரை – கல்லூத்துமேட்டுப்பட்டி     இ) தேனி – சித்திரக்கல் புடவி

12. “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டி பாய்பவையாய்” இவ்வடி இடம் பெற்ற நூல்.
அ) சிலப்பதிகாரம்    ஆ) கலித்தொகை     இ) புறநானூறு            ஈ) பள்ளு

13. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ____ல் உள்ளது.
அ) நீலகிரி – கரிக்கையூர்            ஆ) மதுரை -கல்லூத்துமேட்டுப்பட்டி
இ) தேனி – சித்திரக்கல் புடவி            ஈ) சேலம் – கரிக்கையூர்

14. திமிலுடன் கூடிய காளை ஓவியம் உள்ள இடம்
அ) நீலகிரி – கரிக்கையூர்            ஆ) மதுரை -கல்லூத்துமேட்டுப்பட்டி
இ) தேனி – சித்திரக்கல் புடவி             ஈ) சேலம் – கரிக்கையூர்

15. ஏறுதழுவுதல் குறித்த தொல் சான்றுகள் பற்றிய செய்திகளை ஆராய்க.
1. ஏறு தழுவுதல் குறித்த நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
2. கிரீட் தீவிலுள்ள கினோஸல் எனுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களில் காளைப்போர் குறித்த செய்தி உள்ளது.
3. எருது பொருதார் கல் சேலம் மாவட்டத்தில் உள்ளது.
4. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சித்திரக் கல் புடவியில் திமில்டன் கூடிய காளை ஓவியம் உள்ளது.
அ) அனைத்தும் தவறு        ஆ) அனைத்தும் சரி         இ) 3 மட்டும் சரி  ஈ) 4 மட்டும் தவறு

16. சிந்துவெளி நாகரிக மக்கள் தெய்வமாக வழிபட்ட விலங்கு
அ) நாய்        ஆ) சிங்கம்        இ) பசு            ஈ) காளை

17. சிந்துவெளி அகழ்வாய்வில் கிடைத்த மாடு தழுவும் கல் முத்திரை தமிழர்களின் பண்பாடான ஏறு தழுவுதலை குறிப்பதாக கூறியவர் யார்?
அ) மாங்குடி மருதனார்            ஆ) ஐராவதம் மகாதேவன்     
இ) பெனி – ஹாசன்                ஈ) ஐராவதீஸ்வரர்

18. ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் ____ உடனும், மருத நில மக்களின் _____ உடனும் பாலை நில மக்களின் ____ உடனும் பிணைந்தது.
அ) அடையாளம், தொழில் உற்பத்தி, போக்குவரத்துத் தொழில்
ஆ) தொழில் உற்பத்தி, அடையாளம், போக்குவரத்துத் தொழில்
இ) அடையாளம், போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி
ஈ) போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி, அடையாளம்

19. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன.
1. எருதுகள்    
2. ஏறுகள்        
3. ஏர் விலங்கு        
4. ஏர் மாடுகள்
அ) அனைத்தும்    ஆ) 1, 2            இ) 1, 2, 4         ஈ) 1, 3, 4

20. கீழ்க்கண்டவற்றுள் ஏறுதழுவுதலின் வேறு பெயர்கள் யாவை?
1. மாடுபிடித்தல்    
2. மாடு அணைதல்    
3. மாடு விடுதல்
4. வேலி மஞ்சுவிரட்டு    
5. ஏறு விடுதல்
அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2, 3        இ) 2, 3,     4        ஈ) 1, 3, 4

21. உழவர்கள் பொங்கலன்று மாடுகளுக்கு _____ஊட்டிவிடுவர்.
அ) தளிகைப் பொங்கல்     ஆ) கரும்பு        இ) மாவிலை        ஈ) நெல்

22. வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்த மாடுகளுடன் அவர்களின் ____மரபாக உருவானது ஏறுதழுவுதல் ஆகும்.
அ) போட்டியிட்டு வெற்றி பெறும்    ஆ) சண்டையிடும்      இ) விளையாடி மகிழும்     ஈ) ஏர் ஓட்டும்

23. சல்லிக்கட்டு என்னும் சொல்லில் ‘சல்லி’ என்பது எதை குறிக்கும்
அ) மாட்டின் திமில்                        ஆ) கொம்பு
இ) கழுத்தில் கட்டப்பட்டுள்ள வளையம்             ஈ) கழுத்தில் உள்ள மாலை

24. ஏறுதழுவுதல் விளையாட்டில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள துணி முடிப்பில் ______ இருக்கும்.
அ) சல்லி நாணயங்கள்     ஆ) மலர்கள்      இ) வைரம்           ஈ) வெள்ளிக் கட்டிகள்

25. காளை சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு
அ) ஸ்பெயின்         ஆ) கனடா        இ) பாரிஸ்        ஈ) இங்கிலாந்து

26. அன்பையும் வீரத்தையும் ஒரு சேர வளர்த்தெடுக்கும் விளையாட்டு
அ) கபடி    ஆ) மாடு அணைதல்          இ) நீர் விளையாட்டு        ஈ) ஓரையாடுதல்

27. எருது கட்டி எத்தனை ஆண்டுகள் தொன்மையுடைய விளையாட்டு
அ) 2500    ஆ) 1000        இ) 10000        ஈ) 2000

28. கூற்று: ஏறு தழுவுதல் விளையாட்டை பேணி பாதுகாக்க வேண்டும்.
காரணம்: இவ்விளையாட்டு விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டு குறியீடு.
அ) கூற்று சரி காரணம் தவறு                ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி            ஈ) கூற்று சரி காரணம் தவறு.

29. இந்திர விழா கீழ்க்கண்ட எந்த நகரோடு அதிகம் தொடர்புடையது?
அ) கொற்கை        ஆ) புகார்         இ) தொண்டி            ஈ) முசிறி

30. கீழ்க்கண்டவற்றுள் இந்திர விழா பற்றி கூறும் நூல்கள் எவை?
1. திருக்குறள்        2. சிலப்பதிகாரம்    3. மணிமேகலை        4. வளையாபதி
அ) அனைத்தும்        ஆ) 2, 3, 4    இ) 2, 3             ஈ) 1, 3, 4

31. இந்திர விழாவின் நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமையும் மணிமேகலையிலுள்ள காதை _____.
அ) வரந்தருக்காதை                ஆ) ஊர் சூழ்வரிக்காதை    
இ) விழாவறை காதை                 ஈ) கடவுள் வாழ்த்து

32. சரியான பொருளைத் தேர்ந்தெடு.
சமயக் கணக்கர், பாடைமாக்கள்
அ) கணக்காளர், படை வீரர்கள்            ஆ) சமயத் தத்துவவாதிகள், பல மொழிபேசும் மக்கள்
இ) கணக்காளர், பல மொழிபேசும் மக்கள்        ஈ) சமயத் தத்துவவாதிகள், படை வீரர்கள்

33. சரியான பொருளைத் தேர்ந்தெடு.குழீஇ, தோம்
அ) பள்ளம், இசை        ஆ) ஒன்றுகூடி, இசை        இ) ஒன்றுகூடி, குற்றம்        ஈ) பள்ளம், குற்றம்

34. சரியான பொருளைத் தேர்ந்தெடு.    கோட்டி, பொலம்
அ) கொடி, குற்றம்    ஆ) மன்றம், பொன்      இ) கொடி, பொன்         ஈ) மன்றம், குற்றம்

35. சரியான பொருளைத் தேர்ந்தெடு.    வேதிகை, தூணம்
அ) திண்ணை, தூண்         ஆ) வேதங்கள், தூசு    இ) வேதங்கள், தூண்    ஈ) திண்ணை, தூசு

36. சரியான பொருளைத் தேர்ந்தெடு.தாமம், கதலிகைக் கொடி
அ) தாமதம், துணியாலான கொடி                    
ஆ) போர், துணியாலான கொடி
இ) மாலை, சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது
ஈ) போர், சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது

37. சரியான பொருளைத் தேர்ந்தெடு.
காழூன்று, விலோதம்
அ) சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது, துணியாலான கொடி
ஆ) துணியாலான கொடி, சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது
இ) கொம்புகளில் கட்டும் கொடி, துணியாலான கொடி
ஈ) சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது, மரத்தின் மீது படர்ந்த கொடி

38. சரியான பொருளைத் தேர்ந்தெடு. செற்றம், கலாம்
அ) படை, வாழ்க்கை    ஆ) சினம், போர்    இ) படை, போர்                ஈ) சினம், வாழ்க்கை

39. சரியான பொருளைத் தேர்ந்தெடு-வசி, துருத்தி
அ) வசீகரம், சென்று                    ஆ) வசீகரம், ஆற்றிடைக்குறை
இ) மழை, ஆற்றிடைக்குறை                 ஈ) மழை, சென்று

40.மணிமேகலையின் விழாவறை காதையில் இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது
அ) 27        ஆ) 28             இ) 47            ஈ) 48

41. "ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் ”
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) சிலப்பதிகாரம்        ஆ) மணிமேகலை     இ) வளையாபதி    ஈ) குண்டலகேசி

42. “காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் ”
இவ்வரிகள் மணிமேகலை நூலில் இடம்பெறும் காதை
அ) வரந்தருக்காதை      ஆ) ஊர் சூழ்வரிக்காதை      இ) விழாவறை காதை         ஈ) கடவுள் வாழ்த்து

43. கீழ்க்கண்டவற்றுள் ஐம்பெருங்குழுவில் அல்லாதது எது?
1. அமைச்சர்    2. சடங்கு செய்விப்போர்    3. படைத் தலைவர்  4. தூதர்     5. சாரணர்
அ) 1, 5            ஆ) 2, 3            இ) 2, 4                ஈ) எதுவுமில்லை

44. கீழ்க்கண்டவற்றுள் எண் பேராயத்தில் இடம்பெறுவது எது?
அ) சடங்கு செய்விப்போர்    ஆ) ஒற்றர்        இ) யானை வீரர்     ஈ) அமைச்சர்

45. பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் “
இவ்வரிகளை இயற்றியவர் யார்?
அ) இளங்கோவடிகள்        ஆ) சீத்தலைச் சாத்தனார்     இ) கம்பர்    ஈ) கபிலர்

46. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ____ எனப்படும்.
அ) கல்வெட்டு        ஆ) சிலை செய்தல்    இ) அகழாய்வு செய்தல்     ஈ) சிலை செதுக்குதல்

47. ______ நகருக்கு அருகே கீழடி அமைந்துள்ளது.
அ) தஞ்சாவூர்        ஆ) வேலூர்        இ) திருநெல்வேலி        ஈ) மதுரை

48. “பட்டிமண்டபத்துப்பாங்கு அறிந்து ஏறுமின்” என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன
அ) சிலப்பதிகாரம்    ஆ) மணிமேகலை    இ) திருவாசகம்    ஈ) கம்பராமாயணம்

49. பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன
அ) சிலப்பதிகாரம்        ஆ) மணிமேகலை    இ) திருவாசகம்       ஈ) கம்பராமாயணம்

50. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
1. ஆறாம் வேற்றுமைத் தொகை
2. திசைப் பெயர்களின் பின்
3. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
4. உவமைத்தொகை
அ) அனைத்தும்    ஆ) 1, 2, 3        இ) 2, 3            ஈ) எதுவுமில்லை.

51.கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் சரியானது எது?
1. சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின்
2. தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின்
3. சில உருவகச் சொற்களில்
அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 3 சரி

52. ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்காத கண்ணே உனைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ ”
என்பது எவ்வகைப் பாட்டு
அ) நாட்டுப்புறப்பாட்டு     ஆ) செய்யுள்        இ) கவிதை        ஈ) இலக்கியம்

53.டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று எந்தெந்த மாவட்டங்கள் அறியப்படுகின்றன?
அ) கரூர், தஞ்சாவூர்                    ஆ) கரூர், பெரம்பலூர்        
இ) அரியலூர், பெரம்பலூர்                 ஈ) நாமக்கல் பெரம்பலூர்

54. உலகின் மிகப் பெரிய கல்மரப்படிமம் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
அ) கரூர், தஞ்சாவூர்                ஆ) கரூர், பெரம்பலூர்
இ) அரியலூர், பெரம்பலூர்             ஈ) நாமக்கல் பெரம்பலூர்

55.தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என கருதப்படுவது எது?
அ) ஜெர்சி    ஆ) காங்கேயம்     இ) சிந்து        ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
 

No comments:

Post a Comment