மேக்மீ மெடல் 
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 11 Test
 கேள்விகள் : 60                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________
9th- unit 2
1.“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று பாடியவர் யார்?அ) கம்பர் ஆ) சீத்தலை சாத்தனார் இ) இளங்கோவடிகள் ஈ) ஒளவையார்
2. உலக சுற்றுச்சூழல் நாள் ____.
அ) ஜூன் 6 ஆ) ஜூன் 5 இ) ஜூலை 5 ஈ) ஜூலை 6
3. கூற்று: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது.
காரணம்: சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கவும், வன விலங்குகளை பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம். ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு காரணம் சரி
4. “மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன “ என்று கூறியவர்
அ) திருவள்ளுவர் ஆ) சமண முனிவர்கள் இ) ஒளவையார் ஈ) மாங்குடி மருதனார்
5. ஏரியை கண்மாய் என்று அழைக்கும் நிலப்பகுதி எது?
அ) பாண்டி மண்டலம் ஆ) சோழ மண்டலம் இ) சேர மண்டலம்
6. மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.
அ) கண்மாய் ஆ) உறைக்கிணறு இ) ஊருணி ஈ) குளம்
7. மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை ______ எனப்படும்.
அ) கண்மாய் ஆ) உறைக்கிணறு இ) ஊருணி ஈ) குளம்
8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. கல்லணையின் நீளம் 1060 அடி ஆகும்.
2. கல்லணையின் அகலம் 40 முதல் 60 அடி.
3. இதன் உயரம் 15 முதல் 28 அடி ஆகும்.
4. தமிழகத்தின் விரிவான பாசனத் திட்டமாக கல்லணை உள்ளது.
அ) அனைத்தும் சரி ஆ) 2, 4 சரி இ) 1, 2, 4 சரி ஈ) 2, 3, 4 சரி
9. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ___
அ) அகநானூறு ஆ) புறப்பாட்டு இ) பரிபாடல் ஈ) இவற்றில் எதுவுமில்லை
10. நாட்டின் சிறந்த அரண்களுள் நீரே முதன்மையானது என்று கூறியவர்
அ) ஒளவையார் ஆ) கம்பர் இ) மாங்குடி மருதனார் ஈ) திருவள்ளுவர்
11. கல்லணையின் கட்டுமான உத்தியை கொண்டு கட்டப்பட்ட அணை எது?
அ) தெளலீஸ்வரம் – கோதாவரி ஆ) கிராண்ட் அணைக்கட்டு
இ) முல்லைப் பெரியாறு அணை ஈ) தெளலீஸ்வரம் – யமுனை
12. “நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்றவர்
அ) மாங்குடி மருதனார் ஆ) செந்நாப் போதார் இ) தொ. பரமசிவன் ஈ) முகிலன்
13. தமிழ்நாடு எந்த வகையான மண்டலத்தில் அமைந்துள்ளது?
அ) வெப்ப மண்டலம் ஆ) மிதவெப்பமண்டலம் இ) அயன மண்டலம் ஈ) குளிர் மண்டலம்
14. “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்று கூறியவர் யார்?
அ) தொ. பரமசிவன் ஆ) மாங்குடி மருதனார் இ) ஒளவையார் ஈ) ஆண்டாள்
15. தெய்வச் சிலைகளைக் குளிர்க்க வைப்பதை ___ என்று கூறுவர்.
அ) நீராட்டு ஆ) கடலாடுதல் இ) திருமஞ்சனம் ஆடல் ஈ) திருமஞ்சன நீராட்டு
16. தொ. பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.
1. குளித்தல் என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
2. குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று.
3. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார்.
4. நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறினார்.
அ) 2 மட்டும் சரி ஆ) 2, 4 சரி இ) 1, 2, 4 சரி ஈ) அனைத்தும் சரி
17. இந்திய நீர்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) ஆர்தர் வெல்லெஸ்லி ஆ) கரிகாலன் இ) ஆர்தர் காட்டன் ஈ) டல்ஹௌசி
18. காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்ட ஆண்டு
அ) 1829 ஆ) 1830 இ) 1929 ஈ) 1828
19. கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு
அ) 1870 ஆ) 1829 இ) 1875 ஈ) 1873
20. பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறியவர் யார்?
அ) ஆர்தர் காட்டன் ஆ) டல்ஹௌசி இ) ஆர்தர் வெல்லெஸ்லி ஈ) கரிகாலன்
21. முல்லைப் பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது.
1. திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை 2. திண்டுக்கல், தேனி, மதுரை
3. சிவகங்கை, இராமநாதபுரம் 4. சிவகங்கை, கன்னியாகுமரி
அ) 1, 3 ஆ) 2, 3 இ) 2, 4 ஈ) 1, 4
22. சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) கண்மாய் ஆ) குண்டம் இ) கேணி ஈ) அருவி
23. கமலை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கட்டுக்கிணறு ஆ) உறைக்கிணறு இ) ஆழிக்கிணறு ஈ) பூட்டைக்கிணறு
24. கூவல் என்பது ___
அ) உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ஆ) அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
இ) பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் ஈ) அடியிலிருந்து நீர் ஊறுவது
25. அடி நிலத்து நீர், நீர் மட்டத்திற்குக் கொப்புளித்து வரும் உற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) ஊற்று ஆ) குண்டு இ) குமிழி ஊற்று ஈ) இலஞ்சி
26. கீழ்க்கண்டவற்றுள் வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம் எது?
அ) குளம் ஆ) ஏரி இ) கேணி ஈ) கட்டுக்கிணறு
27. கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) ஆழிக்கிணறு ஆ) அகழி இ) சிறை ஈ) புனர்குளம்
28. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
அ) அருவி – மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது.
ஆ) ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இ) குண்டு – தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
ஈ) ஆறு -பெருகி ஓடும் நதி
29. கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் வாழ்ந்த காலம்
அ) 1924-1956 ஆ) 1924-1965 இ) 1923- 1956 ஈ) 1923- 1965
30. கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் எவை?
1. நிலைபெற்ற சிலை 2. வீராயி 3. மாதவி காவியம்
4. தமிழர் சமுதாயம் 5. கண்ணப்பன் கிளிகள்
அ) அனைத்தும் சரி ஆ) 1, 2, 5 இ) 1, 2, 3, 5 ஈ) 1, 2, 4
31. கவிஞர் தமிழ்ஒளி குறித்த கூற்றுகளுள் எது தவறானது?
1. இவர் புதுவையில் பிறந்தவர்.
2. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதியாரின் மாணவராகவும் விளங்கியவர்.
3. மே தினமே வருக, குருவிப் பட்டி, கவிஞனின் காதல் முதலானவை இவரின் படைப்புகள் ஆகும்.
அ) 1, 2 ஆ) 2 மட்டும் இ) 3 மட்டும் ஈ) எதுவுமில்லை.
32. காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன்
ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே! “ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) வீராயி ஆ) மாதவி காவியம்
இ) தமிழர் சமுதாயம் ஈ) தமிழ்ஒளியின் கவிதைகள்
33. குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்த இலை!
வெந்து கருகிட இந்த நிறம்வரவெம்பிக் குமைந்தனையோ? என்னும் வரிகளை இயற்றியவர் யார்?
அ) சுரதா ஆ) தமிழ்ஒளி இ) பாரதிதாசன் ஈ) பாரதி
34.காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிப்பது எந்நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) பெரிய புராணம் ஈ) வளையாபதி
35. பொருத்துக.
1. நாளிகேரம் – i) தென்னை
2. கோளி – ii) அரசமரம்
3. சாலம் – iii) ஆச்சாமரம்
4. தமாலம் – iv) பச்சிலை மரங்கள்
அ) i ii iii iv ஆ) iii ii i iv இ) iv iii ii I ஈ) iii ii iv i
36. பொருத்துக
1. இரும்போந்து – i) பருத்த பனைமரம்
2. சந்து – ii) சந்தன மரம்
3. நாகம் – iii) நாகமரம்
4. காஞ்சி – iv) ஆற்றுப்பூவரசு
அ) i ii iii iv ஆ) iii ii i iv இ) iv iii ii I ஈ) iii ii iv i
37. “காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக் கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை”
– இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) பெரிய புராணம்
38. இலக்கணக் குறிப்புத் தருக. கருங்குவளை, செந்நெல்
அ) பண்புத்தொகைகள் ஆ) வினைத் தொகை இ) உரிச்சொல்தொடர்
39. இலக்கணக் குறிப்புத் தருக – விரிமலர்
அ) பண்புத்தொகைகள் ஆ) வினைத் தொகை இ) உரிச்சொல்தொடர்
40. இலக்கணக் குறிப்புத் தருக – தடவரை-
அ) பண்புத்தொகைகள் ஆ) வினைத் தொகை இ) உரிச்சொல்தொடர்
41. திருத்தொண்டத் தொகை என்னும் நூலை இயற்றியவர் யார்?
அ) சேக்கிழார் ஆ) சுந்தரர் இ) நம்பியாண்டார் நம்பி ஈ) நாவுக்கரசர்
42. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
அ) சேக்கிழார் ஆ) சுந்தரர் இ) நம்பியாண்டார் நம்பி ஈ) நாவுக்கரசர்
43. திருத்தொண்டர் புராணம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
அ) சேக்கிழார் ஆ) சுந்தரர் இ) நம்பியாண்டார் நம்பி ஈ) நாவுக்கரசர்
44. கூற்று: திருத்தொண்டர் புராணம், பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது.
காரணம்: இந்நூலின் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் இரண்டும் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம்
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
45.பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் எந்நூற்றாண்டை சார்ந்தவர்?
அ) கி. பி 11 ஆ) கி. பி 12 இ) கி. மு 11 ஈ) கி. மு 12
46. சேக்கிழார் எந்த சோழ அரசரின் அவையில் முதலமைச்சராக இருந்தார்?
அ) முதலாம் குலோத்துங்கன் ஆ) இரண்டாம் குலோத்துங்கன்
இ) இராஜராஜ சோழன் ஈ) இராசேந்திர சோழன்
47. “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று சேக்கிழாரை பாரட்டியவர் யார்?
அ) கம்பர் ஆ) பாரதியார் இ) மீனாட்சி சுந்தரனார் ஈ) திரு. வி. க
48. நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! “
என்று கூறியவர் யார்?
அ) குட புலவியனார் ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன் இ) கபிலர் ஈ) திருமூலர்
49.வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது ______ திணை.
அ) பாடாண் ஆ) பொதுவியல் இ) கைக்கிளை ஈ) பெருந்திணை
50. சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது _____ துறை.
அ) இயன் மொழித் துறை ஆ) பொதுவியல் துறை
இ) பொருண்மொழிக் காஞ்சித் துறை ஈ) பாடாண் துறை
51. சரியான பொருளை தேர்ந்தெடு -யாக்கை, புன்புலம்
அ) நிலம், புல்லிய நிலம் ஆ) உடம்பு, புல்லிய நிலம்
இ) உடம்பு, உலகம் ஈ) உலகம், உடம்பு
52. சரியான பொருளை தேர்ந்தெடு--புணரியோர், தாட்கு
அ) தந்தவர், முயற்சி ஆ) உதவி, ஆளுமை இ) பெற்றவர், ஆளுமை ஈ) உதவி, முயற்சி
53. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”
என்று கூறும் நூல்
அ) அகநானூறு ஆ) புறநானூறு இ) நற்றிணை ஈ) குறுந்தொகை
54. நாகலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?
அ) முடியரசன ஆ) சிற்பி இ) கந்தர்வன் ஈ) தமிழ்ஒளி
55.கவிஞர் கந்தர்வன் குறித்த கூற்றுகளுள் எது சரியானது?
1. இவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவர்.
2. தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றியவர்.
3. கவிதை, சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார்.
அ) அனைத்தும் சரி ஆ) 1, 2 சரி இ) 1, 3 சரி ஈ) 2, 3 சரி
56.கீழ்க்கண்டவற்றுள் கந்தர்வனின் படைப்புகள் எது?
1. சாசனம் 2. ஒவ்வொரு கல்லாய் 3. கொம்பன் 4. தண்ணீர்
அ) அனைத்தும் சரி ஆ) 1, 2 சரி இ) 1, 3 சரி ஈ) 2, 3 சரி
57. “தந்தியடி, ஆணையிடு, கேள்விப்படு” ஆகியவை எவ்வகை கூட்டு வினைகள்
அ) பெயர் + வினை = வினை ஆ) வினை + வினை = வினை
இ) இடை + வினை = வினை ஈ) இடை + இடை = வினை
58. “கண்டுபிடி, சுட்டிக்காட்டு, சொல்லிக்கொடு” ஆகியவை எவ்வகை கூட்டு வினைகள்
அ) பெயர் + வினை = வினை ஆ) வினை + வினை = வினை
இ) இடை + வினை = வினை ஈ) இடை + இடை = வினை
59. மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அ) கீழே ஆ) மேலே இ) இசை ஈ) வசை
60. சரியான இணையைத் தேர்ந்தெடு
1. தண்ணீர் தண்ணீர் – வைரமுத்து
2. தண்ணீர் தேசம் – கோமல் சுவாமிநாதன்
அ) அனைத்தும் சரி ஆ) 1 மட்டும் சரி இ) 2 மட்டும் சரி ஈ) இரண்டும் தவறு.
 

 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment