LATEST

Monday, February 26, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 10 Test - 9th std Tamil Unit 1

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 10 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________
 

9th std - 1

1. சரியான இணையைத் தேர்ந்தெடு
அ) நால் – தெலுங்கு        ஆ) நாலுகு – கன்னடம்
இ) நாலு – கன்னடம்         ஈ) நாங்கு – தெலுங்கு

2. சரியான இணையைத் தேர்ந்தெடு
அ) அஞ்சு – தமிழ்        ஆ) ஐனு – துளு        இ) ஐது – கூர்க்        ஈ) ஐந்து – கன்னடம்

3. “காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ”
இவ்வரிகளை இயற்றியவர் யார்?
அ) தமிழ் ஒளி     ஆ) ஈரோடு தமிழன்பன்     இ) தாராபாரதி        ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

4. “மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட. . . “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) திருவள்ளுவமாலை        ஆ) தமிழோவியம்         இ) பிங்கல நிகண்டு        ஈ) நன்னூல்

5. இலக்கணக் குறிப்புத் தருக.
எத்தனை எத்தனை, விட்டு விட்டு
அ) இரட்டைக் கிளவிகள்    ஆ) வினைத் தொகைகள்    இ) அடுக்குத் தொடர்கள்     ஈ) வினையெச்சம்

6. இலக்கணக் குறிப்புத் தருக – ஏந்தி
அ) வினைத்தொகை        ஆ) வினையாலணையும் பெயர்    இ) வினைமுற்று    ஈ) வினையெச்சம்

7. இலக்கணக் குறிப்புத் தருக – காலமும்
அ) எண்ணும்மை        ஆ) முற்றும்மை        இ) வினைத்தொகை        ஈ) வினைமுற்று

8. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வளர்ப்பாய்
அ) வளர்ப்பு + ஆய்        ஆ) வளர் + பு + ஆய்    இ) வளர் + ப் + ப் + ஆய்         ஈ) வளர்ப்பு + ப் + ப் + ஆய்

9. "வளர் + ப் + ப் + ஆய்" இதில் ‘ஆய்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
அ) முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி        ஆ) முன்னிலை பன்மை வினை முற்று விகுதி
இ) ஏவல் ஒருமை வினை முற்று விகுதி            ஈ) ஏவல் பன்மை வினை முற்று விகுதி

10. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்! ” என்ற முன்னுறையை கொண்ட நூல் எது?
அ) வணக்கம் வள்ளுவ        ஆ) தமிழன்பன் கவிதைகள்    இ) தமிழோவியம்     ஈ) தமிழர் வரலாறு

11. “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி” என்று கூறியவர்
அ) ஹீராஸ் பாதிரியார்        ஆ) குமரில பட்டர்        இ) கால்டுவெல்         ஈ) ஜி. யு. போப்

12. சொற்களின் இன்றியமையாப் பகுதி ____ எனப்படும்.
அ) வேர்ச்சொல், அடிச் சொல்             ஆ) அடிச்சொல், வினைச்சொல்
இ) வேர்ச்சொல், வினைச்சொல்        ஈ) வேர்ச்சொல், பெயர்ச்சொல்

13. திராவிட மொழிகளின் சொற்கள் பொதுவான _____ஐ கொண்டிருக்கின்றன.
அ) பெயர்ச்சொல்    ஆ) வினைச்சொல்        இ) அடிச்சொல்         ஈ) இடைச்சொல்

14. ” கெண் ” என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?
அ) தோடா        ஆ) குருக்        இ) பர்ஜி         ஈ) குடகு

15. கீழ்க்கண்ட அடிச்சொற்களை ஆராய்க.
1. கொண் -தோடா
2. ஃகன் – பர்ஜி
3. கெண் – குரூக்
4. கன்னு – தெலுங்கு
5. கண்ணு – குடகு
அ) 4, 5 சரி        ஆ) 3, 5 சரி        இ) 1, 4 சரி             ஈ) அனைத்தும் சரி

16. திராவிட மொழிகளின் எண்ணிக்கை _____
அ) 24        ஆ) 28         இ) 27        ஈ) 20

17. கீழ்க்கண்டவற்றில் நடுத்திராவிட மொழி அல்லாதது எது?
அ) கன்னடம்         ஆ) தெலுங்கு        இ) பர்ஜி        ஈ) பெங்கோ

18. கீழ்க்கண்டவற்றுள் அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை?
1. எருகலா     2. தங்கா     3. கதபா     4. குறும்பா     5. சோழிகா
அ) அனைத்தும்        ஆ) 1, 2, 3, 4        இ) 2, 3, 4, 5        ஈ) 1, 2, 4, 5

19. கீழ்க்கண்டவற்றுள் வட திராவிட மொழிகள் எவை?
1. குரூக் 2. மால்தோ 3. பிராகுய் 4. தோடா 5. நாய்க்கி
அ) அனைத்தும்        ஆ) 1, 2, 4, 5        இ) 1, 2, 3         ஈ) 1, 2, 4

20. பொருத்துக
எண்ணுப் பெயர்கள் திராவிட மொழிகள்
1. மூஜி – i) மலையாளம்
2. மூரு – ii) கன்னடம்
3. மூன்று – iii) தெலுங்கு
4. மூணு – iv) தமிழ்
5. மூடு – v) துளு
அ) ii v iv i iii        ஆ) ii v iv iii I        இ) v ii iv i iii        ஈ) v ii I iv iii

21. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி ___.
அ) இலக்கணம்            ஆ) மொழி         இ) நூல்கள்        ஈ) கல்வெட்டுகள்

22. மனிதன் தம் எண்ணங்களை கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு வெளிப்டுத்தினான்?
1. மெய்ப்பாடுகள்     2. சைகைகள்     3. ஒலிகள்        4. ஓவியங்கள்
அ) அனைத்தும்            ஆ) 1, 2, 3            இ) 2, 3, 4        ஈ) 1, 3, 4

23. வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டியவை எவை?
அ) இட அமைப்பும், இயற்கை அமைப்பும்        ஆ) இட அமைப்பும், காலநிலையும்
இ) பருப்பொருள்களும், காலநிலையும்            ஈ) நுண்பொருள்களும், காலநிலையும்

24. உலக மொழிகள் அனைத்தும் எதனடிப்படையில் மொழிக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. பிறப்பு         2. தொடர்பு         3. அமைப்பு         4. உறவு
அ) அனைத்தும்         ஆ) 1, 2, 3        இ) 2, 3, 4        ஈ) 1, 3, 4

25. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை _____
அ) 1500        ஆ) 1200        இ) 1400        ஈ) 1300

26. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை மொழிக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
அ) 3        ஆ) 4         இ) 5

27. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்கள் எவை?
1. இந்தோ – ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
4. சீன – திபெத்திய மொழிகள்
அ) அனைத்தும்         ஆ) 1, 2, 3        இ) 2, 3, 4        ஈ) 1, 3, 4

28. “இந்தியநாடு மொழிகளின் காட்சி சாலையாகத் திகழ்கிறது” என்றவர்
அ) ஹீராஸ் பாதிரியார்        ஆ) ச. அகத்தியலிங்கம்         இ) கால்டுவெல்    ஈ) குமரில்பட்டர்

29. திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
அ) குமரில பட்டர்         ஆ) கால்டுவெல்        இ) ஜி. யு. போப்        ஈ) உ. வே. சா

30. திராவிட என்ற சொல்லின் பிறப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த வரிசை சரியானது?
அ) தமிழ் -> தமிழா ->தமிலா -> ட்ரமிலா -> டிரமிலா ->த்ராவிடா -> திராவிடா
ஆ) தமிழ் -> தமிலா -> தமிழா -> ட்ரமிலா -> டிரமிலா -> த்ராவிடா -> திராவிடா
இ) தமிழ் -> தமிலா -> தமிழா -> டிரமிலா -> ட்ரமிலா -> த்ராவிடா -> திராவிடா
ஈ) தமிழ் -> தமிழா -> தமிலா -> டிரமிலா -> ட்ரமிலா -> த்ராவிடா -> திராவிடா

31. வட மொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதலில் குறிப்பிட்டவர் யார்?
அ) பாப்        ஆ) ராஸ்க்        இ) கிரிம்        ஈ) வில்லியம் ஜோன்ஸ்
32. 1816ல் மொழி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?
அ) பாப், ரஸ்க், கிரிம்         ஆ) போப், ரஸ்க், கிரிம்        இ) போப், ரஸ்க், ஜோன்ஸ்

33. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தனவ என கூறியவர் வில்லியம் ஜோன்ஸ்.
2. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வட மொழி என்று கூறியவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
3. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
4. மால்தோ, தோடா, கோண்டி முதலியவற்றையும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றையும் இணைத்து தமிழியன் என பெயரிட்டவர் ஹோக்கன்.
அ) அனைத்தும் சரி        ஆ) 3, 4 சரி         இ) 4 மட்டும் சரி        ஈ) அனைத்தும் தவறு

34. ” திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல் யாருடையது?       
அ) ஜி. யு. போப்        ஆ) கால்டுவெல்         இ) வீரமாமுனிவர்        ஈ) ஹீராஸ் பாதிரியார்

35. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளின் எண்ணிக்கை
அ) 3        ஆ) 2        இ) 5        ஈ) 4

36. “தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிக்கும் தொடர்பு இருக்கலாம்” என்றவர்
அ) கமிலசுவலபில்        ஆ) கால்டுவெல்     இ) எமினோ            ஈ) வில்லியம் ஜோன்ஸ்

37. கீழ்க்கண்டவற்றுள் தென் திராவிட மொழி அல்லாதது எது?
அ) இருளா        ஆ) மலையாளம்        இ) தெலுங்கு         ஈ) கன்னடம்

38. சங்க இலக்கியங்கள் எந்நூற்றாண்டை சேர்ந்தவை?
அ) பொ. ஆ. மு 5 – பொ. ஆ. பி 2            ஆ) பொ. ஆ. மு. 3 – பொ. ஆ. பி 2
இ) பொ. ஆ. பி. 9                ஈ) பொ. ஆ. பி 11

39. பொருத்துக
நூல் – நூற்றாண்டு
1. தொல்காப்பியம் – i) பொ. ஆ மு. 3
2. கவிராஜ மார்க்கம் – ii) பொ. ஆ. பி 9
3. பாரதம் – iii) பொ. ஆ. பி 11.
4. லீலா திலகம் – iv) பொ. ஆ. பி 15
அ) i ii iii iv        ஆ) ii iii iv I        இ) iii ii i iv        ஈ) iv iii ii i

40. கீழ்க்கண்ட நூல்கள் எந்நூற்றாண்டை சேர்ந்தவை?
ஆந்திர பாஷா பூஷணம், ராமசரிதம்
அ) பொ. ஆ. மு 5 – பொ. ஆ. பி 2        ஆ) பொ. ஆ. மு. 3        இ) பொ. ஆ. பி. 9    ஈ) பொ. ஆ. பி 12

41. “கவிராஜ மார்க்கம், பாரதம்” ஆகியவை முறையே எம்மொழி நூல்கள்
அ) தமிழ், வடமொழி        ஆ) வடமொழி, தமிழ்    இ) கன்னடம், தெலுங்கு     ஈ) தெலுங்கு, கன்னடம்

42. “ஆந்திர பாஷா பூஷணம், ராமசரிதம்” ஆகியவை முறையே எம்மொழி நூல்கள்
அ) தமிழ், வடமொழி        ஆ) வடமொழி, தமிழ்    இ) கன்னடம், தெலுங்கு    ஈ) தெலுங்கு, மலையாளம்

43. “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற நூலிற்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?
அ) மு. வ         ஆ) செ. வை. சண்முகம்        இ) கல்கி        ஈ) திரு. வி. க

44. “இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம்” என்ற நூல் யாருடையது?
அ) மு. வ        ஆ) செ. வை. சண்முகம்         இ) கல்கி        ஈ) திரு. வி. க

45. சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. இலக்கியங்கள் – கவிராஜ மார்க்கம், பாரதம், ராமசரிதம்
2. இலக்கணங்கள் – கவிராஜ மார்க்கம், ஆந்திர பாஷா பூஷணம் லீலா திலகம்
அ) அனைத்தும் சரி         ஆ) 1 மட்டும் சரி        இ) 2 மட்டும் சரி        ஈ) இரண்டும் தவறு

46. ‘ மரம்’ என்ற தமிழ்ச் சொல் தெலுங்கு, கூர்க் ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) மர, மானு        ஆ) மானு, மர         இ) மானு, மரம்        ஈ) மரம், மர

47. ‘ஒன்று‘ என்ற தமிழ்ச் சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) ஒகடி, ஒந்து        ஆ) ஒந்து, ஒகடி        இ) ஒந்து, ஒஞ்சி         ஈ) ஒஞ்சி, ஒந்து

48. ‘நூறு‘ என்ற தமிழ்ச் சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) நூறு, நூரு        ஆ) நூரு, நூறு        இ) நூறு, நூது        ஈ) நூரு, நூது

49. தவறான இணையைத் தேர்ந்தெடு.
அ) நீ – தமிழ், மலையாளம்        ஆ) நீவு – தெலுங்கு    இ) நீன் – கூர்க்         ஈ) ஈ – துளு

50. தவறான இணையை தேர்ந்தெடு.
அ) இரண்டு – தமிழ்        ஆ) ஈர்ரெண்டு – மலையாளம், தெலுங்கு
இ) எரடு – கன்னடம்        ஈ) ரட்டு – கூர்க்



No comments:

Post a Comment