LATEST

Monday, February 19, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 3 Test - 6th std Tamil Unit 7, 8, 9

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 3 Test
 
 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________
 
6ஆம் வகுப்பு  தமிழ் இயல் 7, 8, 9


1. தவறானதைத் தேர்ந்தெடு?
A. வேலு நாச்சியாரின் கணவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்
B. முத்து வடுகநாதர் வீர மரணம் அடைந்த இடம் சிவகங்கை
C. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்
D. வேலுநாச்சியாரின் அமைச்சர் தாண்டவராயர் மற்றும் வேலு நாச்சியாரின் தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது

 
2. "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று காந்தியடிகள் யாரைக் குறிப்பிடுகிறார்?
A. உ.வே. சா                B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
C. பாரதியார்                D. பாரதிதாசன்

 
3. தேசிய விநாயகனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A. 19        B. 20        C. 18            D. 17

 
4. அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்கு தொண்டு செய்ய வேண்டும் எனக் கூறியவர் யார்?
A. தாயுமானவர்        B. வள்ளலார்        C. பாரதியார்        D. தாராபாரதி

 
5. தாயுமானவர் திருச்சி ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் _______ ஆகப் பணிபுரிந்தவர்?
A. மருத்துவர்        B. ஆசிரியர்        C. தலைமை கணக்கர்        D. ஏதுமில்லை

 
6. பொருத்துக:
1. பெயர்ச்சொல் --- விளையாடு
2. வினைச்சொல் --- மாநகரம்
3. இடைச்சொல் --- கண்
4. உரிச்சொல் --- தந்தையும் தாயும்        
A. 3 1 4 2        B. 4 3 2 1        C.1 2 3 4                D. 3 2 4 1

 
7. எங்கு சத்திய தருமச்சாலையை வள்ளலார் தொடங்கினார்?
A. கடலூர்        B. மருதூர்        C. வடலூர்        D. கன்னியாகுமரி

 
8. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?
A. கோவை        B. மதுரை        C. தஞ்சாவூர்        D. சிதம்பரம்

 
9. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்தி கூறுவது?
A. பெயர்ச்சொல்        B. வினைச்சொல்        C. இடைச்சொல்        D. உரிச்சொல்

 
10. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?
A. சோகம்        B. துன்பம்        C. சுறுசுறுப்பு        D. அழிவு

 
11. கண்ணி என்பது ______ அடிகளில் பாடப்படும் பாடல்வகை?
A. மூன்று        B. இரண்டு        C. நான்கு        D. ஆறு

 
12. பொருந்தாததைத் தேர்ந்தெடு: கலீல் கிப்ரான்
A. புதின ஆசிரியர்        B. கவிஞர்        C. ஆசிரியர்        D. ஓவியர்

 
13. ஆதிரை எந்த ஊரைச் சேர்ந்தவர்?
A. ஈரோடு        B. பூம்புகார்        C. தஞ்சாவூர்        D. கன்னியாகுமரி

 
14. கீழ்க்கண்டவற்றில் காரணப் பெயரைத் தேர்ந்தெடு?
A. மரம்        B. வளையல்    C. சுவர்            D. யானை

 
15. ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?        
A. ஆசிய ஜோதி                B. பராபரக்கண்ணி    
C. நீங்கள் நல்லவர்            D. பாரதம் அன்றைய நாற்றங்கால்

 
16. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. இன்உயிர்        B. இனியஉயிர்        C. இன்னுயிர்        D. இனிமைஉயிர்

 
17. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்?
A. அருள் ஜோதி        B. ஆசிய ஜோதி        C. நவஜோதி        D. ஜீவன் ஜோதி

 
18. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" - என்றவர்?
A. வள்ளலார்    B. கைலாஷ் சத்யார்த்தி        C. தாராபாரதி        D. அன்னை தெரசா

 
19. பொருந்தாததைத் தேர்ந்தெடு: (சொல் வகைகள்)
A. மாநாடு        B. ஐ        C. உம்            D. மற்று

 
20. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் என்று கூறியவர்?
A. ஆதிரை        B. மணிமேகலை        C. தீவத்திலகை        D. வள்ளலார்

 
21. உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர்?
A. வள்ளலார்        B. அன்னை தெரசா        C. கைலாஷ் சத்யார்த்தி            D. பாரதியார்

 
22. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபிப் பாத்திரம் தோன்றும் நாள் எது?
A. சித்திரை திங்கள் முழுநாள்            B. வைகாசித் திங்கள் முழு நாள்
C. புரட்டாசித் திங்கள் முழு நாள்        D. ஐப்பசித் திங்கள் முழு நாள்

 
23. "உறுதியாக கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர்" - என்றவர்?
A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்    B. முடியரசன்    C. கலீல் கிப்ரான்    D. தாராபாரதி

 
24. இடைச்சொல் எதனைச் சார்ந்து வரும்?
A. பெயர்ச்சொல்லை சார்ந்து வரும்                    B. வினைச் சொல்லைச் சார்ந்து வரும்
C. பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும்        D. ஏதுமில்லை

 
25. கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன?
A. கண்        B. வயிறு        C. தலை        D. காது

 
26. ஆசிய ஜோதியின் பாட்டுடைத் தலைவர்?
A. ஆட்டுக்குட்டி        B. எறும்பு        C. புத்தர்        D. மன்னர்

 
27. " பாதம் " என்ற கதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
A. கதாவிலாசம்                    B. புதிய விடியல்கள்
C. தாவரங்களின் உரையாடல்            D. புதியதொரு விதி செய்வோம்

 
28. தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை - என்றவர்?
A. வாணிதாசன்        B. காசி ஆனந்தன்        C. தாராபாரதி        D. அறிவுமதி

 
29. பொருத்துக:
1. வள்ளலார் --- நோயாளிகளிடம் அன்பு கட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி --- பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெரசா --- குழந்தைகள் உரிமைக்கு பாடுபட்டவர்
A. 3 1 2            B. 2 3 1        C. 1 2 3                D. 3 2 1

 
30. தாராபாரதி எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. புதிய விடியல்கள்                B. இது எங்கள் கிழக்கு    
C. விரல்நுனி வெளிச்சங்கள்            D. உபபாண்டவம்

 
31. மலை + எலாம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
A. மலையெல்லாம்    B. மலைஎலாம்        C. மலையெலாம்        D. மலைஎல்லாம்

 
32. வேலு நாச்சியாரின் காலம்?
A. 1740 – 1796            B. 1730 – 1796        C. 1750 – 1796        D. 1766 – 1796    
33. பூமியின் கிழக்கு வாசலாக திகழ்வது எது?
A. இந்திய நாடு        B. சோழ நாடு        C. பாண்டிய நாடு        D. தமிழ்நாடு
34. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்?
A. குழந்தைகளை பாதுகாப்போம்            B. குழந்தைகளை நேசிப்போம்
C. குழந்தைகளை வளர்ப்போம்                D. குழந்தைகள் உதவி மையம்

 
35. தாராபாரதி இயற்பெயர் என்ன?
A. துரை மாணிக்கம்                B. கனகசுப்புரத்தினம்
C. இராதாகிருஷ்ணன்                D. ராமகிருஷ்ணன்

 
36. பொருத்துக:
1. இலக்கிய மாநாடு --- பாரதியார்
2. தமிழ்நாட்டு கவிஞர் --- சென்னை
3. குற்றாலம் --- ஜி.யு. போப்
4. தமிழ்க் கையேடு --- அருவி
A. 2 1 3 4            B. 1 2 3 4            C. 2 1 4 3            D. 4 3 2 1

 
37. பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்?
A. நான்கு            B. ஐந்து        C. ஆறு        D. ஏழு

 
38. மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண்?
A. சித்திரை            B. ஆதிரை        C. காயசண்டிகை        D. தீவதிலகை

 
39. கலீல் ஜிப்ரான் கவிதைகளைத் "தீர்க்கதரிசி" என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர்?
A. புவியரசு        B. கவியரசு        C. தாயுமானவர்        D. தாராபாரதி

 
40. "தமிழ்மொழியின் உபநிடதம்" என்று போற்றப்படும் நூல் எது?
A. தாயுமானவர் பாடல்கள்            B. பாரதிதாசனின் கவிதைகள்
C. புதியதொரு விதி செய்வோம்            D. பாரதியார் கவிதைகள்

 
41. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
A. ஒன்று            B. இரண்டு        C. மூன்று            D. நான்கு

 
42. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?
A. 1730        B. 1780        C. 1790            D. 1796

 
43. காந்தி அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
A. குஜராத்        B. தென்னாப்பிரிக்கா        C. மதுரை        D. இங்கிலாந்து

 
44. கவி ஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்?
A. தேவநேயப் பாவாணர்    B. தாராபாரதி    C. கலீல் கிப்ரான்        D. தாயுமானவர்

 
45. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்?
A. திருவாசகம்        B. திருக்குறள்        C. திரிகடுகம்        D. திருப்பாவை

 
46. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1: 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் முதன்முறையாக சென்னைக்கு வந்தார்
கூற்று 2:1937 இல் சென்னை இலக்கிய மாநாடு நடைபெற்றபோது, அம்மாநாட்டுக்குக் தலைமை வகித்தவர் காந்தியடிகள்
கூற்று 3: பாரதியாரை இந்திய நாட்டின் சொத்து என்றவர் இராஜாஜி, பாரதியாரை தமிழ் நாட்டின் சொத்து என்றவர் காந்தியடிகள்
A. அனைத்தும் சரி                B. கூற்று 1 2 சரி, கூற்று 3 தவறு    
C. அனைத்தும் தவறு                D. கூற்று 1 சரி, கூற்று 2 3 தவறு

 
47. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?
கூற்று 1: இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்
கூற்று 2: வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், உருது
கூற்று 3: வேலுநாச்சியாரின் அமைச்சர் சின்ன மருது
A. அனைத்தும் சரி                B. கூற்று 1 மட்டும் சரி    
C. கூற்று 2 மற்றும் 3 சரி                D. அனைத்தும் தவறு

 
48. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?
கூற்று 1: கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகளை பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கினார்
கூற்று 2: அந்த இயக்கத்தின் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் 80,000 குழந்தை தொழிலாளர்களை மீட்டு உள்ளார்
கூற்று 3: உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 86,000 கி.மீ தூரம் நடை பயணம் சென்றுள்ளார்
A. அனைத்தும் சரி                    B. கூற்று 1 சரி, கூற்று 2 3 தவறு
C. கூற்று 1 2 சரி, கூற்று 3 தவறு                D. அனைத்தும் தவறு

 
49. பொருத்துக:
1. மெய்யுணர்வு --- Junior Red Cross
2. சாரண சாரணியர் --- Mercy
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் --- Art Gallery
4. கருணை --- Scouts & Guides
5. கலைக்கூடம் --- Knowledge of Reality
A. 5 4 3 2 1        B. 5 4 1 2 3        C. 4 3 2 1 5        D. 3 1 2 4 5

 
50. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?
கூற்று 1: கவிமணி தேசிக விநாயகனார் முப்பத்தாறு ஆண்டுகள் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்
கூற்று 2: ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் லிலியன் வாட்சன் என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது    
A. அனைத்தும் சரி                B. கூற்று 1 மட்டும் சரி    
C. கூற்று 2 மட்டும் சரி                D. அனைத்தும் தவறு

 
51. வேலுநாச்சியாருக்கு ஐயாயிரம் குதிரை படை வீரர்களை அனுப்பி வைத்தவர் யார்?
A. கோபால நாயக்கர்    B. ஹைதர் அலி    C. தாண்டவராயர்        D. திப்பு சுல்தான்

 
52. உள்ளத்தில் _______ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்?
A. மகிழ்ச்சி        B. மன்னிப்பு        C. துணிவு        D. குற்றம்

 
53. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A. லெபனான்        B. ஆஸ்திரேலியா        C. ஆப்பிரிக்கா        D. ஜப்பான்

 
54. எஸ். இராமகிருஷ்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. உப பாண்டவம்                B. தேசாந்திரி        
C. இது எங்கள் கிழக்கு                D. கால் முளைத்த கதைகள்

 
55. கலைக்கூடமாக காட்சி தருவது?
A. சிற்பக்கூடம்        B. ஓவியக் கூடம்    C. பள்ளிக்கூடம்        D. சிறைக்கூடம்

 
56. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்?
A. மனித வாழ்க்கை        B. மனித உரிமை    C. மனிதநேயம்    D. மனித உடைமை

 
57. குளிர் நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேலே கருக்குமென்று - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி என்ன?
A. வஞ்சப்புகழ்ச்சி அணி                B. இயல்பு நவிற்சி அணி
C. உவமை அணி                    D. உயர்வு நவிற்சி அணி

 
58. வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவருக்கும் எளிதாகும் வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A. ஆசிய ஜோதி                B. விரல்நுனி வெளிச்சங்கள்
C. இது எங்கள் கிழக்கு            D. கதாவிலாசம்

 
59. தவறானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் உயர்வு நவிற்சி அணி
கூற்று 2: அணி என்பதன் பொருள் அழகு
A. அனைத்தும் சரி                    B. கூற்று 1 மட்டும் தவறு
C. கூற்று 2 மட்டும் தவறு                D. அனைத்தும் தவறு

 
60. ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
A. 1920            B. 1921            C. 1919            D. 1914

 
61. ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைப் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற இடம்?
A. காந்தியடிகளின் வீட்டில்            B. பாரதியாரின் வீட்டில்
C. இராஜாஜியின் வீட்டில்            D. பெரியாரின் வீட்டில்


62. அன்னை தெரசாவை அடுத்து நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
A. கைலாஷ் சத்யார்த்தி        B. பாரதியார்        C. காமராசர்        D. பெரியார்

 
63. குற்றால அருவி உள்ள மாவட்டம்?
A. திருநெல்வேலி        B. தூத்துக்குடி        C. கன்னியாகுமரி        D. விருதுநகர்

 
64. மணிமேகலையின் பெற்றோர்?
A. கோவலன் – கண்ணகி                    B. கோவலன் - மாதவி
C. சின்னச்சாமி ஐயர் - இலக்குமி அம்மாள்            D.ஏதுமில்லை

 
65.  காந்தியடிகள் புகைவண்டியில் மதுரைக்குச் சென்ற ஆண்டு?    
A. 1921 செப்டம்பர்        B. 1921 அக்டோபர்        C. 1921 நவம்பர்        D. 1921 டிசம்பர்

 
66. மகன் ஹிதேந்திரன் இதயத்தை தானமாக வழங்கியவர்கள்?
A. அசோகன் – புஷ்பாஞ்சலி            B. கோவலன் - கண்ணகி
C. கருப்பசாமி – வள்ளியம்மாள்            D. சின்னசாமி ஐயர் - இலக்குமி அம்மாள்

 
67. "தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையா இருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A. நீங்கள் நல்லவர்        B. பராபரக்கண்ணி        
C. ஆசிய ஜோதி            D. பாரதம் அன்றைய நாற்றங்கால்

 
68.  வாழ்வில் உயர கடினமாக ----------- வேண்டும்?
A. பேச        B. சிரிக்க        C. நடக்க        D. உழைக்க

 
69. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு ---------- ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன?
A. காவிரி        B. யமுனை        C. கங்கை        D. நர்மதை

 
70. பொருத்துக:
1. தேசம் --- குளிர்ந்த கருணை
2. தண்டருள் --- கிடைக்கும்
3. எய்தும் --- பூமி
4. பூதலம் --- நாடு
A. 4 3 2 1            B. 1 2 3 4        C.4 1 2 3        D. 3 4 1 2

 
71. ஏழைகளுக்கு உதவி செய்வதே _______ ஆகும்?
A. பகை        B. ஈகை        C. வறுமை        D.கொடுமை

 
72. அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக - என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A. புதியதொரு விதி செய்வோம்            B. தாராபாரதியின் கவிதைகள்
C. தாவரங்களின் உரையாடல்            D. தாயுமானவர் பாடல்கள்

 
73. "வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப்போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்கு சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல" என்றவர்?
A. கலீல் கிப்ரான்        B. தாராபாரதி        C. சுரதா        D. தாயுமானவர்

 
74. பொருத்துக:
1. பாரதம் அன்றைய நாற்றங்கால் --- கவிஞாயிறு
2. நீங்கள் நல்லவர் --- கவிமணி
3. பராபரக்கண்ணி ---கலீல் கிப்ரான்
4. ஆசியஜோதி --- தாயுமானவர்
A.1 3 2 4        B. 4 3 2 1        C. 1 3 4 2        D. 3 4 1 2

 
75. சிவகங்கை கோட்டையின் கதவுகள் _____ திருநாளன்று திறக்கப்படும்?
A. விஜயதசமி        B. பொங்கல்        C. தீபாவளி        D. போகித் திருநாள்

 
76. தமக்கென முயலா நோன்றால் - பிறர்கென முயலுநர் உண்மையானே என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A. புறநானூறு        B. அகநானூறு        C. ஐங்குறுநூறு        D. பரிபாடல்

 
77. மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று வாழ்ந்தவர்?
A. அன்னை தெரசா        B. முடியரசன்        C. சுரதா        D. வள்ளலார்

 
78. கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு - என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
A. பராபரக்கண்ணி            B. ஆசிய ஜோதி    
C. நீங்கள் நல்லவர்            D. பாரதம் அன்றைய நாற்றங்கால்

 
79. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" -என்றவர்?
A. அன்னை தெரசா    B. பாரதியார்    C. வள்ளலார்    D. கைலாஷ் சத்யார்த்தி

 
80. நேர்மையான வாழ்வை வாழ்பவர்?
A. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்        B. உயிர்களை துன்புறுத்துபவர்
C. தம்மை மட்டும் காத்துக் கொள்பவர்                D. தன் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

 
81. காந்தியடிகள் தமிழ்மொழியை கற்க தொடங்கியது எப்போது?
A. இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில்            B. குஜராத்தில் வாழ்ந்த காலத்தில்
C. தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்        D. இலண்டனில் வாழ்ந்த காலத்தில்

 
82. "சுதேசி நாவாய்ச் சங்கம்" - என்ற கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 1906 செப்டம்பர் 16        B. 1906 அக்டோபர் 16    
C. 1906 நவம்பர் 16            D. 1906 டிசம்பர் 16

 
83. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர்?
A. தன்மை நவிற்சி அணி            B. உவமை அணி
C. வஞ்சப்புகழ்ச்சி அணி            D. உயர்வு நவிற்சி அணி

 
84. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?
A. அறன்வலியுறுத்தல்                B. இன்னா செய்யாமை
C. பெரியாரைப் பிழையாமை            D. கல்லாமை

 
85. வேலு நாச்சியார் பெண்கள் படை பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?
A. உடையாள்        B. தாண்டவராயர்        C. குயிலி    D. பெரிய மருது

 
86. ஒரு இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது ------ எனப்படும்?
A. இடுகுறிப் பொதுப்பெயர்            B. இடுகுறி சிறப்பு பெயர்
C. காரணப் பொதுப்பெயர்            D. காரணச் சிறப்பு பெயர்

 
87. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துக்களை சுவைபட கூறுவது _______ ஆகும்?
A. அணி        B. அழகு        C. இசை        D. குணம்

 
88. அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி என்ன?
A. இயல்பு நவிற்சி அணி                B. உயர்வு நவிற்சி அணி
C. வஞ்சப்புகழ்ச்சி அணி                D. உவமை அணி

 
89. பொருத்துக:
1. கருணை --- இரக்கம்
2. பார் --- மிகுதி
3. சுயம் --- உலகம்
4. கூர் --- தனித்தன்மை
A. 1 2 3 4            B. 1 3 4 2        C. 4 3 2 1        D. 2 1 4 3

 
90. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது ______ ஆகும்?
A. வஞ்சப்புகழ்ச்சி அணி                B. இயல்பு நவிற்சி அணி
C. தன்மை நவிற்சி அணி                D. B மற்றும் C சரி

 
91. பொருளின் ______ குறிக்கும் பெயர் சினைப்பெயர்?
A. பண்பைக்        B. உறுப்பைக்        C. தொழிலைக்        D. காலத்தைக்

 
92. இடுகுறிப்பெயரைத் தேர்ந்தெடு?
A. பறவை        B. மண்        C. முக்காலி        D. மரங்கொத்தி

 
93. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு?
A. இலங்கைத்தீவு        B. இலட்சத் தீவு        C. மணிபல்லவத் தீவு    D. மாலத்தீவு

 
94. பொருந்தாததைத் தேர்ந்தெடு: (சொல் வகை)
A. மதுரை        B. கால்        C. சித்திரை        D. ஓடினான்

 
95. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்?
A. காவிரிக்கரை        B. வைகைக் கரை        C. கங்கைக்கரை    D. யமுனைக்கரை

 
96. வேலுநாச்சியார் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?
A. குயிலி        B. தாண்டவராயர்        C. மருது சகோதரர்கள்        D. ஹைதர் அலி

 
97. சரியானதைத் தேர்ந்தெடு
கூற்று 1: காந்தியடிகளின் வரவால் "கானாடுகாத்தான்" ஊரின் செல்வந்தரிடம் ஏற்பட்ட மாற்றம் எளிமை
கூற்று 2: காந்தியடிகளை மிகவும் கவர்ந்த நூல்கள் ஜி. யு. போப் எழுதிய தமிழ்க்கையேடு மற்றும் திருக்குறள் ஆகும்
A. அனைத்தும் சரி                B. கூற்று 1 மட்டும் சரி    
C. கூற்று 2 மட்டும் சரி                D. அனைத்தும் தவறு

 
98. பொருத்துக:
1. பராபரமே --- மழை
2. செம்மையருக்கு --- மேலான பொருளே
3. உள்ளீடுகள் --- சான்றோர்க்கு
4. நீள்நிலம் --- உள்ளே இருப்பவை
5. மாரி --- பரந்த உலகம்
A. 5 4 3 2 1        B. 1 2 3 4 5        C. 2 3 4 5 1        D. 3 4 5 1 2

 
99. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: பாதம் என்னும் சிறுகதையின் ஆசிரியர் எஸ். இராமகிருஷ்ணன்
கூற்று 2: பாதம் என்னும் சிறு கதையின் தொடக்கத்தில் மாரியின் நிலை ஏழ்மை
கூற்று 3 : பாதம் என்னும் சிறுகதை உணர்த்தும் கருத்து நேர்மைக்கு விலையில்லை
A. அனைத்தும் சரி                    B. கூற்று 1 சரி, கூற்று 2 3 தவறு
C. கூற்று 1 2 சரி, கூற்று 3 தவறு                D. அனைத்தும் தவறு

 
100. பொருத்துக:
1. மனித நேயம் --- Transplantation
2. நாட்டுப்பற்று --- Humanity
3. இலக்கியம் --- Volunteer
4. தன்னார்வலர் --- Literature
5. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை --- Patriotism
A. 5 4 3 2 1        B. 4 3 1 2 5        C. 2 5 4 3 1            D. 3 4 1 2 5
    

No comments:

Post a Comment