Vyuha 1.0 TNPSC Group 4 - Day 6 Test
கேள்விகள் : 100 கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________
7th தமிழ் (இயல் 7,8,9)
1. கவிமணி தேசிய விநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?
A. மதுரை B. தஞ்சாவூர் C. திருநெல்வேலி D. ஈரோடு
2. "கடித இலக்கியத்தின் முன்னோடி" என அழைக்கப்படுபவர் யார்?
A. டி. கே. சிதம்பரநாதர் B. தேவநேயப் பாவாணர் C. தாராபாரதி D. மாணிக்கம்
3. இதய ஒலி எனும் நூலை எழுதியவர் யார்?
A. சுரதா B. மாணிக்கம் C. டி.கே. சிதம்பரநாதர் D. முடியரசன்
4. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்
கூற்று 2: ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெற செய்தல் அணி எனப்படும்
A. அனைத்தும் சரி B. கூற்று 1 மட்டும் சரி C. கூற்று 2 மட்டும் சரி D. அனைத்தும் தவறு
5. "சுடர் ஆழியான்" என்ற சொல்லின் பொருள்?
A. பாமாலை B. துன்பக் கடல்
C. வெப்ப கதிர் வீசும் D. ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
6 "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புஉருகி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A. பொய்கை ஆழ்வார் B. பூதத்தாழ்வார் C. பேயாழ்வார் D. பெரிய ஆழ்வார்
7. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
A. பூதத்தாழ்வார் B. நாதமுனி C. நம்பியாண்டார் நம்பி D. காரைக்கால் அம்மையார்
8. காந்தியடிகள் எப்போதும் ______ பேசினார்?
A. வன்சொற்களை B. அரசியலை C. கதைகளை D. வாய்மையை
9. பொருத்துக:
1. விளை நிலம் --- உண்மை
2. விதை --- இன்சொல்
3. களை --- ஈகை
4. உரம் --- வன்சொல்
A. 1 2 3 4 B. 2 3 4 1 C. 3 4 1 2 D. 4 3 2 1
10. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை _______என்றும் கூறுவர்?
A. மருந்து B. மருத்துவர் C. மருத்துவமனை D. மாத்திரை
11. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது?
A. பணம் B. பொறுமை C. புகழ் D. வீடு
12. காயிதேமில்லத் ----------- பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?
A. தண்மை B. எளிமை C. ஆடம்பரம் D. பெருமை
13. எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A. எதிர் + ரொலித்தது B. எதில் + ஒலித்தது C. எதிர் + ஒலித்தது D. எதி + ரொலித்தது
14. மழை சடசடவென பெய்தது - இத்தொடரில் அமைத்துள்ளது?
A. அடுக்குத்தொடர் B. இரட்டைக்கிளவி C. தொழிலாகு பெயர் D. பண்பாகு பெயர்
15. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ________ முறை வரை அடுக்கி வரும்?
A. இரண்டு B. மூன்று C. நான்கு D. ஐந்து
16. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
A. 3 B. 4 C. 5 D. 6
17. தவறானதைத் தேர்ந்தெடு?
A. ஜமால் முகம்மது கல்லூரி --- திருச்சி
B. ஃபருக் கல்லூரி --- சென்னை
C. சீனா - இந்தியா போர் மூண்ட ஆண்டு --- 1962
D. கண்ணியமிகு தலைவர் --- காயிதே மில்லத்
18. பொருத்துக:
1. நெற்பயிர் --- Paddy
2. அறுவடை --- Harvest
3. பயிரிடுதல் --- Cultivation
4. உழவியல் --- Agronomy
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 4 3 1 2 D. 4 3 2 1
19. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் _________ இயக்கத்தில் கலந்து கொண்டார்?
A. வெள்ளையனே வெளியேறு B. உப்புக் காய்ச்சும் C. சுதேசி D. ஒத்துழையாமை
20. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. முதுமொழி B. முதுமைமொழி C. முதியமொழி D. முதல்மொழி
21. பாவண்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. வேர்கள் தொலைவில் இருக்கின்றன B. நேற்று வாழ்ந்தவர்கள்
C. மகளுக்குச் சொன்ன கதை D. கடலோர வீடு
22. குற்றால குறவஞ்சியை இயற்றியவர் யார்?
A. குமரகுருபரர் B. திரிகூடராசப்பக் கவிராயர் C. வாணிதாசன் D. ஆண்டாள்
23. "வளர் தமிழ் ஆர்வலர்" என அழைக்கப்படுபவர் யார்?
A. பரிதிமாற் கலைஞர் B. வேதரத்தினம் C. டி.கே.சி D. குமரகுருபரர்
24. மரம் வளர்த்தால் _______ பெறலாம்?
A. மாறி B. மாரி C. காரி D. பாரி
25. திருநெல்வேலி ________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
A. காவிரி B. வைகை C. தென்பெண்ணை D. தாமிரபரணி
26. பூதத்தாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் _________ திருவந்தாதியை இயற்றியுள்ளார்?
A. முதல் B. இரண்டாம் C. மூன்றாம் D. நான்காம்
27. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது ________ எனப்படும்?
A. அந்தாதி B. எதுகை C. மோனை D. சந்தி
28. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. அறகதிர் B. அறுகதிர் C. அறக்கதிர் D. அறம்கதிர்
29. ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லுக்கு _______ என்பது பொருள்?
A. தியானம் செய் B. புத்தகம் C. வெப்ப கதிர் வீசும் D. பாமாலை
30. பொய்கை ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள _______ திருவந்தாதியை இயற்றியுள்ளார்?
A. முதல் B. இரண்டாம் C. மூன்றாம் D. நான்காம்
31. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. இன்புஉருகு B. இன்பும் உருகு C. இன்புருகு D. இன்பருகு
32. பொருந்தாதைத் தேர்ந்தெடு?
A. எளிமை --- Simplicity B. தத்துவம் --- Philosophy
C. உபதேசம் --- Preaching D. நேர்மை --- Sovernity
33. பொருத்துக:
1. ஒப்புரவு நெறி --- Poverty
2. வறுமை --- Reciprocity
3. அயலவர் --- Courtesy
4. நற்பண்பு --- Neighbour
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 3 1 2 4 D. 4 3 2 1
34. சாந்த குணம் உடையவர்கள் _______ முழுவதையும் பெறுவர்?
A. புத்தகம் B. செல்வம் C. உலகம் D. துன்பம்
35. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு _______ என்பது பொருள்?
A. சுற்றுலா வழிகாட்டி B. சமுதாய வழிகாட்டி C. சிந்தனையாளர் D. சட்ட வல்லுநர்
36. காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்?
A. சட்டமன்றம் B. நாடாளுமன்றம் C. ஊராட்சி மன்றம் D. நகர் மன்றம்
37. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது?
A. முதலாகு பெயர் B. சினையாகு பெயர் C. தொழிலாகு பெயர் D. பண்பாகு பெயர்
38. மகளுக்கு சொன்ன கதை என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A. அறிவுமதி B. சே. பிருந்தா C. தாரா பாரதி D. கயல்விழி
39. "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நீர் உலையுள்" என்ற பாடலின் ஆசிரியர்?
A. முன்றுறை அரையானார் B. பெருவாயின் முள்ளியார்
C. அறிவுமதி D. வாணிதாசன்
40. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்?
A. முன்றுறை அரையனார் B. காரியாசன்
C. பெருவாயின் முள்ளியார் D. வாணிதாசன்
41. உழவர் சேற்று வயலில் ---------- நடுவர்?
A. செடி B. பயிர் C. மரம் D. நாற்று
42.கழலுதல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A. நெல் B. புடவை C. உதிர்தல் D. புத்தகம்
43. பாண்டியர்களின் தலைநகரம் எது?
A. வஞ்சி B. புகார் C. மகாபலிபுரம் D. மதுரை
44. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று கூறியவர் யார்?
A. சுந்தரர் B. அப்பர் C. திருஞானசம்பந்தர் D. ஆண்டாள்
45. கொற்கையில் பெருந்துறை முத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A. குறுந்தொகை B. புறநானூறு C. அகநானூறு D. பரிபாடல்
46. பொருத்துக:
1. நாற்று --- பறித்தல்
2. நீர் --- அறுத்தல்
3. கதிர் --- நடுதல்
4. களை --- பாய்ச்சுதல்
A. 1 2 3 4 B. 1 4 2 3 C. 4 1 3 2 D. 3 4 2 1
47. தவறானதைத் தேர்ந்தெடு?
A. பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்
B. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி இவர் பாடியதாகும்
C. நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமாலை போற்றி பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு
D. நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
48. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
கூற்று 2: இது 500 பாடல்களை கொண்டது
கூற்று 3: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது
A. அனைத்தும் சரி B. கூற்று 1 2 சரி, கூற்று 3 தவறு
C. கூற்று 1 3 சரி, கூற்று 2 தவறு D. அனைத்தும் தவறு
49. பொருத்துக:
1. தண்பொருநை --- பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலை --- குற்றாலம்
3. கொற்கை --- தாமிரபரணி
4. திரிகூட மலை --- முத்துக் குளித்தல்
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 1 4 2 D. 4 3 2 1
50. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?
கூற்று 1: கல்வி மிகுந்திடில் இலங்கிடும் மடமை என்ற முதுமொழிக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் காயிதே மில்லத்
கூற்று 2: மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்றவர் முகமது மீரான்
A. அனைத்தும் சரி B. கூற்று 1 மட்டும் சரி C.கூற்று 2 மட்டும் சரி D. அனைத்தும் தவறு
51. சே. பிருந்தா எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. மழை பற்றிய பகிர்தல்கள் B. காணி நிலம்
C. வீடு முழுக்க வானம் D. மகளுக்கு சொன்ன கதை
52. " வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் - அவர்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A. கண்ணதாசன் B. தாராபாரதி C. மருதகாசி D. கல்கி
53. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?
A. புதியதொரு விதி செய்வோம் B. தன்னை அறிதல்
C. காணி நிலம் D. இயேசு காவியம்
54. "அன்றைக்குதான் அம்மா காக்காவிற்கு" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A. கல்கி B. கண்ணதாசன் C. உடுமலை நாராயணகவி D. சே. பிருந்தா
55. "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிகதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று கூறியவர் யார்?
A.பெரியார் B. அறிஞர் அண்ணா C. அம்பேத்கர் D. சுபாஷ் சந்திரபோஸ்
56. பாய்மரக்கப்பல் என்ற நூலை எழுதியவர் யார்?
A. தேவநேயப் பாவாணர் B. பசுவய்யா C. பாவண்ணன் D. தாராபாரதி
57. பொருத்துக:
1. நேர்மை --- Integrity
2. வானியல் --- Astronomy
3. கண்ணியம் --- Dignity
4. உபதேசம் --- Preaching
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 4 2 1 3 D. 4 3 2 1
58. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?
A. உடுமலை நாராயணகவி B. தேவநேயப் பாவாணர்
C. கண்ணதாசன் D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
59. திருக்குறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் யார்?
A. சேக்கிழார் B. வீரமாமுனிவர் C. குன்றக்குடி அடிகளார் D. குமரகுருபரர்
60. நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர்?
A. திருஞானசம்பந்தர் B. மாணிக்கவாசகர் C. சுந்தரர் D. அப்பர்
61. "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்" என்று காயிதே மில்லத் பற்றிக் கூறியவர் யார்?
A. அண்ணா B. தந்தை பெரியார் C. காமராசர் D. இராஜாஜி
62. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்?
A. பாரதிதாசன் B. கண்ணதாசன் C. பாவலரேறு பெருஞ்சித்திரனார் D. முடியரசன்
63. குற்றால முனிவர் என அழைக்கப்படுபவர்?
A. இரசிகமணி B. கவிமணி C. பாரதியார் D. வாணிதாசன்
64. ஞானத் தமிழ் புரிந்த நான் - என்றவர்?
A. பூதத்தாழ்வார் B. திருமங்கை ஆழ்வார் C. பொய்கை ஆழ்வார் D. பெரியாழ்வார்
65. "கண்ணியமிகு" என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் யார்?
A. காயிதே மில்லத் B. அப்துல் ரகுமான் C. பாபர் D. ஷாஜகான்
66. திசம்பர் சூடினாள் - இதில் பயின்று வந்துள்ளது?
A. சினையாகு பெயர் B. காலவாகு பெயர் C. இடவாகு பெயர் D. பொருளாகு பெயர்
67. " வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A. உவமை அணி B. வேற்றுமை அணி C. வஞ்ச புகழ்ச்சியணி D. இயல்பு நவிற்சி அணி
68. இலக்கண குறிப்பு தருக : இன்ப வெள்ளம்
A. உவமை B. உருவகம் C. முற்றும்மை D. எண்ணும்மை
69. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது?
A. இடவாகு பெயர் B. பொருளாகு பெயர் C. தொழிலாகு பெயர் D. காலவாகு பெயர்
70. "மீசைக்கார பூனை" என்ற நூலை எழுதியவர் யார்?
A. பாவண்ணன் B. முடியரசன் C. தேவநேயப் பாவாணர் D. இராதாகிருஷ்ணன்
71. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?
A. திருக்குறள் B. பரிபாடல் C. திரிகடுகம் D. தொல்காப்பியம்
72. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம் எது?
A. பாளையங்கோட்டை B. மதுரை C. தஞ்சாவூர் D. சேலம்
73. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" என்று குற்றால மலைவளத்தைக் குற்றால குறவஞ்சியில் பாடியவர் யார்?
A. திரிகூட இராசப்பக் கவிராயர் B. குமரகுருபரர் C. மறைமலை அடிகள் D. சேக்கிழார்
74. தண்பொருநைப் புனல் நாடு ' என்று கூறியவர் யார்?
A. குமரகுருபரர் B. சேக்கிழார் C. மாணிக்கவாசகர் D. இளங்கோவடிகள்
75. காயிதே மில்லத் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஆண்டுகள்?
A. 1945 – 1952 B. 1946 – 1952 C. 1947 – 1952 D. 1948 - 1952
76. இலக்கண குறிப்புத் தருக: தேன்தமிழ்
A. உவமை B. உருவகம் C. பண்புத்தொகை D. வினைத்தொகை
77. கூலம் என்பது எதைக் குறிக்கும்?
A. கீரை B. புத்தகம் C. தானியம் D. வானம்
78. தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A. ஆதிச்சநல்லூர் B. கீழடி C. பொருந்தல் D. ஏதுமில்லை
79. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வழங்கப்பட்ட பெயரான "வேணுவனம்" குறிப்பது?
A. மூங்கில் காடு B. ஆலங்காடு C. சோளக்கொல்லை D. ஏதுமில்லை
80. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம்?
A. தஞ்சாவூர் B. திருநெல்வேலி C. நீலகிரி D. சேலம்
81. கூடு கட்டத் தெரியாத பறவை?
A. காக்கை B. குயில் C. சிட்டுக்குருவி D. தூக்கணாங்குருவி
82. தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A. தா + ஒரு B. தான் + னொரு C. தான் +ஒரு D. தானே + ஒரு
83. பொருத்துக:
1. சாந்தம் --- சிறப்பு
2. மகத்துவம் --- உலகம்
3. தாரணி --- கருணை
4. இரக்கம் --- அமைதி
A. 1 2 3 4 B. 4 1 2 3 C. 3 1 2 4 D. 4 3 2 1
84. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
A. பரிபாடல் B. அகநானூறு C. புறநானூறு D. நற்றிணை
85. " இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு - தினம் " என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A. கண்ணதாசன் B. வாணிதாசன் C. பாரதிதாசன் D. தாராபாரதி
86. பொருத்துக:
1. பொருளாகு பெயர் --- பொங்கல் உண்டான்
2. பண்பாகு பெயர் --- மல்லிகை சூடினாள்
3. சினையாகு பெயர் --- இனிப்பு தின்றான்
4. தொழிலாகு பெயர் --- தலைக்கு ஒரு பழம் கொடு
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 2 3 4 1 D. 4 3 2 1
87. கண்ணதாசனின் இயற்பெயர்?
A. மாணிக்கம் B. சுப்புரத்தினம் C. முத்தையா D. சுப்ரமணியம்
88. மக்கள் அனைவரும் ---------- ஒத்த இயல்புடையவர்கள்?
A. பிறப்பால் B. நிறத்தால் C. குணத்தால் D. பணத்தால்
89. ________ ஒரு நாட்டின் அரணன்று?
A. காடு B. வயல் C. மலை D. தெளிந்த நீர்
90. "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி " என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A. புதுமை விளக்கு B. அறம் என்னும் கதிர்
C. விருந்தோம்பல் D. வயலும் வாழ்வும்
91. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ________ செய்வர்?
A. அறுவடை B. உழவு C. நடவு D. விற்பனை
92. ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A. ஞான + சுடர் B. ஞானச் + சுடர் C. ஞானம் + சுடர் D. ஞானி + சுடர்
93. பொருத்துக:
1. அன்பு --- நெய்
2. ஆர்வம் --- தகளி
3. சிந்தை --- விளக்கு
4. ஞானம் --- இடுதிரி
A. 1 2 3 4 B.2 1 4 3 C. 3 2 1 4 D. 4 3 2
94. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவதை ஏகதேச உருவக அணி என்பர்
கூற்று 2: போல, புரைய, அன்ன போன்றவை உவம உருபுகள் ஆகும்
A. அனைத்தும் சரி B. கூற்று 1 மட்டும் சரி
C. கூற்று 2 மட்டும் சரி D. அனைத்தும் தவறு
95. இளமை ' என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?
A. முதுமை B. புதுமை C. தனிமை D. இனிமை
96. பொருளாகு பெயரின் வேறு பெயர் என்ன?
A. முதலாகுபெயர் B. சினையாகு பெயர் C. இடவாகு பெயர் D. காலவாகு பெயர்
97. திருநெல்வேலி சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளவர்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. நக்கீரர் B. குமரகுருபரர் C. நம்மாழ்வார் D. கவிராசப் பண்டிதர்
98. இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?
A. பொதிகை மலை B. இமயமலை C. விராலி மலை D. கொல்லி மலை
99. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?
கூற்று 1:நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்
கூற்று 2: பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை அறிவு எனும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்
A. அனைத்தும் சரி B. கூற்று 1 மட்டும் சரி C. கூற்று 2 மட்டும் சரி D. அனைத்தும் தவறு
100. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகபடுத்தாமல் விடுவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
கூற்று 2: உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்
A. அனைத்தும் சரி B. கூற்று 1 மட்டும் சரி C. கூற்று 2 மட்டும் சரி D. அனைத்தும் தவறு
No comments:
Post a Comment