1. கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
A. கி.மு. 3ம் நூற்றாண்டு B. கி.பி. 5ம் நூற்றாண்டு C. கி.பி. 3ம் நூற்றாண்டு D. கி.மு. 4ம் நூற்றாண்டு
2. பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர்?
A. ஓவிய எழுத்து B. ஓவிய ஓசை C. ஓவிய பாறை D. ஓவிய குகை
3. மிகப்பழமையான தமிழ் எழுத்து முறை?
A. கண்ணெழுத்து B. வட்டெழுத்து C. கல்லெழுத்து D. நேர்கோட்டு எழுத்து
4. கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A. வட்டெழுத்து B. தமிழெழுத்து C. கண்ணெழுத்து D. சித்திர எழுத்து
5. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A. சிலப்பதிகாரம் B. மணிமேகலை C. வளையாபதி D. சீவகசிந்தாமணி
6. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சான்றாக திகழும் கல்வெட்டு ?
A. குடுமியன்மலை கல்வெட்டு B. அரச்சலூர் கல்வெட்டு
C. மாமண்டூர் கல்வெட்டு D. ஆதிச்சநல்லூர் கல்வெட்டு
7. அகரவரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் ________ எழுத்தாக கருதப்பட்டது ?
A. குறில் B. நெடில் C. உயிர்மெய் D. ஆய்தம்
8. தமிழ்எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ?
A. பாரதியார் B. பெரியார் C. உ.வே.சா D. பெருஞ்சித்திரனார்
9. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் யார் ?
A. குணங்குடி மஸ்தான் சாகிபு B. ஆறுமுக நாவலார்
C. வீரமாமுனிவர் D. அயோத்திதாச பண்டிதர்
10. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தமிழில் சொல் என்பதற்கு மணல் என்று பொருள்
கூற்று 2 : சொன்றி, சோறு என்பது சொல் வார்த்தையிலிருந்து தோன்றின
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
11. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று ?
A. தொல்காப்பியர் B. அகத்தியர் C. நக்கீரர் D. தண்டி
12. “நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி” என்று கூறியவர் ?
A. தொல்காப்பியர் B. அகத்தியர் C. அய்யனாரிதனார் D. பவணந்தி முனிவர்
13. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : ஓரெழுத்து ஒருமொழி 42 உண்டு என்று நன்னூலார் கூறுகிறார்
கூற்று 2 : ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை 4
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
14. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : காட்டுப் பசுவிற்கு அரிமா என்ற பெயரும் உண்டு
கூற்று 2 : விலங்கைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்மை
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
15. அம்பு விரைந்து செல்வது போல சென்று உரிய கடமை புரிபவன் ________ எனப்பட்டான்?
A. எயினர் B. ஏகலைவன் C. ஏவலன் D. எய்ப்பன்றி
16. முள்ளம் பன்றியின் பழம்பெயர் என்ன ?
A. கரிமா B. எய்பன்றி C. பரிமா D. ஆமா
17. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் ?
A. சாலை இளந்திரையன் B. சி. இலக்குவனார்
C. பாரதிதாசன் D. இரா. இளங்குமரனார்
18. “தமிழின் தனிப்பெருஞ்சிறப்பு” என்ற நூலின் ஆசிரியர் ?
A. மறைமலையடிகள் B. இரா. இளங்குமரனார்
C. தேவநேயப்பாவாணர் D. சாலை இளந்திரையன்
19. உயிர் எழுத்துகள் 12 _______ ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?
A. கழுத்து B. மார்பு C. தலையை D. வாய்
20. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்துக்கள் எவை ?
A. ப், ம் B. க்,ங் C. ச், ஞ் D. ட், ண்
21. வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள் எவை ?
A. உ, ஊ B. ஒ, ஓ C. ஔ D. அனைத்தும் சரி
22. பொருத்துக :
A. குயில் - அகவும்
B. மயில் - கூவும்
C. கிளி - குழறும்
D. கூகை - பேசும்
a. 1, 2, 3, 4 b. 2, 4, 3, 1 c. 2, 1, 4, 3 d. 1, 3, 4, 2
23. பொருத்துக :
A. உயிரொலி - Pictograph
B. அகராதியில் - Phoneme
C. ஒலியன் - Lexicography
D. சித்திர எழுத்து - Vowel
a. 1, 2, 3, 4 b. 4, 1, 2, 3 c. 4, 3, 2, 1 d. 1, 4, 2, 3
24. “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” என்ற பாடலின் ஆசிரியர்?
A. பாரதிதாசன் B. கண்ணதாசன் C. வாணிதாசன் D. முடியரசன்
25. “தொடுவானம்” என்ற நூலின் ஆசிரியர் ?
A. சி.மணி B. பசுவய்யா C. இரா. மீனாட்சி D. வாணிதாசன்
26. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு
கூற்று 2 : வாணிதாசன் பாரதிதாசனுடைய மாணவர் ஆவார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
27. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் எனப் புகழப்படுபவர்?
A. வாணிதாசன் B. கண்ணதாசன் C. பாரதிதாசன் D. முடியரசன்
28. “ஓடை” எனும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
A. வீரகாவியம் B. தொடுவானம் C. ஊன்றுகோல் D. பூங்கொடி
29. கோணக்காத்து பாடலில், எந்த ஊரில் உள்ள தென்னம்பிள்ளைகள் எல்லாம் அழிந்தன?
A. வாங்கல் B. காங்கேயம் C. ஆர்க்காடு D. தெத்துக்காடு
30. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் _________ என்று அழைக்கப்பட்டன ?
A. பஞ்சக்கும்மிகள் B. வாழ்த்து கும்மி C. தமிழ்க்கும்மி D. இறை கும்மி
31. பொருத்துக :
A. வின்னம் - மிகவும்
B. வாகு - எமன்
C. காலன் - சரியாக
D. மெத்த - சேதம்
a. 4, 3, 2, 1 b. 1, 2, 3, 4 c. 4, 1, 3, 2 d. 1,2, 4, 3
32. “காத்து நொண்டிச் சிந்து” என்ற பாடலை இயற்றியவர் ?
A. இராசு B. வெங்கம்பூர் சாமிநாதன் C. கவிமணி D. இளஞ்செழியன்
33. பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார் ?
A. புலவர் இறைவி B. புலவர் செ. இராசு C. புலவர் சி. மணி D. புலவர் விநாயகம்
34. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ?
A. வெண்பால் B. சியாட்டல் C. அரியார் D. சுகுவாம் ஷீ
35. சியாட்டல் யாரை எம் உடன் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் ?
A. ஆறுகள் B. மரங்கள் C. விலங்குகள் D. நட்சத்திரம்
36. நிலம் பொது என்ற கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?
A. தமிழகப் பழங்குடிகள் B. தமிழ் வேலி C. தமிழ் சமுதாயம் D. தமிழினம்
37. “எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே” எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் ?
A. பாரதிதாசன் B. வாணிதாசன் C. பாரதியார் D. முடியரசன்
38. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : நிரந்தரம் என்ற சொல்லின் பொருள் காலம் முழுமையும்
கூற்று 2 : வைப்பு என்ற சொல்லின் பொருள் நிலப்பகுதி
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
39. “செந்தமிழ் தேனீ” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?
A. சுரதா B. கவிமணி C. அண்ணா D. பாரதிதாசன்
40. பாரதியார் நடத்திய இதழ்கள் என்ன ?
A. தமிழ்மலர் B. இந்தியா, விஜயா C. தென்றல், முல்லை D. சண்டமாருதம்
41. “ சிந்துக்குத் தந்தை” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?
A. பாரதிதாசன் B. வாணிதாசன் C. கண்ணதாசன் D. முடியரசன்
42. “செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்” என்ற கவிதையை இயற்றியவர் ?
A. சாலை இளந்திரையன் B. சாலினி இளந்திரையன்
C. து. அரங்கன் D. சி.சு. செல்லப்பா
43. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் ?
A. நன்னூல் B. தொல்காப்பியம்
C. புறப்பொருள் வெண்பாமாலை D. தண்டியலங்காரம்
44. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் ?
A. தொல்காப்பியம் B. தண்டியலங்காரம் C. நன்னூல் D. புறப்பொருள் வெண்பாமாலை
45. உயிரெழுத்து நீண்டு ஒலிப்பதை ________ என்பர் ?
A. ஒற்றளபெடை B. உயிரளபெடை C. குற்றியலிகரம் D. குற்றியலுகரம்
46. உலகம் “நிலம், நீர், தீ, காற்று, வானம்” என்ற ஐந்துபூதங்களால் ஆனது என்று கூறியவர் ?
A. தொல்காப்பியர் B. தண்டி C. அகத்தியர் D. ஔவையார்
47. பொருத்துக :
A. விசும்பு - தவறாமை
B. மயக்கம் - வானம்
C. இருதிணை - கலவை
D. வழா அமை - உயர்திணை, அஃறிணை
a. 1, 2, 3, 4 b. 4, 3, 2, 1 c. 2, 3, 4, 1 D. 1, 3, 4, 2
48. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்ற வரியைக் கூறியவர் யார் ?
A. தண்டி B. பவணந்தி முனிவர் C. தொல்காப்பியர் D. அய்யனாரிதனார்
49. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை மூன்று
கூற்று 2 : தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை 27
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
50. பொருத்துக :
A. சிங்கம் - குருளை
B. புலி - பறழ்
C. பசு - கன்று
D. கரடி - குட்டி
a. 2, 1, 4, 3 b. 1, 2, 3, 4 c. 4, 3, 2, 1 d. 1, 3, 2, 4
51. “பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A. சிலப்பதிகாரம் B. மணிமேகலை C. நீலகேசி D. வளையாபதி
52. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?
A. 3 B. 4 C. 5 D. 6
53. பொருத்துக :
A. திரியோக மருந்து - பிரிவுகளாக
B. தெளிவு - தன்மையுடையன
C. திறத்தன - நற்காட்சி
D. கூற்றவா - மூன்று யோக மருந்து
a. 4, 3, 2, 1 b. 4, 2, 3, 1 c. 1, 2, 3, 4 d. 3, 4, 2, 1
54. தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A. நீலகேசி B. குண்டலகேசி C. மணிமேகலை D. சிலப்பதிகாரம்
55. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் சிலப்பதிகாரம்
கூற்று 2 : நீலகேசியானது கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களைக் கொண்டது
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
56. “உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
A. முடியரசன் B. கவிமணி தேசிய விநாயகம் C. பிச்சமூர்த்தி D. பாரதியார்
57. பொருத்துக :
A. மட்டு - தடுமாற்றம்
B. சுண்ட - உலகம்
C. வையம் - நன்கு
D. திட்டுமுட்டு - அளவு
a. 1, 2, 3, 4 b. 4, 3, 2, 1 c. 4, 1, 2, 3 d. 1, 4, 3, 2
58. தேசிய விநாயகம் அவர்களின் சிறப்பு பெயர் என்ன ?
A. கவிமணி B. ஷெல்லிதாசன் C. கம்சதேவ் D. உவமைக்கவிஞர்
59. கவிமணி தேசிய விநாயகத்தின் மொழிபெயர்ப்பு நூல் ?
A. ஆசியஜோதி B. உமர்கய்யாம் பாடல்
C. மருமக்கள் வழி மான்மியம் D. மலரும் மாலையும்
60. “மலரும் மாலையும்” என்ற நூலின் ஆசிரியர் ?
A. சுரதா B. கவிமணி C. நாமக்கல் கவிஞர் D. முடியரசன்
61. “வேர் பாரு: தாழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே” என்ற வரியை சொன்னவர் ?
A. சித்தர்கள் B. மதுரை கூடலூர்க்கிழார் C. காரியாசன் D. திருவள்ளுவர்
62. சித்த மருத்துவத்தில் எதில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது ?
A. மூலிகை B. தாதுப்பொருள் C. உலோகம் D. அனைத்தும் சரி
63. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ______ ஐ பயன்படுத்தினர் ?
A. தாவரங்களை B. விலங்குகளை C. உலோகங்களை D. மருந்துகளை
64. மனித மூளையில் எத்தனை கோடி நியூரான்கள் உள்ளன ?
A. பத்தாயிரம் B. ஐம்பதாயிரம் C. இருவதாயிரம் D. முப்பதாயிரம்
65. மூக்கு மற்றும் கண்ணின் முடிவு எங்குள்ளது ?
A. முன் மூளை B. நடுமூளை C. பின் மூளை D. எதுவுமில்லை
66. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : நம் உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது சிறுமூளை
கூற்று 2 : மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி குருதி தேவைப்படுகிறது
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
67. மூளையானது உடம்பிற்கு தேவைப்படும் உயிர்வளி மற்றும் குருதியில் எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது ?
A. 1/5 B. 1/50 C. 2/5 D. 2/50
68. மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள் யார் ?
A. பட்டயக்கணக்கர் B. கணக்கு ஆசிரியர்
C. இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர் D. அனைத்தும் சரியானவை
69. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 10 வருடங்கள் தூங்குகிறான்
கூற்று 2 : மனிதன் வாழ்நாளில் மூன்றுலட்சம் கனவுகள் காண்கிறான்
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
70. மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் யார் ?
A. சுஜாதா B. முடியரசன் C. பிச்சமூர்த்தி D. பாரதியார்
71. எச்சம் எத்தனை வகைப்படும் ?
A. 4 B. 3 C. 2 D. 5
72. பொருத்துக :
A. நடந்து - முற்றெச்சம்
B. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
C. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
D. பெரிய - வினையெச்சம்
a. 4, 3, 1, 2 b. 1, 2, 3, 4 c. 4, 3, 2, 1 d. 1, 4, 3, 2
73. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது _______ எனப்படும் ?
A. வினையெச்சம் B. பெயரெச்சம் C. முற்றெச்சம் D. தெரிநிலை வினையெச்சம்
74. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம் _______ எனப்படும் ?
A. குறிப்பு வினையெச்சம் B. முற்றெச்சம்
C. வினையெச்சம் D. தெரிநிலை வினையெச்சம்
75. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் _______ எனப்படும் ?
A. தெரிநிலை பெயரெச்சம் B. வினை பெயரெச்சம்
C. குறிப்பு பெயரெச்சம் D. நிகழ்காலப் பெயரெச்சம்
76. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : “படித்த மாணவன்” என்பதற்கான இலக்கணக்குறிப்பு பெயரெச்சம்
கூற்று 2 : “படித்து முடித்தான்” என்பதற்கான இலக்கணக்குறிப்பு வினையெச்சம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
77. “காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல” என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும் ?
A. தற்செயல் நிகழ்வு B. எதிர்பாராத நிகழ்வு
C. ஒற்றுமையின்மை D. பயனற்ற செயல்
78. எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் ?
A. 60 B. 90 C. 80 D. 10
79. மூளை, உடம்பின் எடையில் எத்தனை பங்கை கொண்டுள்ளது ?
A. 1/25 B. 1/50 C. 2/25 D. 2/50
80. கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம்ஆடுவது, நடிப்பது போன்றவை மூளையின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது ?
A. இடது பகுதி B. வலது பகுதி C. முன் பகுதி D. நடு பகுதி
81. “தமிழக பழங்குடிகள்” என்ற நூலை இயற்றியவர் யார் ?
A. பக்தவச்சல பாரதி B. பாலகுமரன் C. தமிழ் மணி D. ஜெயதேவன்
82. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சிறுத்தையின் பெயர் என்ன ?
A. திமிலம் B. ஆன்கண்ணு C. அலப்பு D. பித்தக்கண்ணு
83. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சருகுமானின் பெயர் என்ன ?
A. கண்ணு B. கூரன் C. கரண் D. அரண்
84. காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர் ?
A. காதர் B. ஆல்அலப்பு C. ஆல்மைன் D. ஆல்கைகன்
85. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : காடர்களின் கதைகளைத் தொகுத்தவர் கீதா
கூற்று 2 : காடர்களின் கதைகளை “யானையோடு பேசுதல்” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் ஜ.பிரியா
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
86. பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை ________ என்பர் ?
A. முற்றுபெயர் B. முற்றுவினை C. முற்றும்மை D. எண்ணும்மை
87. பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு), தொழில் இவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று _______ எனப்படும் ?
A. தெரிநிலை வினைமுற்று B. குறிப்பு வினைமுற்று
C. ஏவல் வினைமுற்று D. வியங்கோள் வினைமுற்று
88. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று __________ எனப்படும் ?
A. ஏவல் வினைமுற்று B. தெரிநிலை வினைமுற்று
C. குறிப்பு வினைமுற்று D. வியங்கோள் வினைமுற்று
89. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : உலக ஈர நில நாள் பிப்ரவரி 2
கூற்று 2 : உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16
A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
90. “உழவுத் தொழில் வாழ்க” இது எவ்வகை தொடர் ?
A. செய்தித் தொடர் B. உணர்ச்சித் தொடர்
C. விழைவுத் தொடர் D. வினாத்தொடர்
91. “கரிகாலன் கல்லணையை கட்டினான்” இது எவ்வகைத் தொடர் ?
A. செய்தித் தொடர் B. உணர்ச்சித் தொடர் C. விழைவுத் தொடர் D. வினாத்தொடர்
92. ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் _______ ஆகும் ?
A. செய்தி தொடர் B. உணர்ச்சித் தொடர் C. விழைவுத் தொடர் D. வினாத் தொடர்
93. பொருத்துக :
A. பழங்குடியினர் - Valley
B. சமவெளி - Thicket
C. பள்ளத்தாக்கு - Tribes
D. புதர் - Plain
a. 1, 2, 3, 4 b. 4, 3, 2, 1 c. 3, 4, 1, 2 d. 1, 4, 3, 2
94. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ?
A. இனியவை நாற்பது B. திருவள்ளுவமாலை
C. ஏலாதி D. களவழி நாற்பது
95. “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உவமை அணி B. உருவ அணி C. இல்பொருள் உவமை அணி D. வேற்றுமை அணி
96. “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உருவக அணி B. பிறிது மொழிதல் அணி C. உவமை அணி D. வேற்றுமை அணி
97. திருவள்ளுவர் ________ ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர் ?
A. 2000 ஆண்டு B. 3000 ஆண்டு C. 4000 ஆண்டு D. 5000 ஆண்டு
98. “இல்லறவியல்” திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?
A. அறத்துப்பால் B. பொருட்பால் C. இன்பத்துப்பால் D. எதுவுமில்லை
99. “அமைச்சியல்” திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?
A. அறத்துப்பால் B. பொருட்பால் C. இன்பத்துப்பால் D. எதுவுமில்லை
100. புகழாலும் பலியாலும் அறியப்படுவது ______ ஆகும் ?
A. அடக்கமுடைமை B. நாணுடைமை C. நடுவு நிலைமை D. பொருளுடைமை
Friday, February 23, 2024
Vyuha 1.0 TNPSC Group 4 - Day 7 Test - 8th std Tamil Unit 1,2,3
Recommended Articles
- Morning Session
Vyuha 1.0 TNPSC Group 4 - Day 28 Test - India – Location, Relief and Drainage Apr 17, 2024
மேக்மீ மெடல் TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 28 Test கேள்விகள் : 60 &...
- Morning Session
Vyuha 1.0 TNPSC Group 4 - Day 28 Test - இந்திய இயற்கையமைப்பு, நிலத்தோற்றம் Apr 17, 2024
மேக்மீ மெடல் TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 28 Test கேள்விகள் : 60 &...
- Morning Session
Vyuha 1.0 TNPSC Group 4 - Day 26 Test - 10th std Tamil Unit 8Mar 13, 2024
மேக்மீ மெடல் TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 26 Test கேள்விகள் : 70 &...
- Morning Session
Vyuha 1.0 TNPSC Group 4 - Day 25 Test - 10th std Tamil Unit 7Mar 12, 2024
மேக்மீ மெடல் TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 25 Test கேள்விகள் : 50 &...
Labels:
Morning Session,
TNPSC,
Vyuha 1.0 TNPSC Group 4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment