LATEST

Tuesday, March 5, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 15 Test - 9th std Tamil Unit 6

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 15 Test
 
 கேள்விகள் : 55                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

9th-std (unit - 6)


1. கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்
அ) அகராதி நிகண்டு        ஆ) சிந்தாமணி நிகண்டு    இ) சூடாமணி நிகண்டு       ஈ) திவாகர நிகண்டு

2. உருவ அமைப்பின் அடிப்படையில் சிற்பங்களின் வகைகள் எத்தனை?
அ) 3            ஆ) 2             இ) 4            ஈ) 5

3. கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், கோவிலின் தரைப்பகுதி, சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____.
அ) புடைப்புச் சிற்பங்கள்    ஆ) முழு உருவச் சிற்பங்கள்   இ) பிரதிமை        ஈ) தெய்வசிற்பங்கள்

4. உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பங்கள் _______ எனப்படும்.
அ) புடைப்புச் சிற்பங்கள்               ஆ) முழு உருவச் சிற்பங்கள்
இ) பிரதிமை                      ஈ) தெய்வசிற்பங்கள்

5. உலோகங்கள் மற்றும் கல்லினால் செய்யப்படும் சிற்பங்கள் எத்தனை நிலைகளில் செய்யப்படுகின்றன.
அ) 2            ஆ) 3            இ) 4

6. கீழ்க்கண்டவற்றுள் தமிழர் அழகியலின் வெளிப்பாடு எது?
அ) கோயில்கள்    ஆ) சிற்பங்கள்         இ) நூல்கள்        ஈ) மொழி

7. சிற்ப இலக்கண மரபுப்படி சிற்பங்கள் செய்பவர்கள் _____ எனப்படுவர்.
அ) கற்கவிஞர்கள்     ஆ) சிற்பக் கவிஞர்கள்        இ) உருவக் கவிஞர்கள்     ஈ) உலோக கவிஞர்கள்

8. மாளிகைகளில் பல சுதைச் சிற்பங்கள் இருந்ததை கூறும் நூல் ____.
அ) சிலப்பதிகாரம்    ஆ) தொல்காப்பியம்    இ) திவாகர நிகண்டு        ஈ) மணிமேகலை

9. போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும் என்ற செய்தியை கூறும் நூல்
அ) சிலப்பதிகாரம்    ஆ) தொல்காப்பியம்        இ) திவாகர நிகண்டு         ஈ) மணிமேகலை

10. தமிழர்களின் தொடக்கக் காலச் சிற்பக் கலைக்கு சான்று
அ) நடுகல்      ஆ) சுதைச் சிற்பங்கள்        இ) புடைப்புச் சிற்பங்கள்    ஈ) கோயில்கள்

11. பல்லவர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இக்காலத்தில் சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
2. மாமல்லபுரச் சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.
3. காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது.
4. பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
அ) அனைத்தும் சரி    ஆ) 1, 3 தவறு        இ) 3 தவறு         ஈ) அனைத்தும் தவறு

12. கீழ்க்கண்டவற்றுள் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் இடம்பெறாத நூல் எது?
அ) தொல்காப்பியம்     ஆ) திவாகர நிகண்டு       இ) மணிமேகலை         ஈ) திருக்குறள்

13. பஞ்ச பாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் ____.
அ) மாமல்லபுரம்                     ஆ) காஞ்சி கைலாசநாதர் கோயில்
இ) தஞ்சை பெரிய கோவில்                ஈ) மலைக்கோட்டை

14. கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படாத இடம்
அ) பிள்ளையார்பட்டி        ஆ) திருமயம்          இ) கழுகுமலை                ஈ) மலைக்கோட்டை

15. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது ____.
அ) சோழர்காலம்    ஆ) சேரர் காலம்        இ) பாண்டியர் காலம்               ஈ) பல்லவர் காலம்

16. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் வாயிற்காவலர் உருவங்களின் உயரம் _____.
அ) 13 அடி        ஆ) 15 அடி        இ) 14 அடி         ஈ) 11 அடி

17. சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்ற கலை எது?
அ) கற்சிற்பக் கலை     ஆ) உலோக சிற்பக் கலை    இ) ஓவியக்கலை       ஈ) சுதை சிற்பக்கலை

18. பொருத்துக.
1. 2 ம் குலோத்துங்கன் – i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
2. 2 ம் இராசராசன் – ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்
3. முதலாம் இராசேந்திரன் – iii) தஞ்சை பெரிய கோவில்
4. முதலாம் இராசராசன் – iv) கங்கைகொண்ட சோழபுரம்.
அ) i ii iii iv    ஆ) ii i iv iii            இ) ii i iii iv            ஈ) i ii iv iii

19. நடன முத்திரைகளுடன் கூடிய சோழர் கால சிற்பங்கள் காணப்படும் இடம்
அ) தஞ்சாவூர்        ஆ) நார்த்தாமலை     இ) சிதம்பரம்        ஈ) கும்பகோணம்

20. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரக சி லை அமைந்துள்ள இடம்
அ) மாமல்லபுரம்                   ஆ) கங்கை கொண்ட சோழபுரம்    
இ) தாராசுரம்                   ஈ) தஞ்சை பெரிய கோவில்

21. 2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
அ) நார்த்தாமலை – புதுக்கோட்டை            ஆ) சீனிவாசநல்லூர் – திருச்சி
இ) கொடும்பாளூர் – புதுக்கோட்டை         ஈ) திருவரங்கம் – திருச்சி

22. குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் அமைந்துள்ள இடம்
அ) நார்த்தாமலை – புதுக்கோட்டை            ஆ) சீனிவாசநல்லூர் – திருச்சி
இ) கொடும்பாளூர் – புதுக்கோட்டை            ஈ) திருவரங்கம் – திருச்சி

23. கீழ்க்கண்டவற்றுள் பல்லவர் கால சிற்பங்கள் காணப்படும் இடம் எது?
அ) குன்றக்குடி   ஆ) பிள்ளையார்பட்டி           இ) காஞ்சிபுரம்                ஈ) திருப்பரங்குன்றம்

24. பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1. பாண்டியர் கால குகைக் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவை.
2. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் இவற்றை காணலாம்.
3. கோவில்பட்டிக்கு கிழக்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.
அ) அனைத்தும் சரி         ஆ) 1 மட்டும் சரி        இ) 1, 2 சரி        ஈ) 1, 3 சரி    

25. சுண்ணாம்புக் கலவையால் செய்யப்படும் சிற்பங்கள் ______ எனப்படும்.
அ) புடைப்பு சிற்பங்கள்                ஆ) முழு உருவச் சிற்பங்கள்
இ) சுதைச் சிற்பங்கள்                     ஈ) சுண்ணாம்பு சிற்பங்கள்

26. தெலுங்கு, கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது.
அ) சோழர்கள் காலம்         ஆ) பாண்டியர்கள் காலம்    இ) நாயக்கர் காலம்    ஈ) விஜயநகர மன்னர் காலம்

27. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள் யார்?
அ) சோழர்கள்       ஆ) பாண்டியர்கள்    இ) நாயக்கர்கள்     ஈ) விஜயநகர மன்னர்கள்

28.  “அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) பூக்களை உடைய வனம்         ஆ) மயில்        இ) இறகு        ஈ) சந்தனம்

29. “மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே ”
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?
அ) குறிஞ்சி         ஆ) முல்லை            இ) மருதம்        ஈ) நெய்தல்

30. சரியான பொருளைத் தேர்ந்தெடு? பொலம், பொலி
அ) காடு, அழகு                ஆ) அழகு, அழகு    
இ) அழகு, தானியக்குவியல்             ஈ) காடு, தானியக்குவியல்

31. “பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்”
இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?
1. கொன்றை    2. மூங்கில்    3. வேம்பு    4. ஆம்பல்
அ) 1, 2            ஆ) 1, 2, 3        இ) 1, 2, 4         ஈ) 2, 3, 4

32.சரியான பொருளைத் தேர்ந்தெடு
கடறு, உழை
அ) மேடு, யானை    ஆ) பள்ளம், புலி    இ) காடு, யானை    ஈ) காடு, ஒரு வகை மான்

33. “பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) பூஞ்சோலை    ஆ) காகம்        இ) நாகணவாய்ப் பறவை     ஈ) வண்டுகள்

34. “முதிரையும் சாமையும் வரகும் பொய்மணிக்
குதிரைவாலி யும்களம் குவித்துக் குன்றுஎனப்
பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும் ”
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?
அ) குறிஞ்சி        ஆ) முல்லை             இ) மருதம்        ஈ) நெய்தல்

35. “மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) துன்புறுதல்    ஆ) கொம்பு      இ) சோர்வால் வாய் குழறுதல்      ஈ) வருந்துதல்

36. “இன்னிளம் குருளை மிகு இனைந்து வெம்பிட” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) யானை        ஆ) மான்        இ) குரங்கு            ஈ) குட்டி

38. சரியான பொருளைத் தேர்ந்தெடு.
இனைந்து, உயங்குதல்
அ) சேர்ந்து, உரங்குதல்            ஆ) துன்புறுதல், உரங்குதல்
இ) துன்புறுதல், வருந்துதல்             ஈ) சேர்ந்து, வருந்துதல்

39. சரியான பொருளைத் தேர்ந்தெடு.
படிக்குஉற, கோடு
அ) வருந்துதல், கொம்பு            ஆ) நிலத்தில்விழ, கொம்பு
இ) கூறுதல், மலை                ஈ) வருந்துதல், மலை

40. “தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே ”
இவ்வரிகள் எந்நிலத்தில் நிகழும் நிகழ்ச்சியை உணர்த்துகின்றன?
அ) குறிஞ்சி        ஆ) முல்லை            இ) மருதம்        ஈ) பாலை

41. “கல்லிடைப் பிறந்த ஆறும்” இதில் ‘கல்’ என்பதன் பொருள்?
அ) அருவி        ஆ) மலை             இ) பாறை        ஈ) மழை

42.முருகுகான் யாறு பாயும்” இதில் முருகு என்பதன் பொருள் என்ன?
1. தேன்        2. மணம்    3. அழகு    4. காடு
அ) 1, 2, 3         ஆ) 2, 3, 4        இ) 1, 2

43. “மல்லல்அம் செறுவில் காஞ்சி” இதில் செறு என்பதன் பொருள்
அ) செறுக்கு        ஆ) சோலை        இ) காடு        ஈ) வயல்

44. சரியான பொருளைத் தேர்ந்தெடு – மல்லல், விசும்பு
அ) குற்றம், வருத்தம்        ஆ) வளம், வருத்தம்        இ) வளம், வானம்         ஈ) குற்றம், வானம்

45. “நீண்ட பொரு கரிக்குருத்து அளந்து”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) சிறு செடி        ஆ) யானைத் தந்தம்         இ) வயல்        ஈ) சோலை

46. “குரைகழல் சிறுவர் போரில்
குலுங்கியே தெங்கின் காயைப் “
இதில் குறிப்பிடப்படும் ‘ போர் ‘ என்பதன் பொருள்
அ) போர்க்களம்    ஆ) வைக்கோற்போர்         இ) விவாதம்        ஈ) யானை

47. “புரைதபப் பறித்துக் காஞ்சிப்
புனைநிழல் அருந்து வாரே “
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) குற்றம்        ஆ) கனிகள்        இ) குற்றமின்றி         ஈ) தேன்

48.“நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும் ”
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?
அ) குறிஞ்சி        ஆ) முல்லை        இ) மருதம்             ஈ) நெய்தல்

49. “மலையெனத் துவரை நன்னீர்”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) ஒரு வகை தானியம்        ஆ) நிலவு        இ) வானம்        ஈ) பவளம்

50.சரியான பொருளைத் தேர்ந்தெடு
தும்பி, மரை
அ) ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, மான்            ஆ) ஒரு வகை வண்டு, தாமரை மலர்
இ) ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, தாமரை மலர்        ஈ) ஒரு வகை வண்டு, மலை

51.” இளமைதீர் மதியம் தன்னை ”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) சூரியன்        ஆ) நிலவு         இ) மலர்        ஈ) கடல்

52. “வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்”
இவ்வடிகள் எந்நிலத்தின் இயல்பைக் கூறுகின்றன
அ) குறிஞ்சி        ஆ) முல்லை        இ) மருதம்        ஈ) நெய்தல்

53. “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் ” என்று கூறியவர் யார்?
அ) காமராசர்        ஆ) அண்ணா         இ) பெரியார்        ஈ) வைரமுத்து

54. இலக்கணக் குறிப்புத் தருக.
இடிகுரல், மரைமுகம்
அ) உவமைத் தொகை                ஆ) வினைத் தொகை    
இ) 2ம் வேற்றுமைத் தொகை             ஈ) பண்புத்தொகை

55.இலக்கணக் குறிப்புத் தருக.
இன்னுயிர், பைங்கிளி
அ) உவமைத் தொகை                    ஆ) வினைத் தொகை  
இ) 2ம் வேற்றுமைத் தொகை                ஈ) பண்புத்தொகை


1 comment: