9th-std (unit - 7)
1. ‘இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு’ என்ற நூலுக்காக தமிகழ அரசின் பரிசு பெற்றவர்
a. தில்லான்        b. கேப்டன் தாசன்    c. மா.சு.அண்ணாமலை        d. நேதாஜி
2. தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்.
a. முத்துராமலிங்க தேவர்    b. தில்லான்        c. கேப்டன் தாசன்        d. நேதாஜி
3. ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்’ என்று கூறியவர்.
a. முத்துராமலிங்க தேவர்        b. தில்லான்        c. கேப்டன் தாசன்        d. நேதாஜி
4. சுதந்திர இந்தியாவின் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்.
a. முத்துராமலிங்க தேவர்        b. தில்லான்        c. கேப்டன் தாசன்    d. நேதாஜி
5. இந்திய தேசிய இராணுவத்தில் .......... என்ற பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
a. லட்சுமி        b. ஜானகி        c. ஜான்சிராணி        d. இராஜாமணி
6. இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலோயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?
a. 1942        b. 1944        c. 1946        d. 1947
7. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு.
a. 1942        b. 1944        c. 1946            d. 1947
8. கூற்று: இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான். ‘இந்தியதேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
காரணம்: இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்
a. கூற்றும் காரணமும் சரி        b. கூற்றும் காரணமும் தவறு    
c. கூற்று சரி, காரணம் தவறு        d. கூற்று தவறு, காரணம் சரி
9. ‘மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர்.
a. சர்ச்சில்        b. இராமு        c. கர்னல்        d. பிரபு
10. ........ என்பவரின் தலைமையில் இந்திய இராணுவப் படை உருவாக்கப்பட்டது.
a. கேப்டன் தாசன்        b. தில்லான்        c. மோகன்சிங்        d. நேதாஜி
11. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
a. சிலப்பதிகாரம்        b. சீவகசிந்தாமணி        c. குண்டலகேசி        d. கம்பராமாயணம்
12. சீவகசிந்தாமணியின் ஆசிரியர்.
a. சீத்தலைசாத்தனார்        b. வர்த்தமான தேவர்        c. திருத்தக்கத்தேவர்        d. கந்தியார்
13. சீவகசிந்தாமணி .......... சமயம் சார்ந்த நூல்.
a. சைவ        b. வைணவ        c. சமண            d. பௌத்த
14. சீவகசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் இயற்றிய நூல்.
a. சிந்தாமணிமாலை        b. நரிவிருத்தம்        c. சுரமஞ்சரி        d. விருத்தமாலை
15. சீவக சிந்தாமணியின் மற்றோரு பெயர்.
a. இன்பநூல்        b. துன்பநூல்        c. துறவுநூல்        d. மணநூல்
16. சீவகசிந்தாமணியின் காலம்........... நூற்றாண்டாகும்.
a. இரண்டாம்        b. ஐந்தாம்        c. ஒன்பதாம்        d. பத்தாம்
17. சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
a. 1300        b. 2358        c. 3145        d. 4679
18. சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை.
a. 13        b. 23        c. 33        d. 43
19. சீவகசிந்தாமணியின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
a. காதை        b. படலம்        c. சருக்கம்        d. இலம்பகம்
20. ‘இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும்’ என்ற மையக் கருத்தைக் கொண்ட காப்பியம்.
a. சிலப்பதிகாரம்        b. மணிமேகலை        c. சீவகசிந்தாமணி        d. குண்டலகேசி
21. முத்தொள்ளாயிரம் எப்பாவால் இயப்பட்டுள்ளது.
a. வெண்பா        b. அகவற்பா        c. கலிப்பா        d. வஞ்சிப்பா
22. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை.
a. 100        b. 103        c. 108        d. 132
23. இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்பு தருக.
a. உருவத்தொடர், வினைத்தொகை        b. பண்புத்தொகை, வினைத்தொகை
c. வினைத்தொகை, பண்புத்தொகை        d. பண்புத்தொகை, உருவகம்
24. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
a. வருக்கை – இருக்கை        b. புள் – தாவரம்        c. அள்ளல் – சேறு        d. மடிவு – தொடக்கம்
25. நச்சிலைவேல் கோக்கோதை நாடுஇ நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே.
a. பாண்டிய நாடு, சேர நாடு            b. சோழ நாடு, சேர நாடு    
c. சேர நாடு, சோழ நாடு            d. சோழநாடு, பாண்டியநாடு
26. அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் இந்நாட்டைக் குறிப்பிடுகிறது?
a. சேர நாடு        b. சோழ நாடு        c. பாண்டிய நாடு        d. அனைத்தும்
27. கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே, நல்யானைக் கோக்கிள்ளி நாடு’ இவ்வடிகளில் இம் பெறும் அணி எது?
a. உவமை அணி    b. உருவகம் அணி    c. வேற்றுபொருள் வைப்பணி        d. வேற்றுமை அணி
28. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்.
a. நக்கீரர்        b. கபிலர்        c. பரணர்        d. அறிய முடியவில்லை
29. முத்தொள்ளாயிரத்தின் காலம்.
a. மூன்றாம் நூற்றாண்டு    b. ஐந்தாம் நூற்றாண்டு        c. ஆறாம் நூற்றாண்டு         d. எட்டாம் நூற்றாண்டு
30. பொருத்துக.
1. சேர நாடு - ஏர்க்களச் சிறப்பு
2. சோழ நாடு – அச்சமில்லாத நாடு
3. பாண்டிய நாடு - முத்துடை நாடு
a. 2, 1, 3        b. 3, 1, 2            c. 3, 2, 1        d. 2, 3, 1
31. மதுரைக்காஞ்சி .......... அடிகளைக் கொண்டுள்ளது.
a. 150        b. 354            c. 782            d. 829
32. மதுரைக்காஞ்சியில் .......... அடிகள் மதுரைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
a. 150        b. 354        c. 782        d. 829
33. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்.
a. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்    
b. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
c. அதிவீரராம பாண்டியன்
d. சடையவர்மன் வீரபாண்டியன்
34. மதுரைக்காஞ்சியின் நூலாசிரியர்.
a. மாங்குடி மருதனார்        b. காரியாசான்        c. கபிலர்        d. அறியப்படவில்லை
35. ‘மாங்குடி’ என்ற ஊர் அமைந்துள்ள மாவட்டம்.
a. திருச்சி        b. சேலம்        c. திருநெல்வேலி        d. இராமநாதபுரம்
36. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்.
a. 10        b. 13        c. 18        d. 23
37. ‘ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
a. முத்தொள்ளாயிரம்        b. சிறுபஞ்சமூலம்    c. தமிழ்விடு தூது        d. மதுரைக்காஞ்சி
38. ‘பொறிமயிர் வாரணம்.... கூட்டுறை வயமாப் புலியொடு குழும’ என்ற பாடலடிகள் மூலம் மதுரையில் ........... இருந்ததை அறிய முடிகிறது.
a. மயில்கள் சரணாலயம்            b. பறவைகள் சரணாலயம்    
c. வனவிலங்கு சரணாலயம்            d. புலிகள் சரணாலயம்
39. ‘நியமம்’ என்பதன் பொருள்.
a. நீதி         b. தர்மம்        c. அங்காடி        d. ஆகமம்
40. ‘குழாஅத்து’ – இலக்கணக் குறிப்பு தருக.
a. இன்னிசை அளபெடை        b. சொல்லிசை அளபெடை
c. செய்யுளிசை அளபெடை        d. இயற்கை அளபெடை
41. புகழ்பெற்ற போச்சம்பள்ளிச் சந்தை அமைந்துள்ள மாவட்டம்.
a. திருச்சி        b. சேலம்        c. கிருஷ்ணகிரி        d. இராமநாதபுரம்
42. போச்சம்பள்ளிச் சந்தை ..... ஏக்கர் நிலப்பரப்பு உடையது.
a. 13        b. 15    c. 18            d. 20
43. மாட்டுத்தாவணி என்பதில், ‘தாவணி’ என்பதன் பொருள்.
a. ஆடை        b. தொழுவம்        c. சந்தை            d. கூட்டம்
44. பொருத்துக
1. மணப்பாறை – ஆட்டுச் சந்தை
2. அய்யலூர் - மாட்டுச் சந்தை
3. காராமணிக் குப்பம் - மீன் சந்தை
4. நாகப்பட்டினம் - கருவாட்டுச் சந்தை
a. 2, 3, 4, 1        b. 2, 1, 4, 3        c. 3, 2, 4, 1        d. 4, 1, 2, 3
45. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
a. ஒட்டன் சந்திரம் - காய்கறிச் சந்தை        b. தோவாளை - பூச் சந்தை
c. கடலூர் - மீன் சந்தை                d. ஈரோடு - ஜவுளிச் சந்தை
46. ஒன்றன் பெயர்ச்சொல் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்கு ஆகி வருவது.
a. தொழிற்பெயர்        b. ஆகுபெயர்    c. வினையாலணையும் பெயர்        d. வழக்கு
47. பொருத்துக.
வகுப்பறை சிரித்தது – 1.எண்ணலளவை ஆகுபெயர்
மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
பைங்கூர் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
a. 4, 3, 2, 1        b. 3, 2, 4, 1        c. 4, 3, 1, 2        d. 2, 1, 4, 3
48. ‘கார் அறுத்தான்’ – எவ்வகை ஆகுபெயர்?
a. பொருளாகு பெயர்        b. சினையாகு பெயர்    c. காலவாகு பெயர்    d. கருவியாகு பெயர்
49. அளவைப் பெயர்கள் ............ வகைப்படும்.
a. இரண்டு        b. மூன்று        c. நான்கு        d. ஐந்து
50. ஆகுபெயர்கள் ............. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
a. 6        b. 12        c. 16            d. 18

 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment