LATEST

Tuesday, March 5, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 17 Test - 9th std Tamil Unit 8

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 17 Test
 
 கேள்விகள் : 55                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்

 ___________________________________________________________________

 9th-std (unit - 8)


1. 20ம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர் யார்?

அ) காமராஜர்        ஆ) பெரியார்             இ) அண்ணா        ஈ) எம். ஜி. ஆர்


2. கீழ்க்கண்டவற்றுள் பெரியாரை குறிக்கும் பெயர்கள் எவை?

1. வெண்தாடி வேந்தர்                     

2. பகுத்தறிவுப் பகலவன்    

3. வைக்கம் வீரர்                    

4. ஈரோட்டுச் சிங்கம்

அ) அனைத்தும்        ஆ) 1, 3, 4        இ) 1, 4            ஈ) 3, 4


3. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே ____ ஆகும்.

அ) பகுத்தறிவு         ஆ) மூடப்பழக்க வழக்கம்        இ) சிந்தனை        ஈ) செயல்


4. “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் “ என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்             இ) பாரதியார்          ஈ) வள்ளலார்


5.சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால், வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகிறது. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தியவர் யார்?

அ) அம்பேத்கர்        ஆ) பெரியார்         இ) பாரதியார்         ஈ) வள்ளலார்


6. ‘மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?’ என்று பகுத்தறிவு வினாக்களை எழுப்பியவர் யார்?

அ) அம்பேத்கர்        ஆ) பெரியார்         இ) பாரதியார்        ஈ) வள்ளலார்


7. சமூக வளர்ச்சிக்கு ____ஐ மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.

அ) செல்வம்        ஆ) தொழில்            இ) உரிமை        ஈ) கல்வி


8. கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கர்        ஆ) பெரியார்          இ) பாரதியார்         ஈ) வள்ளலார்


9. “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. சுய சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்         இ) பாரதியார்            ஈ) அண்ணா


10. ‘பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும்’ என்று நம்பியவர் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்         இ) பாரதியார்             ஈ) அண்ணா


11. மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) அண்ணா        ஆ) பெரியார்         இ) பாரதியார்        ஈ) வள்ளலார்


12.பெரியாரின் மொழி சீரமைப்புகளை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது?

அ) 1987            ஆ) 1986        இ) 1968            ஈ) 1978


13. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என பெரியார் கூறினார்?

அ) 33            ஆ) 40                இ) 50             ஈ) 43


14. கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கூற்றுகள் எவை?

1. இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது.

2. கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

3. குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

4. குடும்பச் சொத்தில் ஆண்களுக்கு சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.

அ) அனைத்தும் சரி        ஆ) 2, 3            இ) 3, 4            ஈ) 1, 3, 4


15.கீழ்க்கண்டவற்றுள் பெரியார் விதைத்த விதைகள் எவை?

1. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு. 2. பெண்களுக்கான இடஒதுக்கீடு

3. பெண்களுக்கான சொத்துரிமை             4. குடும்ப நலத்திட்டம்

5. சீர்திருத்த திருமணச் சட்டம் ஏற்பு

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 4        இ) 1, 3, 5        ஈ) 2, 3, 5


16. எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ. வெ. ரா. வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?

அ) மதுரை        ஆ) கோவை           இ) கேரளா            ஈ) சென்னை


17.ஈ. வெ. ரா. வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் _____.

அ) 1937 நவம்பர் 13        ஆ) 1970 அக்டோபர் 5        இ) 1938 நவம்பர் 13     ஈ) 1970 ஜூன் 27


18. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்

அ) 1937 நவம்பர் 13        ஆ) 1970 அக்டோபர் 5        இ) 1938 நவம்பர் 13          ஈ) 1970 ஜூன் 27


19. பெரியாரின் சிந்தனைகள் குறித்த அறிஞரின் மதிப்பீடுகளில் எது சரியனது?

1. பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவுகோல்

2. பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டி

3. மனித நேயத்தின் அழைப்புமணி

4. ஆதிக்கசக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி

5. சமூக சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2, 4 சரி        இ) 3, 4, 5 சரி            ஈ) 1, 3, 4 சரி


20. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு ____.

அ) 1921            ஆ) 1923                இ) 1925             ஈ) 1927


21. கீழ்க்கண்டவற்றுள் பெரியார் நடத்திய இதழ்கள் எவை?

1. குடியரசு    2. விடுதலை            3. உண்மை            4. ரிவோல்ட்

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2, 3 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 2 சரி


22. “ முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி ”

– இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அ) நா. முத்துக்குமார்         ஆ) ந. பிச்சமூர்த்தி         இ) ஈரோடு தமிழன்பன்        ஈ) தாராபாரதி


23. ‘பெருமரத்துடன் போட்டியிடுகிறது’ என்று ந. பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிடும் மரம் எது?

அ) கமுகு         ஆ) தென்னை            இ) பனை        ஈ) மூங்கில்


24. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என்று கூறியவர் யார்?

அ) வைரமுத்து        ஆ) கல்கி        இ) வல்லிக்கண்ணன்         ஈ) நா. முத்துக்குமார்


25. “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) வைரமுத்து        ஆ) கல்கி        இ) வல்லிக்கண்ணன்                ஈ) நா. முத்துக்குமார்


26. புதிய படைப்புச் சூழலில் மரபுக் கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் ____ எனப்பட்டன.

அ) ஹைக்கூ       ஆ) வசனக்கவிதைகள்    இ) சிறுகதைகள்     ஈ) புதுக்கவிதைகள்


27. யாரின் வசனக் கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில்

ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.

அ) பாரதியார்         ஆ) பாரதிதாசன்    இ) வல்லிக்கண்ணன்            ஈ) சுரதா


28. “புதுக்கவிதையின் தந்தை” எனப் போற்றப்படுபவர் யார்?

அ) பாரதியார்        ஆ) பாரதிதாசன்    இ) வல்லிக்கண்ணன்        ஈ) ந. பிச்சமூர்த்தி


29. ந. பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?

1. வழக்குறைஞர்    

2. ஆசிரியர்        

3. உயர்நீதிமன்ற நீதிபதி

4. இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்

அ) 1, 2            ஆ) 1, 3                இ) 1, 2, 3        ஈ) 1, 4


30.கீழ்க்கண்டவற்றுள் ந. பிச்சமூர்த்தி அவர்கள் துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?

1. இந்தியா    

2. நவசக்தி            

3. நவஇந்தியா            

4. ஹனுமான்

அ) 1, 4            ஆ) 1, 3            இ) 2, 4            ஈ) 3, 4


31. “ஒரு பக்கம் இருத்தலின் பலன் கிடைக்கிறது;

இன்னொரு பக்கம் இருத்தலின்மையைப் பயன்படுத்திக்கொள்கிறோம்”

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) ஜென்        ஆ) லாவோட்சு             இ) தாவோ           ஈ) கன்பூசியஸ்


32.பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – இணைகின்றன

அ) இணை + கின்று + அ            ஆ) இணை + கிறு + அன் + அ

இ) இணை + கின்று + அன் + அ            ஈ) இணை + கிறு + அ


33. இலக்கணக் குறிப்புத் தருக – பாண்டம் பாண்டமாக

அ) எண்ணும்மை    ஆ) உம்மைத்தொகை        இ) இரட்டைக்கிளவி          ஈ) அடுக்குத் தொடர்


34. இலக்கணக் குறிப்புத் தருக – வாயிலும் சன்னலும்

அ) எண்ணும்மை         ஆ) உம்மைத்தொகை     இ) பண்புத்தொகை        ஈ) அடுக்குத் தொடர்


35. “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே ”

இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) சிலப்பதிகாரம்        ஆ) மணிமேகலை    இ) ஏலாதி         ஈ) யசோதர காவியம்


36. “நசை பெரிது உடையர்”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) வழங்குதல்        ஆ) தொந்தரவு           இ) கடுஞ்சொல்        ஈ) விருப்பம்


37. சரியான பொருளைத் தேர்ந்தெடு

நல்கல், பொளிக்கும்

அ) விருப்பம், அளிக்கும்                ஆ) அன்பு, அளிக்கும்  

இ) வழங்குதல், உரிக்கும்                 ஈ) அன்பு, உரிக்கும்


38. சரியான பொருளைத் தேர்ந்தெடு--பிடி, வேழம்

அ) ஆண் யானை, பெண் யானை         ஆ) பெண் யானை, ஆண் யானை

இ) ஆண் குரங்கு, பெண் குரங்கு            ஈ) பெண் குரங்கு, ஆண் குரங்கு


39. “மென்சினை யாஅம் பொளிக்கும்”

இதில் ‘யா’ என்பதன் பொருள்

அ) ஒரு வகை யானை           ஆ ) ஒரு வகை மரம்       இ) ஒரு வகை குரங்கு          ஈ) ஒரு வகை மலர்


40. இலக்கணக் குறிப்புத் தருக – களைஇய

அ) இன்னிசை அளபெடை                ஆ) செய்யுளிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை                 ஈ) வினையெச்சம்


41. இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை, மென்சினை

அ) வினைத்தொகை                ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை                ஈ) உம்மைத்தொகை


42.  குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை                 ஆ) பத்துப் பாட்டு    

இ) ஐம்பெருங்காப்பியம்            ஈ) ஐஞ்சிறுங்காப்பியம்


43.குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்கள் உள்ளன?

அ) 400            ஆ) 401                இ) 402                ஈ) 403


44.குறுந்தொகையில் உள்ள பாடல்களின் அடி எல்லை எவ்வளவு?

அ) 9-12 அடி        ஆ) 4-8 அடி         இ) 3-6 அடி        ஈ) 4-12 அடி


45.குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

அ) உ. வே. சா                        ஆ) ஞானப்பிரகாசம்

இ) செளரிப் பெருமாள் அரங்கனார்             ஈ) ஆறுமுக நாவலர்


46.பாலை பாடிய பெருங்கடுங்கோ கீழ்க்கண்ட எந்த மரபைச் சேர்ந்தவர்?

அ) சேர மரபு         ஆ) சோழ மரபு    இ) பாண்டிய மரபு        ஈ) பல்லவர் மரபு


47.பெருங்கடுங்கோ என்பவர் _____ நூலில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப்படுகிறார்.

அ) நற்றிணை        ஆ) குறுந்தொகை        இ) ஐங்குறுநூறு    ஈ) கலித்தொகை


48. “நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம். . . . ”

என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?

அ) 27            ஆ) 28            இ) 37             ஈ) 38


49.சு. சமுத்திரம் அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

அ) இராமநாதபுரம்-திப்பணம்பட்டி                ஆ) தூத்துக்குடி- திப்பணம்பட்டி

இ) திருநெல்வேலி – திப்பணம்பட்டி                 ஈ) விருதுநகர் – திப்பணம்பட்டி


50. சு. சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

அ) 200            ஆ) 300                 இ) 400                ஈ) 350


51. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் எவை?

1. வாடாமல்லி    

2. பாலைப் புறா    

3. மண்சுமை   

4. தலைப்பாகை    

5. காகித உறவு

அ) அனைத்தும் சரி            ஆ) 1, 2, 5 சரி         இ) 2, 3, 5 சரி          ஈ) 2, 3, 4 சரி


52. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற

நாவல் எது?

அ) வாடாமல்லி    ஆ) குற்றம் பார்க்கில்        இ) மண்சுமை          ஈ) வேரில் பழுத்த பலா


53. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசின் பரிசை பெற்ற சிறுகதைத் தொகுதி எது?

அ) வாடாமல்லி    ஆ) குற்றம் பார்க்கில்         இ) மண்சுமை       ஈ) வேரில் பழுத்த பலா


54.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.

2. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ‘அணி’ இலக்கண இயல்பாகும்.

அ) அனைத்தும் சரி         ஆ) 1 மட்டும் சரி    இ) 2 மட்டும் சரி             ஈ) இரண்டும் தவறு.


55.அணிகளில் இன்றியமையாதது _____ அணி ஆகும்.

அ) உருவக அணி    ஆ) உவமை அணி     இ) எடுத்துக்காட்டுவமையணி    ஈ ) உவமேயம்



No comments:

Post a Comment