LATEST

Tuesday, March 5, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 18 Test - 9th std Tamil Unit 9

 

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 18 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

9th - std (unit - 9)


1. “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று கூறியவர் யார்?

அ) கணிமேதாவியார்    ஆ) ஆலத்தூர் கிழார்         இ) திருவள்ளுவர்        ஈ) ஒளவையார்


2. பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.

அ) பஃருளி மலை                ஆ) விந்திய, சாத்பூரா       

இ) சாத்பூரா, இமயமலை            ஈ) விந்தியமலை, இமயமலை


3. “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று திருக்குறளை பற்றிக் கூறியவர் யார்?

அ) கோர்டன்        ஆ) தெறன்ஸ்        இ) ஆல்பர்ட் சுவைட்சர்


4. “படுதிரை வையம் பாத்திய பண்பே” என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அ) நன்னூல்    ஆ) தொல்காப்பியம்        இ) திருக்குறள்        ஈ) சிலப்பதிகாரம்


5. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்”

இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

அ) அகநானூறு        ஆ) புறநானூறு        இ) தொல்காப்பியம்        ஈ) திருக்குறள்


6. “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்

தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே”

இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

அ) அகநானூறு        ஆ) புறநானூறு        இ) தொல்காப்பியம்        ஈ) திருக்குறள்


7. திருக்குறளில் கூறப்படும் ‘பூட்கைமகன்’ என்பதன் பொருள் யாது?

அ) செல்வமகன்                ஆ) தொழில்புரியும் மாந்தன்

இ) குறிக்கோள் மாந்தன்             ஈ) விவசாயம் செய்பவர்


8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் பலர்.

2. அவர்கள் தனிமையாகத் தம் இல்லங்களில் வாழ்ந்து வருவர்.

3. திருக்குறளின் சான்றோர் சிலர்.

4. அவர்களின் இயல்புகள் எல்லாம் பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நட்பு முதலான அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அ) அனைத்தும் சரி        ஆ) 1, 2, 3 சரி        இ) 2, 3, 4 சரி        ஈ) 2, 4 சரி


9. பின்வருவனவற்றுள் ஸ்டாயிக்வாதிகள் கற்பித்தவை எவை?

1. உலகில் ஒற்றுமை உண்டு

2. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர்

3. எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 3 சரி


10. “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” என்று கூறியவர் யார்?

அ) மார்க்ஸ் அரேலியஸ்     ஆ) தெறன்ஸ்        இ) ஆல்பர்ட் சுவைட்சர்          ஈ) செனக்கா


11. தனிநாயகம் அடிகள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

1. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.

2. அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.

3. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பினார்.

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 3 சரி


12. உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது சரியானது?

அ) 1960 – பாரீசு        ஆ) 1974 – மதுரை        இ) 1981 – யாழ்பாணம்           ஈ) 1987 – கோலாலம்பூர்


13. உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் ____ வழியாகத் தொடங்கினார்.

அ) உரைநடைக் கவிதை    ஆ) பத்திரிக்கைகள்        இ) வசனக் கவிதை        ஈ) செய்யுள்கள்


14. “சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்”

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) அமுதோன்        ஆ) நா. முத்துக்குமார்        இ) கவிஞர் பாஷோ        ஈ) கல்யாண்ஜி


15. இலக்கணக் குறிப்புத் தருக – அனைவரும்

அ) எண்ணும்மை        ஆ) உம்மைத் தொகை        இ) பண்புத்தொகை        ஈ) முற்றும்மை


16. கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?

அ) கல்யாணபெருமாள்            ஆ) கல்யாணசுந்தரம்   

இ) கல்யாண்                ஈ) கல்யாணராமன்


17. கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ____ என்ற பெயரில் வெளியானது.

அ) சில இறகுகள் சில பறவைகள்         ஆ) கலைக்க முடியாத ஒப்பனைகள்

இ) அகமும் புறமும்                ஈ) உயரப் பறத்தல்


18. கல்யாண்ஜி அவர்கள் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்?

அ) 2015        ஆ) 2016         இ) 2017        ஈ) 2018


19. “வெட்டுக்கிளியின் சப்தத்தில்

மலையின் மெளனம்

ஒரு கணம் அசைந்து திரும்புகிறது”

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) அமுதோன்        ஆ) நா. முத்துக்குமார்        இ) கவிஞர் பாஷோ        ஈ) கல்யாண்ஜி


20. குறுந்தொகை____ என்னும் அடைமொழிக் கொண்டு அழைக்கப்படுகிறது.

அ) ஓங்கு        ஆ) நல்        இ) நல்ல        ஈ) நன்மை


21. “நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின – தோழி அவர் சென்ற ஆறே”

இப்பாடலை இயற்றியவர் யார்?

அ) குறிஞ்சி கபிலர்    ஆ) ஓதலாந்தையார்    இ) பாலை பாடிய பெருங்கடுங்கோ         ஈ) ஓரம்போகியார்


22. சரியான பொருளைத் தேர்ந்தெடு

பிடி, வேழம்

அ) ஆண் யானை, பெண் யானை        ஆ) பெண் யானை, ஆண் யானை

இ) ஆண் குரங்கு, பெண் குரங்கு        ஈ) பெண் குரங்கு, ஆண் குரங்கு


23.இலக்கணக் குறிப்புத் தருக – களைஇய

அ) இன்னிசை அளபெடை            ஆ) செய்யுளிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை             ஈ) வினையெச்சம்


24. இலக்கணக் குறிப்புத் தருக – அன்பின

அ) ஒன்றன்பால் வினைமுற்று                ஆ) பலவின்பால் உயர்திணை வினைமுற்று

இ) பலவின்பால் அஃறிணை வினைமுற்று         ஈ) தன்மை பன்மை வினைமுற்று


25. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உடையர்

அ) உடை + யர்        ஆ) உடை + ய் + ஆர்        இ) உடை + ய் + அர்         ஈ) உடைய + அர்


26. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்கள் உள்ளன?

அ) 400        ஆ) 401        இ) 402        ஈ) 403


27. சு. சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

அ) 200        ஆ) 300         இ) 400        ஈ) 350


28. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் எது?

அ) வாடாமல்லி    ஆ) குற்றம் பார்க்கில்        இ) மண்சுமை        ஈ) வேரில் பழுத்த பலா


29. “இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”

என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி?

அ) உருவக அணி    ஆ) உவமை அணி     இ) எடுத்துக்காட்டுவமையணி        ஈ) பின்வருநிலையணி


30. பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?

அ) 2            ஆ) 3             இ) 4            ஈ) 5


31. புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் _____ அணி ஆகும்.

அ) எடுத்துக்காட்டுவமையணி        ஆ) உவமையணி    இ) உருவக அணி    ஈ) வஞ்சப்புகழ்ச்சியணி


32. கீழ்காணும் குறட்பாவில் அமைந்த அணி வகையை கண்டறி.

“ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்”

அ) எடுத்துக்காட்டுவமையணி                ஆ) உவமையணி   

இ) ஏகதேச உருவக அணி                 ஈ) வஞ்சப்புகழ்ச்சியணி


33. ‘யா’ மரத்தின் பட்டையை உரித்தது எது?

அ) ஆண் யானை         ஆ) பெண் யானை        இ) தலைவன்        ஈ) தோழி


34. ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும் நூல் எது?

அ) இராமாயணம்        ஆ) மகாபாரதம்        இ) சிலப்பதிகாரம்    ஈ) நன்னூல்


35. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. நளவெண்பா – கம்பன்

2. கலிங்கத்துப்பரணி – சயங்கொண்டார்

3. விருத்தம் என்னும் ஒண்பா – புகழேந்திப் புலவர்

அ) அனைத்தும் சரி        ஆ) 1, 3 சரி        இ) 2 மட்டும் சரி        ஈ) 1, 2 சரி


36. பொருத்துக

1. குரிசில் – i) அச்சு

2. நயம் – ii) மேன்மை

3. இருசு – iii) தலைவன்

4. தலையளி – iv) செலுத்துதல்

5. உய்த்தல் – v) கருணை

அ) i ii iii iv v        ஆ) iii i ii iv v        இ) v iv iii ii i        ஈ) iii ii i v iv


37. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. சிற்பியின் மகள் – பூவண்ணன்

2. அப்பா சிறுவனாக இருந்த போது – அலெக்சாந்தர் ரஸ்கின்.

அ) அனைத்தும் சரி     ஆ) 1 மட்டும் சரி            இ) 2 மட்டும் சரி        ஈ) இரண்டும் தவறு


38. செய்யுளில் முன்வந்த பொருளே பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _____ அணியாகும்.

அ) சொற்பின்வருநிலையணி                ஆ) பொருள்பின்வருநிலையணி

இ) சொற்பொருள்பின்வருநிலையணி            ஈ) எடுத்துக்காட்டுவமையணி


39. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதலே ____ அணியாகும்.

அ) உருவக அணி    ஆ) உவமை அணி    இ) எடுத்துக்காட்டுவமையணி        ஈ) பின்வருநிலையணி


40. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது ____அணி ஆகும்.

அ) உருவக அணி     ஆ) உவமை அணி    இ) எடுத்துக்காட்டுவமையணி        ஈ) பின்வருநிலையணி


41. “மலர்ப்பாதம்” இத்தொடர் குறித்த செய்திகளில் எது தவறானது?

1. இத்தொடரில் மலருக்கு பாதம் உவமையாக கூறப்படுகிறது.

2. பாதம் – உவமேயம்

3. மலர் – உவமை

4. போன்ற – உவமஉருபு

அ) அனைத்தும் சரி        ஆ) 1, 4 சரி        இ) 2, 4 சரி        ஈ) 2, 3, 4 சரி


42. பெருங்கடுங்கோ என்பவர் _____ நூலில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப்படுகிறார்.

அ) நற்றிணை        ஆ) குறுந்தொகை        இ) ஐங்குறுநூறு        ஈ) கலித்தொகை


43. குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

அ) உ. வே. சா        ஆ) ஞானப்பிரகாசம்    இ) செளரிப் பெருமாள் அரங்கனார்     ஈ) ஆறுமுக நாவலர்


44. குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை                 ஆ) பத்துப் பாட்டு   

இ) ஐம்பெருங்காப்பியம்            ஈ) ஐஞ்சிறுங்காப்பியம்


45. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பொளிக்கும்

அ) பொளி + க் + கும்                ஆ) பொளி + க் + உம்

இ) பொளி + க் + க் + கும்            ஈ) பொளி + க் + க் + உம்


46. கல்யாணசுந்தரம் அவர்கள் _____ என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.

அ) வாணிதாசன்        ஆ) கல்யாண்ஜி        இ) வண்ணதாசன்     ஈ) கல்யாண்


47. கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?

அ) கல்யாணபெருமாள்        ஆ) கல்யாணசுந்தரம்   

இ) கல்யாண்                ஈ) கல்யாணராமன்


48. புதுக்கவிதைகள் ______ஐ வலியுறுத்துவனவாக இருக்கின்றன.

அ) ஈகை        ஆ) கருணை        இ) மனிதநேயம்         ஈ) ஆளுமை


49. 2010ல் செம்மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?

அ) சென்னை        ஆ) மதுரை        இ) தஞ்சாவூர்        ஈ) கோவை


50. உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது சரியானது?

அ) 1960 – பாரீசு        ஆ) 1974 – மதுரை        இ) 1981 – யாழ்பாணம்        ஈ) 1987 – கோலாலம்பூர்




1 comment: