LATEST

Wednesday, March 6, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 19 Test - 10th std Tamil Unit 1

 

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 19 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

 10th - std (unit - 1)

1. “சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று கூறியவர் யார்?

A) இரசூல் கம்சதேவ்        B) பாரதிதாசன்        C) சச்சிதானந்தன்     D) ஆறுமுக நாவலர்

2. கீழ்க்கண்டவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?

1. உலகியல் நூறு 2. பாவியக்கொத்து

3. நூறாசிரியம் 4. மகபுகுவஞ்சி

5. பள்ளிப் பறவைகள்

A) அனைத்தும் சரி         B) 2, 3, 5 சரி        C) 1, 3, 4 சரி            D) 1, 4, 5 சரி

3. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது.

A) திருக்குறள் உரை                B) திருக்குறள் ஞான உரை

C) திருக்குறள் மெய்ப்பொருளுரை         D) திருக்குறள் மெய்யுரை

4. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று கூறியவர் யார்?

A) பாரதியார்         B) பாரதிதாசன்        C) நாமக்கல் கவிஞர்        D) பேரறிஞர் அண்ணா

5. கீழ்க்கண்ட தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது?

A) தாள் – நெல், கேழ்வரகு                B) தண்டு – கீரை, வாழை

C) கோல் – நெட்டி, மிளகாய்ச் செடி            D) தூறு – மூங்கிலின் அடி

6. கீழ்க்கண்ட காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது?

A) கட்டை – காய்ந்த கொம்பும் கவையும் அடியும்        B) சுள்ளி – காய்ந்த குச்சி

C) விறகு – காய்ந்த கிளை                    D) வெங்கழி – காய்ந்த கழி

7. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. சண்டு – காய்ந்த இலை

2. சருகு – காய்ந்த தாளும் தோகையும்

A) இரண்டும்         B) 1 மட்டும்        C) 2 மட்டும்        D) எதுவுமில்லை

8. இரா. இளங்குமரனார் குறித்த கூற்றுகளில் எது தவறானது?

A) பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்

B) தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்

C) தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்

D) இசையாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்

9. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக் கூடாது என்று எண்ணியவர் யார்?

A) திரு.வி.க        B) இரா. இளங்குமரனார்        C) இளங்குமணன்    D) மீனாட்சி சுந்தரனார்

10. தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர் யார்?

A) அண்ணா        B) இரா.இளங்குமரனார்        C) இளங்குமணன்    D) மீனாட்சி சுந்தரனார்

11. கீழ்க்கண்ட தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களில் சரியானது எது / எவை?

1. மூசு – பலாப்பிஞ்சு

2. குரும்பை – முற்றாத தேங்காய்

3. முட்டுக்குரும்பை – சிறு குரும்பை

4. இளநீர் – தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

A) அனைத்தும் சரி        B) 1, 3 சரி        C) 2, 4 சரி        D) 1, 2, 3 சரி

12. தாவரங்களின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது?

A) கொத்து – அவரை, துவரை முதலியவற்றின் குலை        B) குலை – வாழைக்குலை

C) கதிர் – கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்        D) சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி

13. பொருத்துக

1. சூம்பல் – i) நுனியில் சுருங்கிய காய்

2. சிவியல் – ii) சுருங்கிய பழம்

3. சொத்தை – iii) புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி

4. வெம்பல் – iv) சூட்டினால் பழுத்த பிஞ்சு

A) iv iii ii I        B) i ii iii iv        C) ii i iv iii        D) iv ii i iii

14. பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களில் எது சரி?

A) மட்டை – மிக மெல்லியது

B) தொலி – தேங்காய் நெற்றின் மேற்பகுதி

C) கொம்மை – வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

D) தோடு – நெல், கம்பு முதலியவற்றின் மூடி

15. தானியங்களுக்கு வழங்கும் சொற்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு?

A) முத்து – வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து

B) தேங்காய் – தென்னையின் வித்து

C) கொட்டை – புளி, காஞ்சிரை முதலியவற்றின் வித்து

D) முதிரை – அவரை, துவரை முதலிய பயறுகள்

16. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. குட்டி – விளாவின் இளநிலை

2. மடலி – பனையின் இளநிலை

3. வடலி – பனையின் இளநிலை

4. பைங்கூழ் – நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

A) அனைத்தும் சரி         B) 1, 2, 4 சரி        C) 1, 3, 4 சரி        D) 2, 3 சரி

17. கீழ்வருனவற்றுள் நெல்லின் வகைகளில் அல்லாதது எது?

1. சம்பா         

2. மட்டை         

3. கார்

4. கார்நெல்             

5. வெண்ணெல்        

6. செந்நெல்

A) அனைத்தும் சரி         B) 2, 3 தவறு        C) 2, 4 தவறு        D) 2, 3, 5 தவறு

18. “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே ” என்று கூறியவர் யார்?

A) இராமலிங்கனார்        B) அய்யாத்துரையார்        C) அப்பாத்துரையார்            D) துரை மாணிக்கம்

19. பாவாணர் ____ கட்டுரையில் வித்துவகை, வேர் வகை, அரித்தாள்வகை, காய்ந்த இலைவகை போன்ற பல்வேறு பொருட்களின் வகைகளை பற்றி கூறியுள்ளார்.

A) தமிழ்வளம்        B) தமிழ்ச்சொல்    C) தமிழ்ச்சொல்வளம்         D) சொல்வளம்

20. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?

A) பரிதிமாற் கலைஞர்        B) தேவநேயப் பாவாணர்    C) அறிஞர் அண்ணா        D) பெரியார்

21. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் ______வரி வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

A) ஆங்கிலம்        B) எகிப்தியம்        C) ரோமன்         D) கிரேக்கம்

22. கீழ்வருவனவற்றுள் ‘சொல்லுதல்’ எனும் பொருள் தரும் சொற்கள் எவை?

1. விளம்புதல்     

2. செப்புதல்     

3. உரைத்தல்        

4. கூறல்         

5. இயம்பல்

A) அனைத்தும் சரி         B) 3, 4, 5 சரி        C) 2, 4, 5 சரி        D) 1, 3, 4 சரி

23. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்”

– அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

1. விளம்புதல்        2. கற்பது         3. தருதல்        4. வாங்குவது

A) 1, 2        B) 2, 3         C) 3, 4            D) 1, 4

24. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது _____அணி எனப்படும்.

A) பிறிது மொழிதல் அணி    B) உவமை அணி    C) எடுத்துக்காட்டுவமையணி        D) சிலேடை அணி

25. சந்தக் கவிமணி தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

A) 11        B) 12             C) 13                D) 14

26. “காலையிலேயே மாலையும் வந்து விட்டதே” என்று கூறியவர் யார்?

A) கி.வா. ஜகந்நாதன்         B) இசை விமர்சகர் சுப்புடு        C) கி.ஆ.பெ. விசுவநாதன்

27. “திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று உவமையை பயன்படுத்தியவர் யார்?

A) ஈரோடு தமிழன்பன்        B) கல்கி        C) நா. பார்த்தசாரதி     D) சுரதா

28. ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்’ என்று உருவகத்தை பற்றி எழுதியவர் யார்?

A) குன்னூர்க் கிழார்        B) தொல்காப்பியர்        C) தண்டி         D) நக்கீரர்

29. “களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைத்தான் அதற்குச் சான்று” என்பது யாருடைய உரைநடை

A) பெரியார்        B) அண்ணா        C) திரு.வி.க        D) மீனாட்சி சுந்தரனார்

30. “புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும் ”

இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி

A) உவமையணி                B) உருவக அணி        

C) எடுத்துக்காட்டுவமை அணி         D) பிறிது மொழிதல் அணி

31. “மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்று முற்றும் பார்ப்பேன்; மனம் அமைதி எய்தும் ” என்று எழுதியவர் யார்?

A) நா. பார்த்தசாரதி        B) தண்டி            C) வ.ராமசாமி        D) திரு.வி.க

32. “நாட்டுப்பற்று” என்னும் கட்டுரைத் தொகுப்பு யாருடையது?

A) மு.வ         B) ரா.பி.சேதுப்பிள்ளை        C) வ.ராமசாமி        D) திரு.வி.க

33. “இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?” என்பது கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டு

A) இணை ஒப்பு        B) இலக்கணை        C) ஒப்பு எல்லை    D) முரண்படு மெய்ம்மை

34. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவது ______ எனப்படும்.

A) எதிரிணை இசைவு         B) இலக்கணை        C) சொல்முரண்        D) முரண்படு மெய்ம்மை

35. மா. இராமலிங்கம் (எ) எழில் முதல்வன் எந்த நூலுக்காக சாகித்திய அகாடெமி பரிசு பெற்றார்

A) இனிக்கும் நினைவுகள்            B) எங்கெங்கு காணினும்

C) யாதுமாகி நின்றாய்                D) புதிய உரைநடை

36. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற இலக்கியத் தொடரில் அமைந்துள்ள நயம்

A) உவமை        B) உருவகம்        C) மோனை        D) எதுகை

37. அளபெடுத்தல் என்பதன் பொருள் _____

A) நீண்டு ஒலித்தல்         B) குறுகி ஒலித்தல்        C) வாய்ப்பாடு        D) அசை

38. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளிப்படுத்தல் _______ அளபெடை என்பர்

A) செய்யுளிசை அளபெடை             B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை            D) ஒற்றளபெடை

39. இசை நிறை அளபெடை என அழைக்கப்படும் அளபெடை எது?

A) செய்யுளிசை அளபெடை             B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை            D) ஒற்றளபெடை

40. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது _____ அளபெடை.

A) செய்யுளிசை அளபெடை            B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை            D) ஒற்றளபெடை

41. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது _____ ஆகும்

A) தனி மொழி        B) தொடர் மொழி    C) பொது மொழி         D) எழுத்து மொழி

42. ‘வாழ்க்கை’ என்ற தொழிற் பெயரின் வினையடி மற்றும் விகுதி

A) வாழ்வு, கை        B) வாழ்வு, ஐ        C) வாழ், கை         D) வாழ், ஐ

43. வினையாலணையும் பெயர் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

A) தொழிலை செய்யும் கருத்தாவைக் குறிக்கும்            B) காலம் காட்டாது

C) மூவிடத்திற்கும் உரியது                    D) எ. கா.: பாடியவள், படித்தவர்

44. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

A) எந் + தமிழ் + நா            B) எந்த + தமிழ் + நா    

C) எம் + தமிழ் + நா             D) எந்தம் + தமிழ் + நா

45. பொருத்துக

1. Vowel – i) மெய்யெழுத்து

2. Consonant – ii) உயிரெழுத்து

3. Homograph – iii) ஒரு மொழி

4. Monolingual – iv) ஒப்பெழுத்து

A) i ii iii iv        B) i iii ii iv        C) i ii iv iii        D) ii i iv iii


No comments:

Post a Comment