மேக்மீ மெடல்
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 20 Test
10th - std (unit - 2)
1. _________________ என்பவர் உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
A) வள்ளலார் B) தொல்காப்பியர் C) சயம் கொண்டார் D) மாணிக்கவாசகர்
2.திருமூலர் தம் ______________ நூலில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.
A) திருமந்திரம் B) திருமூலர் காவியம் C) ஆறாதாரம் D) தீட்சை விதி
3.பிற்கால ஔவையார் தம் குறளில் _______________ எனும் அதிகாரத்தில், “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று காற்றைச் சிறப்பித்துள்ளார்.
A) காற்றின் உயிர் B) வாயு C) காற்றாவி D) வாயுதாரணை
4. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. காற்றுக்கு இந்தப் பூவுலகில் பல பெயர்கள் உண்டு.
II. காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.
III. பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று, சூறாவளிக்காற்று எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II, III அனைத்தும் சரி D) I, II, III அனைத்தும் தவறு
5. தென்றலாகிய நான், பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், _____________ என்பவர் என்னை, “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்று கூறுகிறார்.
A) இளங்கோவடிகள் B) மாணிக்கவாசகர் C) ஒளவையார் D) கம்பர்
6. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) மணிமேகலை B) சிலப்பதிகாரம் C) கம்பராமாயணம் D) கம்பர்
7. “பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது” என்னும் சிற்றிலக்கிய நூலின் ஆசிரியர் யார்?
A) பட்டினத்துப் பிள்ளையார் B) காளமேகப் புலவர்
C) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் D) காரைக்கால் அம்மையார்
8.“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) முகில்விடுதூது B) திருத்தணிகை மயில்விடு தூது
C) சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது D) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
9. “நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே” எனப் பாடியவர்?
A) கண்ணதாசன் B) வாலி C) மருதகாசி D) பட்டுக்கோட்டை
10.சரியாகப் பொருந்தியது எது?
I. கிழக்கு (குணக்கு) – கொண்டல்
II. மேற்கு (குடக்கு) – கோடை
III. வடக்கு – வாடை
IV. தெற்கு – தென்றல்
A) I, II, III மட்டும் சரி B) I, II, III, IV அனைத்தும் சரி C) III, IV மட்டும் சரி D) IV மட்டும் சரி
11. முந்நீர் நாவாய் ஓட்டியாக காற்று (வளி): பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால் தான் நிகழ்ந்தன. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று பாடியவர் யார்?
A) அஞ்சில் அஞ்சியார் B) ஒக்கூர் மாசாத்தியார் C) வெண்ணிக் குயத்தியார் D) வெள்ளி வீதியார்
12.“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்ற பாடல்வரி _______________ அவர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்.
A) விசயாலய சோழன் B) கண்டராதித்தர் C) உத்தம சோழன் D) கரிகால் பெருவளத்தான்
13. சரியானது எது? ஹிப்பாலஸ் பருவக்காற்று:
I. கி. பி. (பொ. ஆ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்ய புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
II. அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன.
III. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர் (கிரேக்கரும் உரோமானியரும் யவனர் ஆவர்.) அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.
IV. ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.
A) I, II, III, IV அனைத்தும் சரி B) I, II மட்டும் சரி C) II, III மட்டும் சரி D) III, IV மட்டும் சரி
14.சரியானது எது?
I. கிரேக்க அறிஞர் “ஹிப்பாலஸ்” (Hippalus) என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு.
II. அதற்கும் முன்னரே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) II மட்டும் தவறு D) I, II இரண்டுமே சரி
15.காற்று, ______________ வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் ______________ வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் மழைப்பொழிவைத் தருகிறது.
A) ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர் B) அக்டோபர் முதல் டிசம்பர், ஜூன் முதல் செப்டம்பர்
C) மே முதல் டிசம்பர், ஜூன் முதல் செப்டம்பர் D) அக்டோபர் முதல் டிசம்பர், ஆகஸ்டு முதல் செப்டம்பர்
16.இந்தியாவிற்குத் தேவையான ______________ விழுக்காடு மழையளவினைத் தென்மேற்கு பருவக்காற்று கொடுக்கிறது.
A) 35 B) 60 C) 70 D) 75
17.காற்றின் ஆற்றலை “வளி மிகின் வலி இல்லை” என்று ஐயூர் முடவனார் ___________ நூலில் கூறியுள்ளார்.
A) கலித்தொகை B) நளவெண்பா C) அகநானூறு D) புறநானூறு
18.கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைக் கூறும் புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) மதுரை இளநாகனார் B) பூங்குன்றனார் C) ஒளவையார் D) கம்பர்
19.காற்றின் ஆற்றல்: கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கிறது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகிறது.
II. விதைகளைப் பல இடங்களுக்குப் பரப்புகிறது. உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது. நவீன தொலைத்தொடர்பின் மையமாக விளங்குகிறது.
III. காற்றாலை மூலம் மின்னாற்றலைப் பெற உதவுகிறது. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமான காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II, III அனைத்தும் சரி D) I, II, III அனைத்தும் தவறு
20.உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ______________ இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், தமிழகம் ______________ வகிக்கிறது.
A) இரண்டாமிடம், ஐந்தாமிடம் B) மூன்றாமிடம், நான்காமிடம்
C) முதலிடம், இரண்டாமிடம் D) ஐந்தாம், முதலிடம்
21.உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் _____________ இடம் இந்தியாவுக்கு.
A) முதல் B) இரண்டாம் C) மூன்றாம் D) நான்காம்
22. மனிதன் உணவின்றி _____________ வாரம் உயிர் வாழ முடியும். நீரின்றி ___________ நாள் உயிர் வாழ முடியும்.
A) ஐந்து, ஐந்து B) நான்கு, நான்கு C) மூன்று, மூன்று D) இரண்டு, இரண்டு
23. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ____________ இடம் பெறுவது காற்று மாசுபாடு.
A) மூன்றாம் B) நான்காம் C) ஐந்தாம் D) ஆறாம்
24.காற்று மாசுபடுவதால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ____________ தெரிவித்துள்ளது.
A) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
B) ஐக்கிய நாடுகளின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம்
C) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
D) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)
25. கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் அரண் எது?
A) வானம் B) ஓசோன் C) கோள்கள் D) வானம்
26.புவியை ஒரு போர்வை போலச் சுற்றிக்கிடந்து பரிதியின் கதிர்ச்சூட்டைக் குறைத்துக் கொடுப்பது எது?
A) காற்று B) ஓசோன் C) கோள்கள் D) வானம்
27. குளிர்ப்பதன பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?
A) குளோரோ அல்கேன் B) குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி) C) அயடோ அல்கேன் D) தொலுயீன்
28. காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதிதாசன் (அழகின் சிரிப்பு) B) பாரதியார் (பாரதியார் கவிதைகள்)
C) நாமக்கல் கவிஞர் (சங்கொலி) D) வாணிதாசன் (கொடி முல்லை
29. “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”, “சிந்துக்குத் தந்தை” – என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் யார்?
A) திரு.வி.க B) பாரதியார் C) உ.வே.சாமிநாதர் D) மனோன்மணியம்
30.கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர். கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சிச்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
A) திரு.வி.க B) உ.வே.சாமிநாதர் C) பாரதியார் D) கே.கே.பிள்ளை
31. குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும், பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். – இவர் யார்?
A) மனோன்மணியம் சுந்தரனார் B) நாமக்கல் கவிஞர் C) பாரதிதாசன் D) பாரதியார்
32. பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர்?
A) கவிஞர் கண்ணதாசன் B) பாரதியார் C) பாரதிதாசன் D) நாமக்கல் கவிஞர்
33. “திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார் B) பாரதிதாசன் C) கண்ணதாசன் D) நாமக்கல் கவிஞர்
34. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் _________ படம்பிடித்துக் காட்டுகிறது.
A) சிறு கதைகள் B) புதினங்கள் C) காப்பியங்கள் D) சங்க இலக்கியம்
35. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
A) மதுரைக்காஞ்சி B) நெடுநல்வாடை C) குறிஞ்சிப்பாட்டு D) முல்லைப்பாட்டு
36.முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர் யார்?
A) பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் B) இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
C) முடத்தாமக் கண்ணியார் D) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
37. முல்லைப்பாட்டு _____________ அடிகளைக் கொண்டது?
A) 77 B) 17 C) 97 D) 103
38. புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) சுஜாதா B) ராஜம் கிருஷ்ணன் C) ப.சிங்காரம் D) பூமணி
39. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?
A) பிரதாப முதலியார் சரித்திரம் B) புயலிலே ஒரு தோணி
C) திசை மாறிய தென்றல் D) கரையைத் தேடும் கட்டுமரங்கள்
40. ‘கப்பித்தான்’- என்ற சொல்லின் பொருள்?
A) தலைமை மாலுமி B) சிப்பாய் C) கப்பல் D) கயிறு
41. ‘தொங்கான்’ – என்ற சொல்லின் பொருள்?
A) தலைமை மாலுமி (கேப்டன்) B) சிப்பாய் C) கப்பல் D) கயிறு
42. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை _____________ ஆம் ஆண்டில் தொடங்கியது.
A) 1985 B) 1990 C) 1995 D) 2000
43. _____________ இடத்தில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்ககைளப் பட்டியலிட்டுள்ளது.
A) புது தில்லி B) கொச்சின் C) சென்னை
44.புயலுக்குப் பெயர் சூட்டல் – சரியான கூற்று எது?
I. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
II. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II அனைத்தும் தவறு D) I, II அனைத்தும் சரி
45. வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
A) இடம்புரிப் புயல்கள் B) வலம்புரிப் புயல்கள் C) ஒருதிசைப் புயல்கள் D) இவற்றில் ஏதுமில்லை
46. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
A) இடம்புரிப் புயல்கள் B) வலம்புரிப் புயல்கள் C) ஒருதிசைப் புயல்கள் D) இவற்றில் ஏதுமில்லை
47.பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த வலம்புரிப் புயல்கள், இடம்புரிப் புயல்கள் விளைவை __________ இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.
A) 1825 B) 1835 C) 1845 D) 1855
48. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. பறவை மீன், அவுலியா மீன் – மீன் வகை
II. பிலவான் – இந்தோனேசியாவிலுள்ள இடம்
III. கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்)
IV. தொங்கான் – கப்பல்
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) I, II, III, IV அனைத்தும் சரி D) III, IV மட்டும் சரி
49. ‘தமிரோ’ என்பதற்கு ________ என்று பொருள்.
A) அமெரிக்கர்கள் B) மலேசியர்கள் C) ஜப்பானியர்கள் D) தமிழர்கள்
50. புயலிலே ஒரு தோணி – என்னும் புதினத்தின் ஆசிரியர் ப.சிங்காரம் அவர்களின் காலம்?
A) 1900 – 1977 B) 1910 – 1987 C) 1920 – 1997 D) 1930 – 2007
51. ப. சிங்காரம் அவர்களைப் பற்றிய சரியான கூற்று எது?
I. இவர் இந்தோனேசியாவில் இருந்தேபாது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
II. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு புயலிலே ஒரு தோணி என்னும் இப்புதினம்.
III. அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே கடல் காட்சி.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II, III அனைத்தும் சரி D) III மட்டும் சரி
52. ப. சிங்காரம் ______________ மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
A) விருதுநகர் B) சிவகங்கை C) இராமநாதபுரம் D) மதுரை
53.ப. சிங்காரம் அவர்கள் வேலைக்காக எந்த நாட்டிற்குச் சென்றார்?
A) இந்தோனேசியா B) வியட்நாம் C) மலேசியா D) சிங்கப்பூர்
54.ப. சிங்காரம் அவர்கள் மீண்டும் இந்தியா வந்து _________ நாளிதழில் பணியாற்றினார்.
A) தி இந்து B) தினமலர் C) தினத்தந்தி D) தினமணி
55. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு B) கலித்தொகை C) அகநானூறு D) கலிங்கத்துப்பரணி
No comments:
Post a Comment