LATEST

Saturday, March 9, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 21 Test - 10th std Tamil Unit 3

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 21 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std unit 3


1.உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று ____________ கூறியுள்ளார்.
A) ஒளவையார்        B) பாரதிதாசன்            C) பாரதியார்        D) தொல்காப்பியர்

2. திருவள்ளுவர் ___________ இயலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்.
A) பாயிரம்        B) ஊழியல்        C) இல்லறவியல்        D) துறவறவியல்

3. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்று எடுத்துரைக்கிறார் – இந்த கூற்று யாரைப்பற்றியது?
A) ஒளவையார்        B) திருவள்ளுவர்        C) பாரதியார்        D) தொல்காப்பியர்

4. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்    B) மணிமேகலை    C) வளையாபதி          d) இராமாயணம்

5. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் _________________
குறிப்பிட்டுள்ளார்.
A) ஒளவையார்            B) திருவள்ளுவர்        C) பாரதியார்            D) கம்பர்

6. விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளவர் யார்?
A) ஒளவையார் (ஆத்திச்சூடி)                    B) திருவள்ளுவர் (திருக்குறள்)
C) செயம்கொண்டார் (கலிங்கத்துப்பரணி)            D) கம்பர் (இராமாயணம்)

7. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) (ஆத்திச்சூடி) ஒளவையார்                B) (கலிங்கத்துப்பரணி) செயம்கொண்டார்
C) (திருக்குறள்) திருவள்ளுவர்                D) (கம்பராமாயணம்) கம்பர்

8. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) (ஆத்திச்சூடி) ஒளவையார்                B) (கலிங்கத்துப்பரணி) செயம்கொண்டார்
C) (திருக்குறள்) திருவள்ளுவர்                D) (கம்பராமாயணம்) கம்பர்

9. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை, “உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) (ஆத்திச்சூடி) ஒளவையார்                    B) (கலிங்கத்துப்பரணி) செயம்கொண்டார்
C) (புறநானூறு) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி        D) (கம்பராமாயணம்) கம்பர்

10 “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்துகிறாள். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை _________ உணர்த்துகிறார்.
A) திருவள்ளுவர்    B) அறவண அடிகள்    C) சீத்தலைச் சாத்தானர்        D) இளங்கோவடிகள்

11. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று _________ நூல் குறிப்பிடுகிறது.
A) அகநானூறு        B) கலித்தொகை        C) நற்றிணை        D) புறநானூறு

12. ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர். பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர். (“காலின் ஏழடிப் பின் சென்று”) என்று கூறும் நூல் எது?
A) கலித்தொகை    B) பொருநராற்றுப்படை    C) கலிங்கத்துப்பரணி       D) வளையாபதி

13. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனை, “குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” – என்று கூறும் நூல் எது?
A) புறநானூறு        B) பொருநராற்றுப்படை    C) கலிங்கத்துப்பரணி       D) வளையாபதி

14. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான். இச்செய்தி, “நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்” – என்று கூறும் நூல் எது?
A) வளையாபதி            B) பொருநராற்றுப்படை        C) கலிங்கத்துப்பரணி            D) புறநானூறு

15. இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் ________________ நூலில் காட்டப்படுகிறது.
A) வளையாபதி        B) பொருநராற்றுப்படை    C) பெரியபுராணம்          D) புறநானூறு

16. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது _____________ நூல்.
A) சிறுபாணாற்றுப்படை    B) திருவாசகம்        C) நளவெண்பா    D) ஐங்குறுநூறு

17. “இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு” – என்று கூறியவர் யார்?
A) அருந்ததி            B) அம்சப்பிரியா        C) ரம்யா

18. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – என்று கூறும் நூல் எது?
A) சிறுபாணாற்றுப்படை    B) திருவாசகம்        C) குறுந்தொகை      D) ஐங்குறுநூறு

19. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று __________ நூலில் ஒளவையார் பாடியுள்ளார்.
A) நல்வழி    B) மூதுரை    C) கொன்றை வேந்தன்                D) புறநானூறு

20. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து) எல்லா உலகும் பெறும்” – என்று தனிப்பாடல் நூலில் __________________ அவர்கள் கூறுவதிலிருந்து வள்ளல்களால் விருந்தினர் போற்றப்பட்டதை அறியமுடிகிறது.
A) மாணிக்கவாசகர்        B) கம்பர்    C) செயம்கொண்டார்        D) ஒளவையார்

21. விருந்தினர் – விருந்து பற்றிய சரியான கூற்று எது?
I. சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.
II. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
III. புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) III மட்டும் சரி    D) I, II, III அனைத்தும் சரி

22. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர் பண்பு எது?
A) அந்நிய மொழியைப் பேணிக்காத்தல்        B) இறக்குமதியில் சிறந்து விளங்குதல்
C) விருந்தோம்பல்                    D) இவற்றில் ஏதுமில்லை

23. இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும் – இவ்வாறு கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் பற்றி கூறியவர் யார்?
A) பாரதியார்         B) பாரதிதாசன்        C) வாணிதாசன்       D) அழ. வள்ளியப்பா

24. ______________ நாட்டின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
A) மலேசியா        B) சிங்கப்பூர்        C) தென் ஆப்பிரிக்கா        D) அமெரிக்கா

25. வாழை இலையில் விருந்து – சரியான கூற்று எது?
I. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.
II. தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.
III. உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.
A) I, II மட்டும் சரி        B) II, III மட்டும் சரி    C) I, II, III அனைத்தும் சரி     D) I, II, III அனைத்தும் தவறு

26.காசிக்காண்டம் – நூலின் ஆசிரியர் யார்?
A) அதிவீரராம பாண்டியர்    B) ஒளவையார்        C) கம்பர்    D) சேக்கிழார்

27. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் – என்ற பாடல் எதைப்பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகிறது?
A) நல்லொழுக்கம் (பொறை)            B) இல்லொழுக்கம் (விருந்தோம்பல்)
C) நன்றியுணர்வு                D) மேற்கூறிய அனைத்தும்

28. பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் சொல்லும் பொருளும் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) திருவாசகம், மாணிக்கவாசகர்            B) கம்பராமாயணம், கம்பர்
C) கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்        D) காசிக்காண்டம், அதிவீரராமபாண்டியர்

29. சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்தியது எது?
I. அருகுற – அருகில்
II. முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்
III. கேழல் – பன்றி
IV. நவ்வி – மான்
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி           C) III மட்டும் சரி        D) I, II, III, IV அனைத்தும் சரி

30. விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், ‘வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல், அவர் விடை பெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும் – என்று விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தைப் பற்றி கூறுபவர் யார்?   
A) அதிவீரராம பாண்டியர்    B) ஒளவையார்         C) கம்பர்        D) சேக்கிழார்

31. நன்மொழி – இலக்கணக்குறிப்பு தருக?
A) அன்மொழித்தொகை         B) பண்புத்தொகை           C) வேற்றுமைத்தொகை            D) வினைத்தொகை

32. வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – இலக்கணக்குறிப்பு தருக?
A) தொழிற்பெயர்    B) வினைமுற்று        C) வினையெச்சம்       D) வியங்கோள் வினைமுற்று

33. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. உரைத்த – உரை + த் + த் + அ
II. உரை – பகுதி
III. த் – சந்தி
IV. த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி
A) I, II, III மட்டும் சரி     B) I, II, III, IV அனைத்தும் சரி     C) III, IV மட்டும் சரி    D) I, II, III, IV அனைத்தும் தவறு

34. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. வருக – வா(வரு) + க
II. வா – பகுதி
III. க – வியங்கோள் வினைமுற்று விகுதி
A) I, II, III அனைத்தும் சரி    B) I, II மட்டும் சரி       C) III மட்டும் சரி     D) I, II, III அனைத்தும் தவறு

35. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும். முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை    B) புறநானூறு        C) விவேகசிந்தாமணி        D) ஐங்குறுநூறு

36. காசிக்காண்டம் நூல் பற்றிய சரியான கூற்று எது?
I. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
II. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
III. ‘இல்லொழுக்கம்’ பகுதியில் உள்ள பதினேழாவது பாடலே “விருந்தினனாக” – எனத் தொடங்கும் பாடல்.
A) I, II, III அனைத்தும் சரி    B) I மட்டும் சரி        C) II மட்டும் சரி        D) III மட்டும் சரி

37. கீழ்க்கண்டவர்களுள், முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?
A) இரும்பொறை    B) அதிவீரராம பாண்டியர்       C) விக்கிரம சோழன்    D) நெடுங்கிள்ளி

38. வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துக்களைக் கூறும் நூல். இந்நூலின் ஆசிரியர் யார்?   
A) ஒளவையார்        B) ஒட்டக்கூத்தர்    C) அதிவீரராம பாண்டியர்    D) கம்பர்

39. சீவலமாறன் என்ற பட்டப்பெயர் உடைய மன்னன் யார்?
A) இரும்பொறை    B) சடையவர்மன் வீரபாண்டியன்     C) விக்கிரம சோழன்    D) அதிவீரராம பாண்டியர்

40. நைடதம், கூர்ம புராணம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?  
A) அதிவீரராம பாண்டியர்    B) ஒட்டக்கூத்தர்    C) ஒளவையார்        D) கம்பர்

41. அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி, கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி, அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) முதுமொழிக்காஞ்சி        B) மலைபடுகடாம்     C) பரிபாடல்        D) குறுந்தொகை

42. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே, நும்இல் போல் நில்லாது புக்கு – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பெருங்கெளசிகனார்    B) கூடலூர் கிழார்    C) பிசிராந்தையார்          D) மாணிக்கவாசகர்

43. கிழவிர் போலக் கேளாது கெழீஇ சேட் புலம்பு அகல இனிய கூறி பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள மலைபடுகடாம் நூலை ______________ என்றும் அழைப்பர்.
A) முதுமொழிக்காஞ்சி        B) கூத்தராற்றுப்படை        C) பரிபாடல்    D) குறுந்தொகை

44. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. அசைஇ – இளைப்பாறி
II. அல்கி – தங்கி
III. கடும்பு – சுற்றம்
IV. நரலும் – ஒலிக்கும்
A) I, II, III, IV அனைத்தும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி    D) IV மட்டும் சரி

45. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. ஆரி – அருமை    
II. படுகர் – பள்ளம்    
III. வயிரியம் – கூத்தர்   
IV. வேவை – வெந்தது
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி          D) I, II, III, IV அனைத்தும் சரி

No comments:

Post a Comment