Saturday, March 9, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 22 Test - 10th std Tamil Unit 4

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 22 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std - Unit 4


1. __________ ஆம் ஆண்டுகளில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் (personal computers) வளர்ச்சியும், இணையப் பயண்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் (digital revolution) காரணமாயின. அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.
A) 1970            B) 1980            C) 1990            D) 2000

2. இணையத்தில் வணிகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ___________ பயன்படுத்திப் பெரும்பாலும் ஆளற்ற பல்பொருள் அங்காடிகளை உலகெங்கிலும் திறந்து வருகிறது.
A) இணையச் செயலியை    B) செயற்கை நுண்ணறிவை    C) வலைதளத்தை    D) இவற்றில் ஏதுமில்லை

3. 2016இல் _________ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான _________, சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
A) ஐ.பி.எம்., வாட்சன்       B) மைக்ரோசாப்ட், எக்ஸ் பாக்ஸ்    C) கூகுள், ஆல்பபெட்    D) இவற்றில் ஏதுமில்லை

4. _________ நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவை அங்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.
A) மலேசியா        B) அமெரிக்கா        C) சீனா

5.  இந்தியாவின் பெரிய வங்கியான __________, ‘இலா’ (ELA – Electronic Live Assistant) என்னும் உரையாடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிறது. ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் அது உரையாடும்.
A) இந்தியன் வங்கி        B) பாரத ஸ்டேட் வங்கி        C) ஆக்ஸிஸ் வங்கி          D) கனரா வங்கி

6.செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் __________ (DATA SCIENTISTS) தேவை கூடியுள்ளது. இயந்திரக் கற்றல் வல்லுநர்கள் முதலான பல தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும் பெருகி வருகிறது.
A) வன்பொருள் வல்லுநர்கள்            B) மென்பொருள் வல்லுநர்கள்    
C) தரவு அறிவியலாளர்கள்             D) இவற்றில் ஏதுமில்லை

7. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே __________. இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுகின்றன. இந்த ரோபோவை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
A) அசிமோ        B) பெப்பர்         C) நவ்        D) டோபியோ

8.பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் __________ யைப் பயன்படுத்துகின்றன.
A) செயற்கை நுண்ணறிவு    B) விளம்பரங்கள்    C) தானியங்கி இயந்திரங்கள்    D) இவற்றில் ஏதுமில்லை

9.  பொருந்திய இணையைக் கண்டறிக.
I. பெப்பர் – ஜப்பான் சாப்ட் வங்கி        II. வாட்சன் – ஐ.பி.எம். நிறுவனம்
III. இலா – பாரத ஸ்டேட் வங்கி          IV. சுகா – புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் இயந்திர மனிதன்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி         D) IV மட்டும் சரி

10. வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ________ என்று அழைப்பர்.
A) எழுத்தாளி        B) எழுத்தாணி        C) எழுத்தோவியம்        D) குரலாளி

11. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்            C) கவிமணி

12. ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன் பெயர்?
A) வாட்சன்        B) இலா            C) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)        D) பெப்பர்

13. சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர் யார்?
A) சூ யுவான்சாங்க்    B) கின் ஷி ஹுவாங்        C) குப்லாய்கான்           D) இவர்களில் யாருமில்லை

14.எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் ____________ தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.
அ) மூன்றாவது    ஆ) நான்காவது        இ) ஐந்தாவது        ஈ) இரண்டாவது

15.பெருமாள் திருமொழி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கம்பர்        B) குலசேகர ஆழ்வார்        C) மாணிக்கவாசகர்             d)}கவிமணி

16.சொல்லும் பொருளும் சரியானது எது?
I. சுடினும் – சுட்டாலும்    II. மாளாத – தீராத    III. மாயம் – விளையாட்டு
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) III மட்டும் சரி    D) I, II, III அனைத்தும் சரி

17. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! – வித்துவக்கோடு என்னும் ஊர் எங்கு உள்ளது? இங்குள்ள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியவர் யார்?
A) ஆந்திரா மாநிலம் திருப்பதி, நம்மாழ்வார்        B) கேரளா மாநிலம் பாலக்காடு, குலசேகர ஆழ்வார்
C) தமிழ்நாடு மாநிலம் சென்னை, கம்பர்        D) கர்நாடகம் மாநிலம் பெங்களூரு, சுந்தரர்

18. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) திருப்பாவை        B) பெரியாழ்வார் திருமொழி    C) திருச்சந்த விருத்தம்        D) பெருமாள் திருமொழி

19. கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
I. இலக்கியங்கள் தாம் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு மட்டும் இல்லாமல் அக்காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தாங்கி அமைகின்றன.
II. அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்க விதைகளைப் பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்க முடிகிறது.
III. மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல், துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் துளிர்த்திருக்கும் அறிவியல் கருத்துகள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப்போவதைக் காண்கையில் பெருவியப்பு மேலிடுகிறது. புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை அன்றே காட்டிய பழங்கவிதை வியப்பிலும் வியப்பே!
A) I, II, III அனைத்தும் சரி         B) I, II சரி III தவறு    C) II, III மட்டும் சரி    D) III மட்டும் சரி

20. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக், கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந் தீச்சுடரிய ஊழியும் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) பரிபாடல்         B) கலித்தொகை        C) ஐங்குறுநூறு        D) அகநானூறு

21.பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) சேக்கிழார்        B) ஒளவையார்        C) கீரந்தையார்        D) சீத்தலை சாத்தனார்

22. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன் – என்ற கூற்று யாருடையது?
A) மாணிக்கவாசகர்        B) கம்பர்    C) ஒளவையார்        D) குலசேகர ஆழ்வார்

23. வளர்வானம் – இலக்கணக்குறிப்பு தருக?
A) அடுக்குத்தொடர்    B) வினைத்தொகை    C) பண்புத்தொகை    D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

24.செந்தீ – இலக்கணக்குறிப்பு தருக?
A) அடுக்குத்தொடர்    B) வினைத்தொகை    C) பண்புத்தொகை    D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

25. வாரா (ஒன்றன்) – இலக்கணக்குறிப்பு தருக?  
A) அடுக்குத்தொடர்    B) வினைத்தொகை    C) பண்புத்தொகை    D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

26.கிளர்ந்த – பகுபத உறுப்பிலக்கணம் சரியானது எது?
I. கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ        II. கிளர் – பகுதி; த் – சந்தி;
III. த்(ந்) – ஆனது விகாரம்            IV. த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி
A) I, II மட்டும் சரி    B) I, II, III மட்டும் சரி    C) I, II, III, IV அனைத்தும் சரி    D) I, II, III, IV அனைத்தும் தவறு

27.  _________ நாட்டின் வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் _________ ஆம் ஆண்டு நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
A) இங்கிலாந்து, 1914        B) அமெரிக்கா, 1924        C) ரஷ்யா, 1934        D) அயர்லாந்து, 1944

28.__________ ஆண்டுகளுக்கு முன் __________ என்பவர் __________ நூலில், திருஅண்டப் பகுதியில் இவ்வாறாக எழுதுகிறார். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் …. சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”.
A) 1000, கம்பர், கம்பராமாயணம்            B) 1100, இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
C) 1200, சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை        D) 1300, மாணிக்கவாசகர், திருவாசகம்

29. பரிபாடல் __________ நூல்களுள் ஒன்றாகும்.
A) பத்துப்பாட்டு    B) எட்டுத்தொகை    C) சிற்றிலக்கியம்          D) ஐம்பெரும் காப்பியங்கள்

30. பரிபாடல் __________ ஆகும்.
A) இலக்கண நூல்        B) நாடகம்        C) இசைப்பாடல்            D) இவற்றில் ஏதுமில்லை

31.கீழ்க்கண்டவற்றுள் பெருவெடிப்புக் காட்சி – பற்றி கூறும் நூல் எது?
A) பரிபாடல்         B) கலித்தொகை        C) நற்றிணை        D) ஐங்குறுநூறு

32. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் எங்கு உள்ளது?
A) ஈரோடு, கோபிசெட்டி பாளையம்            B) திருவாரூர், மன்னார்குடி
C) சென்னை, கோட்டூர்புரம்                D) இவற்றில் ஏதுமில்லை

33. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் __________ ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இங்கு பத்துக் காட்சிக் கூடங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சி பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா, குழந்தைகள் விளையாடத்தக்க பொம்மைகளைக் கொண்ட பூங்காக்கள் உள்ளன.
A) 1966            B) 1978            C) 1988            D) 2000

34. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கோளரங்கம் தனித்துவம் வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளது. இது __________ ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
A) 2000            B) 2003            C) 2006            D) 2009

35. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
II. அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே.
A) I மட்டும் சரி            B) II மட்டும் சரி        C) I, II இரண்டுமே சரி        D) I, II இரண்டுமே தவறு

36. ஐன்ஸ்டைன், நியூட்டன் முதலானோர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவியல் முன்னோடிகள். இவர், அவர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார். நியூட்டன், _______________ பல்கலைக்கழகத்தில் வகித்த _______________ துறையின் ‘லூகாசியன் பேராசிரியர்’ என்ற மதிப்பு மிகுந்த பதவியை ஸ்டீபன் ஹாக்கிங்கும் வகித்திருக்கிறார்.
A) நாட்டிங்காம், அறிவியல்            B) ஆக்ஸ்போர்டு, புவியியல்
C) கேம்பிரிட்ஜ், கணக்கியல்            D) இவற்றில் ஏதுமில்லை

37. _______________ என்பவர் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவர் காலத்தில் E = MC2 எனும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டுகொண்டது.
A) ஸ்டீபன் ஹாக்கிங்        B) ஐன்ஸ்டைன்        C) நியூட்டன்    D) இவற்றில் ஏதுமில்லை

38. தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? – என்று கூறியவர் யார்?
A) ஸ்டீபன் ஹாக்கிங்        B) எடிசன்        C) நியூட்டன்        D) கலிலியோ

39. உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, ஊனமோ ஒருவருக்குக் குறையாகாது; ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் ______________?
A) கலிலியோ        B) எடிசன்    C) நியூட்டன்        D) ஸ்டீபன் ஹாக்கிங்

40. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் ________________ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ________________ ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.
A) இருபது, 1975    B) நாற்பது, 1988.    C) ஐம்பது, 2000    D) அறுபது, 2010

41. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” (கரூர் மாவட்டத்தின் கருவூர் (கரூர் )) – என்று கூறும் நூல் எது?
A) ஐங்குறுநூறு    B) கலித்தொகை        C) புறநானூறு        D) அகநானூறு.

42. “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்துகொள்ளப்போவதையும் உள்ளடக்கியது – என்று கூறியவர் யார்?
A) ஐன்ஸ்டைன்        B) ஸ்டீபன் ஹாக்கிங்        C) கல்பனா சாவ்லா        D) ரைட் சகோதரர்கள்

43. “வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” – என்று கூறியவர் யார்?
A) ஐன்ஸ்டைன்        B) ஸ்டீபன் ஹாக்கிங்        C) கல்பனா சாவ்லா         D) ரைட் சகோதரர்கள்

44. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. இருதிணை: ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
II. ஐம்பால்: பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால் – பகுப்பு; பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.
III. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
IV. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி       D) I, II, III, IV அனைத்தும் சரி

45. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் – சரியானது எது?
I. வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்    II. மகள், அரசி, தலைவி – பெண்பால்
III. மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்IV. நாற்காலி, மேசை – பலவின்பால்
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி        D) I, II, III, IV அனைத்தும் சரி

46. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் – சரியானது எது?
I. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும். எ.கா. யானை, புறா, மலை
II. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும். எ.கா. பசுக்கள், மலைகள்
A) I மட்டும் சரி            B) I, II இரண்டுமே சரி            C) II மட்டும் சரி

47. மூவிடம் பற்றிய சரியான கூற்று எது?
I. தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.
II. தன்மை – தன்மைப் பெயர்கள்: நான், யான், நாம், யாம்; தன்மை வினைகள்: வந்தேன், வந்தோம்.
III. முன்னிலை – முன்னிலைப் பெயர்கள்: நீ, நீர், நீவிர், நீங்கள்; முன்னிலை வினைகள்: நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்.
IV. படர்க்கை – படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அது, அவை; படர்க்கை வினைகள்: வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்தது, பறந்தன.
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி       C) I, II, III மட்டும் சரி        D) I, II, III, IV அனைத்தும் சரி

48. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______________ எனப்படும்.
A) வழாநிலை        B) வழு            C) வழுவமைதி        D) இவற்றில் ஏதுமில்லை

49.  இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______________ எனப்படும்.
A) வழாநிலை        B) வழு            C) வழுவமைதி        D) இவற்றில் ஏதுமில்லை

50.இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது _______________ ஆகும்.
A) வழாநிலை            B) வழு        C) வழுவமைதி            D) இவற்றில் ஏதுமில்லை

No comments:

Post a Comment