LATEST

Tuesday, March 12, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 23 Test - 10th std Tamil Unit 5

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 23 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std - Unit 5


1.“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் ____.
A) மணவை முஸ்தபா    B) மு.கு. ஜகந்நாதர்        C) பரிதிமாற் கலைஞர்    D) உ.வே.சாமிநாதர்

2. ‘ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார்
A) மணவை முஸ்தபா    B) மு.கு. ஜகந்நாதர்        C) பரிதிமாற் கலைஞர்        D) உ.வே.சாமிநாதர்

3.மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் _______________ என்பவர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.
A) திருவள்ளுவர்    B) வச்சணந்தி முனிவர்    C) குணவீர பண்டிதர்        D) தொல்காப்பியர்

4. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி யாது?
A) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது    
B) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
C) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
D) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

5.வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் ________________ நூல்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
A) சிற்றிலக்கியம்    B) ஐம்சிறும் காப்பியம்       C) ஐம்பெரும் காப்பியம்     D) சங்க இலக்கியம்

6. கீழ்க்கண்டவற்றுள் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவை எவை?
A) பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்.
B) திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை
C) ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்
D) இவற்றில் ஏதுமில்லை

7. _______________ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.
A) பிரெஞ்சு        B) ஆங்கிலம்        C) மலாய்        D) ஜெர்மன்

8. _______________ ஆம் நூற்றாண்டுவரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின.
A) 16            B) 17        C) 18

9. ________________ வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
A) இரவீந்திரநாத தாகூர்    B) காசி நஸ்ருல்    C) கவிஞர் வித்யாபதி    D) அக்னிஹோத்ரி

10. ஒரு நாடு எவ்வளவு _______________ பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.
A) காற்று ஆற்றல்    B) மின்னாற்றல்     C) சூரிய ஆற்றல்        D) நீர் ஆற்றல்

11.எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன – என்ற கூற்று யாருடன் தொடர்புடையது?
A) ராஜம் கிருஷ்ணன்        B) சுஜாதா    C) சா. கந்தசாமி     D) பெருஞ்சித்திரனார்

12. ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை _______________ மொழியில் எழுதினார். ______________ ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.
A) மலையாளம், 1943        B) இந்தி, 1949        C) சமஸ்கிருதம், 1950     D) பஞ்சாபி, 1955

13. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை மொழிபெயர்த்த வருடம் மற்றும் ஆசிரியர் – சரியானது எது?
I. 1949 – கணமுத்தையா மொழி பெயர்ப்பு    
II. 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு
III. 2016 – முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு    
IV. 2018 – யூமா வாசுகி மொழி பெயர்ப்பு
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) III, IV மட்டும் சரி      D) I, II, III, IV அனைத்தும் சரி

14. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் _______________ என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
A) அறிவுசார் வளம்        B) இலக்கியப் பயன்        C) பயன்கலை        D) இவற்றில் ஏதுமில்லை

15. _______________ தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
A) செய்யுளையே                B) இலக்கணத்தையே        
C) இலக்கியத்தையே            D) இவற்றில் ஏதுமில்லை

16. ஒரு குறிப்பிட்ட சிறு குழுவில் பேசப்படும் மொழியில் இருப்பவையும் கூட நம்மை வந்தடைய வேண்டும். சிறு குழுவினர் பேசும் _______________ மொழிகளின் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறுகிறார்கள். ஆனால் அந்தப் படைப்புகள் நம்மை எட்டுவதில்லை.
A) ஜப்பானிய        B) இலத்தீன்        C) ஐரோப்பிய        D) ஆப்பிரிக்க

17. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழி பெயர்க்கப்பட்டு அறிமுகமாகியிருந்தால் தமிழின் பெருமை உலகெங்கும் முறையாகப் பரவியிருக்கும். _______________ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
A) ஹார்வர்ட்        B) ஆக்ஸ்போர்டு    C) ஸ்டான்போர்டு        D) நாளந்தா

18. தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும். இதனை _______________, “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
A) இராஜராஜன்        B) குலோத்துங்கன்        C) கரிகாலன்     D) இரும்பொறை

19. “சென்றிடுவீர் எட்டுதிக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
A) வாணிதாசன்    B) திரு.வி. க        C) பாரதிதாசன்    D) பாரதியார்

20.பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன் முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” முதலிய நூல்களும் அங்கு உள.” – என்று கூறியவர் யார்?
A) மனோன்மணியம்        B) தனிநாயக அடிகள்        C) திரு.வி. க     D) உ.வே.சாமிநாதர்

21. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?
A) சங்க இலக்கியம்         B) காவியம்    C) ஐம்சிறும் காப்பியம்   D) ஐம்பெரும் காப்பியம்

22. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?
A) சங்க இலக்கியம்     B) காவியம்    C) ஐம்சிறும் காப்பியம்    D) ஐம்பெரும் காப்பியம்

23. நீதிவெண்பா நூலின் ஆசிரியர் யார்?
A) கா.ப. செய்குதம்பிப் பாவலர்    B) ஆறுமுக நாவலர்    C) பரிதிமாற் கலைஞர்    D) திரு.வி.க

24. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
A) எதுகை        B) மோனை        C) இயைபு        D) முரண்

25. செய்குதம்பிப் பாவலர் அவர்களின் காலம்?
A) 1874- 1950        B) 1884- 1960        C) 1894- 1970        D) 1904- 1980

26. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன?
A) நா. கதிரைவேற்பிள்ளை    B) செய்குதம்பிப் பாவலர்    C) சாரண பாஸ்கரன்    D) கவி. கா. மு. ஷெரீப்

27. சதாவதானி என்பது _______________?
A) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது    B) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
C) நூறு படைவீரர்களை கொன்று குவிப்பது        D) ஆயிரம் பேருக்கு உணவிடுவது

28. திருவிளையாடற் புராணம் நூலின் ஆசிரியர் யார்?
A) பரஞ்சோதி முனிவர்        B) சயம் கொண்டார்    C) சேக்கிழார்        D) நாகுத்தனார்

29. “உமையை ஒரு பாகத்திற்கொண்ட மேலான பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா” – என்று கூறியவர் யார்?
A) அமைச்சர்        B) புலவர்        C) மன்னன்        D) இவர்களில் யாருமில்லை

30. காடனுக்கும் கபிலனுக்கும் – இலக்கணக்குறிப்பு தருக?
A) முற்றும்மை        B) எண்ணும்மை        C) உம்மைத்தொகை        D) உவமைத்தொகை

31. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – என்பதைப் பற்றிய பாடல் இது. “மாசற விசித்த வார்புறு வள்பின் …” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை        B) குறுந்தொகை        C) அகநானூறு        D) புறநானூறு

32. பரஞ்சோதி முனிவர் _______________ (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
A) திருக்கழுக்குன்றம்        B) திருமறைக்காடு        C) திருவாவடுதுறை        D) திருவாலவாய்

33. வேப்ப மாலை அணிந்த மன்னன்?
A) சேரன்        B) சோழன்        C) பாண்டியன்        D) பல்லவன்

34. சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் _______________?
A) பார்வதி        B) திருமகள்        C) கலைமகள்        D) அலைமகள்

35. வினா எத்தனை வகைப்படும்?
A) 6        B) 7        C) 8        D) 9

36. மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து _______________ இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்?
அ) மரகத        ஆ) பொன்        இ) தன்            ஈ) வைர

37. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” (தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை) – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை        B) பதிற்றுப்பத்து        C) ஐங்குறுநூறு        D) புறநானூறு

38. கல்விக்கண் திறந்தவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
A) சாரதா அம்மையார்        B) முத்துலெட்சுமி     C) அம்புஜத்தம்மாள்    D) இவர்களில் யாருமில்லை

39. மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது.
அவற்றைப் பற்றி _______________ விளக்கியிருக்கிறார்.
A) திருவள்ளுவர்        B) ஆறுமுக நாவலர்        C) தொல்காப்பியர்    D) நன்னூலார்

40. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) கொளல் வினா        B) கொடை வினா        C) ஏவல் வினா        D) அறி வினா

41. ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) ஏவல் விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

42. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) ஏவல் விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

43. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) இனமொழி விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

44. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சீவகசிந்தாமணி        B) நன்னூல்        C) புறநானூறு        D) மணிமேகலை

45. அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்        C) வாணிதாசன்        D) நாமக்கல் கவிஞர்

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?
I. Emblem – சின்னம்
II. Intellectual – அறிவாளர்
III. Thesis – ஆய்வேடு
IV. Symbolism – குறியீட்டியல்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி        C) III, IV மட்டும் சரி    D) I, II, III, IV அனைத்தும் சரி

47. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) வெற்றி வேக்கை         B) புதிய ஆத்திச்சூடி        C) கொன்றை வேந்தன்    D) ஆத்திச்சூடி

48. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
A) தமிழ்        B) அறிவியல்        C) கல்வி        D) இலக்கியம்

49. உடன்பட்டுக் கூறும் விடை _______________?
A) சுட்டுவிடை        B) மறைவிடை        C) நேர்விடை        D) ஏவல்விடை

50. ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது _______________?
அ) வினாஎதிர் வினாதல்    ஆ) உற்றது உரைத்தல்        இ) உறுவது கூறல்    ஈ) இனமொழி விடை


No comments:

Post a Comment