மேக்மீ மெடல்
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 24 Test
10th std – Tamil Unit 6
1.இசைக்கலைஞர்கள், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் – கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) தஞ்சாவூர் B) கழுகு மலை C) திருப்புடை மருதூர் D) ஆதிச்சநல்லூர
2. “நீரற வறியாக் கரகத்து” – என்ற _______________ நூலின் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறுகிறது.
A) அகநானூறு B) புறநானூறு C) கலித்தொகை D) திருக்குறள்
3. சிலப்பதிகாரத்தில் _______________ ஆடிய _______________ வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது. இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
A) மாதவி, பதினொரு B) ஆதிரை, நூறு C) கண்ணகி, ஐம்பது D) அறவண அடிகள், முப்பது
4. மயிலாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
II. மயிலாட்டம் பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தில் விளக்கிக் கூறுகிறார்.
III. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.
IV. கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
A) I, II, III மட்டும் சரி B) I, III, IV மட்டும் சரி C) I, III மட்டும் சரி
5. பொய்க்கால் குதிரையாட்டம் – பற்றிய சரியான கூற்று எது?
I. பொய்க்கால் குதிரையாட்டம் கரகாட்டத்தின் தாய் ஆட்டமாகக் கருதப்படுகிறது.
II. “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
III. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
IV. கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்குத் துணியைக் கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர். குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர்.
A) I, II, III, IV அனைத்தும் சரி B) I, II, III மட்டும் சரி C) II, III, IV மட்டும் சரி D) I, IV மட்டும் சரி
6. பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப் பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன. பொய்க்கால் குதிரையாட்டம் _______________ மாநிலத்தில் கச்சிகொடி என்றும் _______________ மாநிலத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
A) பீகார், ஒடிசா B) இராஜஸ்தான், கேரளம்
C) பஞ்சாப், கர்நாடகம் D) ஆந்திரா, குஜராத்
7.“தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” என்று, தப்பாட்ட இசை குறித்து _______________ நூலில் ______________ ஆசிரியர் கூறியுள்ளார். இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.
A) கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார் B) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
C) திருவாசகம், மாணிக்கவாசகர் D) திருப்புகழ், அருணகிரிநாதர்
8. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை. _______ நூல் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது. மேலும் பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
A) திருக்குறள் B) தொல்காப்பியம் C) புறநானூறு D) அகநானூறு
9. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? கலைஞாயிறு என்று இவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர், இவர்.
A) பாவலரேறு பெருஞ்சித்திரனார் B) நா. பிச்சமூர்த்தி C) சி.சு. செல்லப்பா D) ந. முத்துசாமி
10. பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. _______________ நூலில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
A) வளையாபதி B) மணிமேகலை C) நாலடியார் D) திருக்குறள்
11. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் ______________ பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
A) ஒயிலாட்டம் B) மயிலாட்டம் C) தோற்பாவைக் கூத்து D) கரகாட்டம்
12. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.
A) இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர் B) மூன்றாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
C) நான்காம் உலகத்தமிழ் மாநாட்டு மலர் D) ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
13. பொருத்தமானதைத் தேர்ந்தெடு – ஆட்டம் மற்றும் இசைக்கருவிகள்.
I. கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
II. மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலக், தப்பு
III. ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
IV. தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை
A) 4, 3, 2, 1 B) 1, 2, 3, 4 C) 3, 4, 1, 2 D) 2, 1, 4, 3
14. பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
I. மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
II. ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
III. புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது.
IV. தெருக்கூத்து – 4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை
A) 4, 1, 3, 2 B) 3, 4, 2, 1 C) 1, 2, 4, 3 D) 4, 3, 1, 2
15. தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபு?
A) மூன்று முதல் பதின்மூன்று B) எட்டு முதல் பத்து C) பத்து முதல் பதின்மூன்று D) எட்டு முதல் பதின்மூன்று
16. கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
A) தலை ஆட்டம் B) கும்பாட்டம் C) சதுராட்டம் D) சாமியாட்டம்
17. கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
A) 12 B) 2 C) 24 D) வரையறை இல்லை
18.கரகாட்டத்தின் துணையாட்டம் _______________?
A) மயிலாட்டம் B) ஒயிலாட்டம் C) காவடியாட்டம் D) தேவராட்டம்
19.காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் _______________?
A) சோலை B) பாரந்தாங்கும் கோல் C) கால் D) காவல்
20. இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது _______________?
A) கரகாட்டம் B) மயிலாட்டம் C) காவடியாட்டம் D) ஒயிலாட்டம்
21. ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர்.
A) இரண்டு B) நான்கு C) ஆறு D) எட்டு
22.தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
A) ஆண்கள் B) பெண்கள் C) சிறுவர்கள்
23. தேவராட்டம், _______________ ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
A) அரசர்கள் B) புலவர்கள் C) பாணர்கள் D) வானத்துத் தேவர்கள்
24.உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது _______________?
A) டோலக் B) சிங்கி C) தேவதுந்துபி D) தப்பு
25. தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை _______________?
A) கரகாட்டம் B) மயிலாட்டம் C) சேர்வையாட்டம் D) தேவராட்டம்
26. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை _______________?
A) கரகாட்டம் B) மயிலாட்டம் C) சேர்வையாட்டம் D) பொம்மலாட்டம்
27.சேர்வையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
I. சேவைப்பலகை
II. சேமக்கலம்
III. ஜால்ரா
A) I மட்டும் சரி B) I, II மட்டும் சரி C) II, III மட்டும் சரி D) I, II, III அனைத்தும் சரி
28. _______________ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
A) போலச் செய்தல் B) இருப்பதைச் செய்தல் C) மெய்யியல் D) நடப்பியல்
29. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
A) மயிலாட்டம் B) ஒயிலாட்டம் C) பொய்க்கால் குதிரையாட்டம் D) காவடியாட்டம்
30.கீழ்க்கண்டவற்றுள், மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் ஆட்டம் எது?
A) காவடியாட்டம் B) மயிலாட்டம் C) ஒயிலாட்டம் D) பொய்க்கால் குதிரையாட்டம்
31. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி _______________?
A) பறை B) தவில் C) டோலக் D) உறுமி
32. _______________ அம்மன் வழிபாடடின் ஒரு பகுதியாகவும் தெருக்கூத்து இருக்கிறது.
A) புலி ஆட்டம் B) காவடியாட்டம் C) தெருக்கூத்து D) குடக்கூத்து
33. திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் _______________ வெளிப்படுத்தப்படுகிறது?
A) புலி ஆட்டம் B) காவடியாட்டம் C) தெருக்கூத்து D) ஒயிலாட்டம்
34.அருச்சுனன் தபசு என்பது _______________?
A) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது B) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
C) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது D) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
35. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) ஆறுமுக நாவலர் B) தாயுமானவர் C) மனோன்மணியம் D) குமரகுருபரர்
36.சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும்; கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். தொடக்கம் முதல் தமிழிலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய, இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது _______________! குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது _______________!
A) நாட்டுப்புறத்தமிழ், பிள்ளைத்தமிழ் B) சிற்றிலக்கியம், சங்க இலக்கியம்
C) அற இலக்கியங்கள், நீதி நூல்கள் D) இவற்றில் ஏதுமில்லை
37. செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குற்றாலக் குறவஞ்சி B) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் C) தாயுமானவர் பாடல்கள் D) திருவாசகம்
38. கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை – இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) மாணிக்கவாசகர் B) கம்பர் C) குமரகுருபரர் D) ஒட்டக்கூத்தர்
39. செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக – இப்பாடல் வரியுடன் தொடர்புடைய பருவம் எது?
A) சப்பாணி B) தால் C) காப்பு D) செங்கீரை
40. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. பண்டி – வயிறு
II. அசும்பிய – ஒளிவீசுகிற
III. முச்சி – தலையுச்சிக் கொண்டை
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) II, III மட்டும் சரி D) I, II, III அனைத்தும் சரி
41. திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும் – இந்த கூற்றில் கூறப்படும் பருவம் எது?
A) செங்கீரை B) வருகை C) அம்புலி D) முத்தம்
42.கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக – இப்பாடல் வரிகளை ஆராய்ந்து, கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது எனச் சரியாகப் பொருத்துக.
A) அற நூல்கள் B) நீதி நூல்கள் C) சிற்றிலக்கியம் D) சங்க இலக்கியம்
43. இலக்கணக்குறிப்பு தருக? குண்டலமும் குழைகாதும்.
a. எண்ணும்மை b. உம்மைத்தொகை c. உவமைத்தொகை
44.இலக்கணக்குறிப்பு தருக? ஆடுக.-
a. தொழில் பெயர் b. வினைமுற்று c. வியங்கோள் வினைமுற்று
45. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. பதிந்து – பதி + த் (ந்) + த் + உ
II. பதி – பகுதி; த் – சந்தி (ந் – ஆனது விகாரம்)
III. த் – இறந்தகால இடைநிலை
IV. உ – வினையெச்ச விகுதி
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) III, IV மட்டும் சரி D) I, II, III, IV அனைத்தும் சரி
46.செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
A) இரண்டு B) நான்கு C) ஐந்து D) ஒன்று
47. செங்கீரைப் பருவம்: செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை _______________ ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
A) 2-3 B) 4-5 C) 5-6
48. அணிகலன்கள் – சரியாகப் பொருந்தியது எது?
I. சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது
II. அரைநாண் – இடையில் அணிவது
III. சுட்டி – நெற்றியில் அணிவது
IV. குண்டலம், குழை – காதில் அணிவது
V. சூழி – தலையில் அணிவது
A) I, II, III, IV, V அனைத்தும் சரி B) I, II, IV மட்டும் சரி C) III, V மட்டும் சரி D) II, III, V மட்டும் சரி
49. _______________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
A) 50 B) 63 C) 96 D) 100
50.கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது _______________? பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். A) பிள்ளைத்தமிழ் B) உலா C) தூது D) பரணி
51.குமரகுருபரரின் காலம் _______________ ஆம் நூற்றாண்டு.
A) 14 B) 15 C) 16 D) 17
52. குமரகுருபரர் எம்மொழிகளில் புலமை மிக்கவர்?
A) தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
B) தமிழ், அரேபிக், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
C) தமிழ், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
D) தமிழ், வங்காள, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
53. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் எவை?
I. கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
II. மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை
III. நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
IV. சிலையெழுபது, ஆசாரக்கோவை
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) I, II, III மட்டும் சரி D) I, II, III, IV அனைத்தும் சரி
54.பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் _______________?
A) 8 B) 10 C) 12 D) 7
55.ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
A) சிற்றில் B) சிறுபறை C) சிறுதேர் D) கழங்கு
No comments:
Post a Comment