மேக்மீ மெடல்
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 25 Test
10th std – Tamil Unit 7
1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் _____________ ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் _____________ ல் தொடங்கி வைத்தார்.
A) 1906, தென்னாப்பிரிக்கா B) 1910, இந்தியா C) 1915, இங்கிலாந்து D) 1920, ரஷ்யா
2.வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு?
A) 1900 B) 1906 C) 1910 D) 1925
3.1906 ஆம் ஆண்டில் ஜூன் 26 ஆம் நாள், சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்னும் பகுதியில் பிறந்த தலைவர் யார்?
A) சுத்தானந்த பாரதியார் B) உ.வே. சாமிநாதர் C) ம.பொ.சிவஞானம் D) ஆனந்தரங்கர்
4.கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையவர் யார்? தந்தையார் பெயர் பொன்னுசாமி. அன்னையின் பெயர் சிவகாமி. பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்.
A) சுத்தானந்த பாரதியார் B) உ.வே. சாமிநாதர் C) ம.பொ.சிவஞானம் D) ஆனந்தரங்கர்
5. “ஏர் புதிதா” எனும் கவிதை _______________ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
A) பாரதியார் கவிதைகள் B) தாயுமானவர் பாடல்கள்
C) கு.ப.ரா. படைப்புகள். (கு.ப.ராஜகோபாலன்) D) பாரதிதாசன் கவிதைகள்
6. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட மன்னன் யார்?
A) கணைக்கால் இரும்பொறை B) இரண்டாம் இராசராச சோழன்
C) சுந்தர பாண்டியன் D) கரிகாலன்
7. காந்தி – இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1929 B) 1930 C) 1931 D) 1932
8. _______________ ஆம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் ‘இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை _______________ இல் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி (காங்கிரஸ் கட்சி) ஒரு மனதாக நிறைவேற்றியது.
A) 1942 ஆகஸ்டு 8, பம்பாய் B) 1940 ஆகஸ்டு 8, கொல்கத்தா
C) 1938 ஆகஸ்டு 8, சென்னை D) 1936 ஆகஸ்டு 8, பஞ்சாப்
9.ம.பொ. சிவஞானம் அவர்கள் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் அவர் சந்தித்த தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் யார்?
A) வ.உ. சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் B) காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
C) பெரியார், அயோத்திதாச பண்டிதர் D) திரு.வி. க, ராஜாஜி
10.ம.பொ. சிவஞானம் அவர்கள் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து _______________ சிறைக்கு மாற்றப்பட்டார்.
A) சென்னை B) வேலூர் C) அமராவதி D) அந்தமான்
11. ம.பொ. சிவஞானத்தின் ‘_______________’ என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை (பாடப்பகுதி) தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
A) மக்கள் போராட்டம் B) எனது போராட்டம் C) நம் போராட்டம் D) மாநிலப் போராட்டம்
12. _______________ செல்வர் என்று போற்றப்படும் ம.பொ. சிவஞானம் அவர்களின் காலம் _______________. இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்;
A) இசைச், 1904 – 1993 B) போராட்ட, 1905 – 1994 C) சிலம்பு, 1906 – 1995 D) கவி, 1907 – 1996
13.ம.பொ. சிவஞானம் அவர்கள் _______________ வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் _______________ வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்;
A) 1949 முதல் 1951; 1969 முதல் 1975 B) 1950 முதல் 1952; 1970 முதல் 1976
C) 1951 முதல் 1953; 1971 முதல் 1977 D) 1952 முதல் 1954; 1972 முதல் 1978
14. ம.பொ. சிவஞானம் அவர்கள், தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக _______________ ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை _______________ லும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
A) 1966, தியாகராய நகர் B) 1970, எழும்பூர் C) 1972, ராயபுரம் D) 1974, அண்ணா நகர்
15.‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே _______________?
A) திருப்பதியும் திருத்தணியும் B) திருத்தணியும் திருப்பதியும்
C) திருப்பதியும் திருச்செந்தூரும் D) திருப்பரங்குன்றமும் பழனியும்
16. ம.பொ.சி. க்கு பெற்றோர் இட்ட பெயர் _______________?
A) சிவஞானம் B) ஞானப்பிரகாசம் C) பிரகாசம் D) பொன்னுசாமி
17. சிவஞானி என்ற பெயரே _______________ என நிலைத்தது.
A) சிவஞானம் B) சிவப்பிரகாசம் C) ஞானப்பிரகாசம் D) பிரகாசம்
18. ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் _______________?
A) பொன்னுசாமி B) சரவணன் C) சரபையர் D) சிவஞானி
19. ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் _______________?
A) கல்வி, கேள்வி B) கல்வி, ஓவியம் C) கலை, பண்பாடு D) கலை, மேடைப்பேச்சு
20. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் _______________?
A) 1955 அக்டோபர் 10 B) 1957 ஆகஸ்டு 10 C) 1957 ஆகஸ்டு 10 D) 1949 அக்டோபர் 15
21. ‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் _______________?
A) என் பாதை B) என் பயணம் C) என் விருப்பம் D) எனது போராட்டம்
22.சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் _______________?
A) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு B) வள்ளலாரும் பாரதியும்
C) வள்ளலார் வகுத்த வழி D) வள்ளலார் கண்ட சாகாக் கலை
23.மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் _______________?
A) தாமதமாக வந்தது B) பாடப் புத்தகம் கொண்டுவராமை C) படிக்காமை
24. மா.பொ. சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு _______________?
A) ஐந்தாம் வகுப்பு B) இரண்டாம் வகுப்பு C) ஆறாம் வகுப்பு D) மூன்றாம் வகுப்பு
25. மா.பொ. சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் _______________?
A) அன்னை B) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
C) மங்கலங்கிழார் D) மார்சல் ஏ. நேசமணி
26.. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் _______________?
A) மா. பொ .சி B) செங்கல்வராயன் C) மங்கலங்கிழார் D) மார்சல் ஏ. நேசமணி
27. சரியானதைத் தேர்ந்தெடு.
I. வாஞ்சு – 1. மாநகரத் தந்தை
II. செங்கல்வராயன் – 2. நீதிபதி
III. தேவசகாயம், செல்லையா – 3. மொழிவாரி ஆணையத் தலைமை
IV. சர்தார் கே.எம்.பணிக்கர் – 4. தமிழரசுக் கழகத் தோழர்கள்
A) I – 1; II – 2; III – 3; IV – 4 B) I – 3; II – 1; III – 4; IV – 2
C) I – 2; II – 1; III – 4; IV – 3 D) I – 4; II – 3; III – 2; IV – 1
28.முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது. வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா! காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு! பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி காட்டைக் கீறுவோம். ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது, காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் கை புதிதா, கார் புதிதா? இல்லை. நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது! ஊக்கம் புதிது, உரம் புதிது! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார் B) பாரதிதாசன் C) வாணிதாசன் D) கு.ப. ராஜகோபாலன்
29.மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து மண்புரளும், மழை பொழியும், நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும். எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையில்லை! கிழக்கு வெளுக்குது பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) ஏர் புதிதா, கு.ப. ராஜகோபாலன் படைப்புகள் B) வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
C) அழகின் சிரிப்பு, பாரதிதாசன் D) குயில், பாரதியார் கவிதைகள்
30. கு.ப. ராஜகோபாலன் _______________ ஆம் ஆண்டில் பிறந்தார்?
A) 1901 B) 1902 C) 1903 D) 1904
31. கு.ப. ராஜகோபாலன் _______________ என்ற ஊரில் பிறந்தார்?
A) கோவில்பட்டி B) மன்னார்குடி C) கும்பகோணம் D) மானாமதுரை
32. சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?
A) நெசவை B) போரினை C) வேளாண்மையை D) கால்நடையை
33. தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது _______________?
A) கல்வி B) உழவு C) நெசவு D) போர்
34. தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது _______________?
A) நாகரிகம் B) கலை C) உழுதல் D) பொன் ஏர் பூட்டுதல்
35. பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் _______________?
A) சித்திரை B) ஆனி C) ஆடி D) தை
36. ‘கடுகி செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள் _______________?
A) செல்லுதல் B) மெதுவாக C) விரைவாக D) இயல்பாக
37. _______________ இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
A) இளஞ்சேரலாதன் B) இரண்டாம் இராசராசன்
C) இராஜேந்திர சோழன் D) முதலாம் இராசராசன்
38. சங்க இலக்கியமான _______________ பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள், மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடி.
A) குறுந்தொகை B) பரிபாடல் C) கலித்தொகை D) பதிற்றுப்பத்து
39.பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் _______________ எனப் பெயர் பெற்றது.
A) மெய்க்கீர்த்தி B) நூல்சாவடி C) ஏடு D) இவற்றில் ஏதுமில்லை
40.யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
A) பல்லவர் B) பாண்டியர் C) முதலாம் இராசராசன் D) இராஜேந்திர சோழன்
41. அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான் – இந்த கூற்று யாரைப்பற்றியது?
A) இராசராச சோழன் B) கரிகாலன்
C) கணைக்கால் இரும்பொறை D) இரண்டாம் இராசராச சோழன்
42. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராசராசன் காலத் தமிழ் கல்வெட்டு, கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) கீழடி B) மதுரை திருமலை நாயக்கர் மகால்
C) பெரிய கோயில், தஞ்சாவூர் D) இவற்றில் ஏதுமில்லை
43.இந்திரன் முதலாகத் திசைபாலகர் _______________ பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் _______________.
A) எட்டு, சோழன் B) ஒன்பது, பாண்டியன் C) பத்து, பல்லவ மன்னன் D) ஆறு, சேரன்
44. சிலப்பதிகாரம் நூலின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர் B) சேக்கிழார் C) இளங்கோவடிகள் D) கம்பர்
45. இன்று ‘எங்கும் வணிகம் எதிலும் வணிகம்’! பொருள்களை உற்பத்தி செய்வதைவிட சந்தைப்படுத்துவதில்தான் உலக நாடுகளும் தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இன்று நேற்றல்ல; பண்டைக் காலந்தொட்டே வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன! அவற்றுள் ஒன்றே _______________.
A) கடைதெருக் காட்சி B) வணிகம்பூர் காட்சி
C) மருவூர்ப்பாக்கக் காட்சி D) இவற்றில் ஏதுமில்லை
46. வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்; பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர் B) சேக்கிழார் C) கம்பர் D) இளங்கோவடிகள்
47. பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்; கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம் B) பெரிய புராணம் C) நாலடியார் D) கலிங்கத்துப்பரணி
48. கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும் பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்; சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் – இந்தப் பாடல் வரியுடன் தொடர்புடைய காதை எது?
A) வழக்குரை காதை B) இந்திரவிழா ஊரெடுத்த காதை
C) வரம் தரு காதை D) ஊர்காண் காதை
49. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. சுண்ணம் – நறுமணப்பொடி
II. காருகர் – நெய்பவர் (சாலியர்)
III. தூசு – பட்டு
IV. துகிர் – பவளம் V. வெறுக்கை – செல்வம்
A) I, II, III மட்டும் சரி B) I, II, III, IV மட்டும் சரி
C) I, II, III, IV, V அனைத்தும் சரி D) I, II, V மட்டும் சரி
50. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. பாசவர் – வெற்றிலை விற்போர்
II. ஓசுநர் – எண்ணெய் விற்போர்
III. மண்ணுள் வினைஞர் – ஓவியர்
IV. மண்ணீட்டாளர் – சிற்பி
V. கிழி – துணி
VI. நொடை – விலை
A) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி B) I, II, III, IV மட்டும் சரி
C) I, II, III, IV, V மட்டும் சரி D) I, II, V, VI மட்டும் சரி
51. _______________ நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
A) மதுரை B) புகார் C) தஞ்சை D) அயோத்தி
52.சரியாகப் பொருந்தியது எது?
I. கள் விற்கும் – 1. உமணர்
II. மீன் விற்கும் – 2. வலைச்சியர்
III. வெண்மையான உப்பு விற்கும் – 3. பரதவர்
IV. எண்ணெய் விற்போர் – 4. ஓசுநர்
A) I – 2; II – 3; III – 1; IV – 4 B) I – 4; II – 3; III – 2; IV – 1
C) I – 3; II – 4; III – 1; IV – 2 D) I – 1; II – 2; III – 3; IV – 4
53. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராசராசன் காலத் தமிழ் கல்வெட்டு, கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) கீழடி B) மதுரை திருமலை நாயக்கர் மகால்
C) பெரிய கோயில், தஞ்சாவூர் D) இவற்றில் ஏதுமில்லை
54. இந்திரன் முதலாகத் திசைபாலகர் _______________ பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் _______________.
A) எட்டு, சோழன் B) ஒன்பது, பாண்டியன் C) பத்து, பல்லவ மன்னன் D) ஆறு, சேரன்
55. புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் _______________ வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.
A) எட்டு B) ஏழு C) ஆறு D) ஐந்து
56. இலக்கணக் குறிப்பு தருக? வண்ணமும் சுண்ணமும்
A) உவமைத் தொகை B) எண்ணும்மை C) முற்றும்மை D) உம்மைத்தொகை
57. இலக்கணக் குறிப்பு தருக? பயில்தொழில்
A) உவமைத் தொகை B) எண்ணும்மை C) வினைத்தொகை D) உம்மைத்தொகை
58. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
II. மயங்கு – பகுதி
III. இ(ன்) – இறந்தகால இடைநிலை; ‘ன்’ புணர்ந்து கெட்டது;
IV. ய் – உடம்படுமெய்; அ – பெயரெச்ச விகுதி;
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி D) I, II, III, IV அனைத்தும் சரி
59. “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்” – ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு. இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) திருத்தணிகையுலா, கந்தப்ப தேசிகர் (19 ஆம் நூற்றாண்டு)
B) நல்லூர்ப் புராணம், வைத்திய நாத தேசிகர்
C) பிரயோக விவேகம், சுப்பிரமணிய தீட்சிதர்
D) இவற்றில் ஏதுமில்லை
60. பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி – பற்றிய சரியான கூற்று எது?
I. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர். தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்.
II. சிறுமலையின் இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால் குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன.
III. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.
IV. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
A) I மட்டும் சரி B) I, II மட்டும் சரி C) I, II, III மட்டும் சரி D) I, II, III, IV அனைத்தும் சரி
61. உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்). உரைப்பாட்டு மடை என்பது _______________ நூலில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.
வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம், இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
A) பெரிய புராணம் B) திருக்குறள் C) சிலப்பதிகாரம்
62. சிலப்பதிகாரத்தில் _______________ காண்டத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதை உள்ளது.
A) மதுரை காண்டம் B) புகார் காண்டம் C) வஞ்சிக் காண்டம்
63.ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. _______________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும், _______________ காதைகளையும் உடையது; கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. _______________ காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன.
A) மூவேந்தர், முப்பது, மணிமேகலை B) தேவர்கள், ஐம்பது, வளையாபதி
C) முனிவர்கள், நூறு, குண்டலகேசி D) இயற்கை, அறுபது, கலிங்கத்துப்பரணி
64. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். _______________ மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார், _______________ கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
A) சோழ, மாதவி B) சேர, கோவலன் கண்ணகி
C) பாண்டிய, ஆதிரை D) பல்லவ, கவுந்தியடிகள்
65. தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ.நா. அவையில் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர், ‘காற்றினிலே வரும் கீதமாய்’ மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர். இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்?
A) எம். எஸ். சுப்புலட்சுமி B) சித்ரா C) லதா மங்கேஷ்கர் D) ஜானகி
66.பொது வெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர்; நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர்; இவர் இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்; இவர் யார்?
A) பத்மினி B) பாலசரசுவதி C) மோகனாம்பாள் D) ராஜலட்சுமி
67. நம் இந்திய நாட்டு நடுவண் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு தமிழக அரசின் “ஔவை விருதையும்” தூர்தர்ஷனின் “பொதிகை விருதையும்” பெற்றுள்ளார். அண்மையில் “தாமரைத்திரு விருதையும்” பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் – இவர் யார்?
A) சின்னப்பிள்ளை B) எம். சாரதா மேனன்
C) சாந்தி ரங்கநாதன் D) திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி
68. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் _______________?
A) பாரதியார் B) கம்பர் C) இளங்கோவடிகள் D) உமறுப்புலவர்
69. கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர் _______________?
A) காவிரிப்பூம்பட்டினம் B) திருவரங்கம் C) உறையூர் D) கொடும்பாளூர்
70. அழகர் மலை என்பது _______________?
A) திருவரங்கம் B) திருமால்குன்றம் C) திருப்பரங்குன்றம் D) குன்றக்குடி
No comments:
Post a Comment