மேக்மீ மெடல்
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 26 Test
10th std – Tamil Unit 8
1. மன்னன் மக்களுக்குக் கொடை அளிப்பது போன்ற, 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் எங்கு உள்ளது?
A) ஆதிச்சநல்லூர் B) கீழடி C) கழுகுமலை D) சிதம்பரம்
2.சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், _______________?
A) சங்ககாலம் B) முகலாயர்கள் காலம் C) நாயக்கர்களின் காலம் D) இவற்றில் ஏதுமில்லை
3. சங்க காலத்தில் _______________ மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்.
A) புகழை B) அறத்தை C) அறிவை D) செல்வத்தை
4. மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான _______________ மனிதன் ஏற்க வேண்டும்.
A) செல்வத்தை B) அறிவை C) அறத்தை D) புகழை
5. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க கால அறங்கள் இயல்பானவை. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று திறனாய்வாளர் _______________ கூறுகிறார்.
A) வீரமாமுனிவர் B) ஜி.யு.போப் C) கால்டுவெல் D) ஆர்னால்டு
6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன.
II. சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.
A) I, II இரண்டுமே தவறு B) I, II இரண்டுமே சரி C) I மட்டும் சரி D) II மட்டும் சரி
7. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை – பற்றிய சரியான கூற்று எது?
I. அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது.
II. சங்ககால மக்கள் அறம் செய்து, அதன்மூலம் வணிக நோக்கம் அடைவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
III. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) I, II, III அனைத்தும் சரி D) I, III மட்டும் சரி
8. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A) புறநானூறு B) அகநானூறு C) நற்றிணை D) குறுந்தொகை
9. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ______________ பற்றி _______________ குறிப்பிட்டுள்ளார்.
A) ஆய், ஏணிச்சேரி முடமோசியார் B) விச்சிக்கோ நன்னன், பரணர்
C) தொண்டைமான் இளந்திரையன், சயம் கொண்டார்
D) அதியமான் நெடுமான் அஞ்சி, ஔவையார்
10. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – இப்பாடலில் கூறப்படும் மையக்கருத்து என்ன?
I. வணிகம் செய்வதால் வரும் பயன்
II. வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டுபவர்க்கு மறுபிறப்பு என்ற ஒன்றில்லை
III. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
IV. நோக்கமின்றி அறம்செய்வதே மேன்மை தரும்
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) III, IV மட்டும் சரி D) I, IV மட்டும் சரி
11. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் _______________ முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.
A) மக்களை B) அரசர்களை C) புலவர்களை D) தேவர்களை
12. ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) கலித்தொகை, கபிலர் B) மதுரைக் காஞ்சி, மாங்குடி மருதனார்
C) அகநானூறு, ஒளவையார் D) புறநானூறு, மதுரை மருதன் இளநாகனார்
13. ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’ – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை B) மதுரைக் காஞ்சி C) அகநானூறு D) புறநானூறு
14.நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார், _______________?
A) உருத்திர சன்மர் B) ஊன் பொதிப் பசுங்குடையார்
C) புகழேந்திப் புலவர் D) நச்சினார்க்கினியர்
15. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர். “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்கிறது _______________?
A) மதுரைக்காஞ்சி B) குறுந்தொகை C) கலித்தொகை D) ஐங்குறுநூறு
16. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை கூறும் நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) கலித்தொகை, கபிலர் B) மதுரைக் காஞ்சி, மாங்குடி மருதனார்.
C) அகநானூறு, ஒளவையார் D) புறநானூறு, மதுரை மருதன் இளநாகனார்
17.அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி ‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ என்று _______________ நூல் கூறுகிறது.
A) புறநானூறு B) அகநானூறு C) கலித்தொகை D) ஐங்குறுநூறு
18.உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி _______________ குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.
A) பரிபாடல் B) நற்றிணை C) பட்டினப்பாலை D) மதுரைக்காஞ்சி
19. தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை _______________ குறிப்பிட்டிருக்கிறார்.
A) ஒளவையார் B) ஆவூர் மூலங்கிழார் C) சயம் கொண்டார் D) சேக்கிழார்
20.எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் – இந்தப் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு B) அகநானூறு C) கலித்தொகை
21. வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி. “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” – இந்தப் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் மற்றும் இந்த பாடல்வரிகளில் எதைப்பற்றி குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது?
A) கலித்தொகை, மருதன் இளநாகன், அன்பு B) ஐங்குறுநூறு, அம்மூவனார், செல்வம்
C) புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், கொடை
D) அகநானூறு, ஒளவையார், போர்
22. கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப் பெருமை _______________ மற்றும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
A) ஐங்குறுநூறு B) பரிபாடல் C) சிறுபாணாற்றுப்படை D) நன்னூல்
23. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. _______________ நூல் சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.
A) ஐங்குறுநூறு B) பரிபாடல் C) சிறுபாணாற்றுப்படை D) பதிற்றுப்பத்து
24. “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டவர் யார்?
A) மருத்துவர்கள் B) அமைச்சர்கள் C) புலவர்கள் D) வள்ளல்கள்
25. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தனை _______________ பாராட்டுகிறார்.
A) தொல்காப்பியர் B) நக்கீரர் C) சீத்தலைச் சாத்தனார் D) கம்பர்
26. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று _______________ குறிப்பிடுகிறார்.
A) பெரும்பதுமனார் B) நக்கீரர் C) ஒளவையார் D) கம்பர்
27. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார், _______________?
A) பெரும்பதுமனார் B) நக்கீரர் C) ஒளவையார் D) நச்செள்ளையார்
28. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார், _______________?
A) பெரும்பதுமனார் B) நக்கீரர் C) ஒளவையார் D) நச்செள்ளையார்
29. பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார், _______________?
A) பரணர் B) நக்கீரர் C) பெருந்தலைச் சாத்தனார் D) நச்செள்ளையார்
30. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாக _______________ குறிப்பிட்டுள்ளார்.
A) பரணர் B) நக்கீரர் C) பெருந்தலைச் சாத்தனார் D) கபிலர்
31.எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் _______________ பாராட்டுகிறார்.
A) பரணர் B) நக்கீரர் C) பெருந்தலைச் சாத்தனார் D) கபிலர்
32. வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் _______________ நூலில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.
A) குறுந்தொகை B) புறநானூறு C) ஐங்குறுநூறு D) கலித்தொகை
33. பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘_______________’ என்று குறிப்பிடுகிறார்.
A) உதவியர் B) உதவியாகினான் C) உதவியல் D) உதவியாண்மை
34. தன்னைத் தாண்டிப் பிறரைப் பற்றிச் சிந்திக்கும்போது, இருக்கும் நிலையை ஒதுக்கி, தான் இருக்க வேண்டிய நிலை எது என்பதை மனிதன் உணர்கிறான் எனலாம். அன்பு என்ற சுடருக்குத் _______________ எண்ணெய்யாக இருக்க முடியும்?
A) அறிவு B) தியாகம் C) அரவணைப்பு D) நன்றி
35. “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்” – என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி குறிப்பிடும் நூல் மற்றும் ஆசிரியர் யார்?
A) கலித்தொகை, நல்லந்துவனார் B) ஐங்குறுநூறு, அம்மூவனார்
C) புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் D) அகநானூறு, ஒளவையார்
36. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” – ‘ உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்’ என்கிறார் _______________?
A) கலித்தொகை, நல்லந்துவனார் B) ஐங்குறுநூறு, அம்மூவனார்
C) புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் D) நற்றிணை, நல்வேட்டனார்
37.உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று _______________ குறிப்பிடுகிறார். இதனால்தான் ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.
A) நல்லாதனார் B) பெருங்கடுங்கோ C) ஒளவையார் D) முன்றுறை அரையனார்
38. ‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்கிறது _______________?
A) எகிப்து நாட்டு நூலகம் B) தொல்காப்பியம் C) சீன நாட்டுத் தாவோயியம்
39. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”, “பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
II. நாக்கு ஓர் அதிசயத் திறவு கோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II இரண்டுமே சரி D) I, II இரண்டுமே தவறு
40.‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை _______________ நூல் குறிப்பிடுகின்றது; இதற்கு மாறாகப் ‘பொய் மொழிக் கொடுஞ்சொல்’ என்று பொய்யைக் குறிப்பிடுகிறது. நிலம் புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பது பல பாடல்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது. வாய்மையைப் பற்றி, சங்ககால மக்கள் கொண்டிருந்த கருத்தழுத்தத்தை இப்பகுதிகள் புலப்படுத்துகின்றன. பொய்ச்சான்று கூறாமையும் வலியுறுத்தப்பட்டது.
A) நற்றிணை B) புறநானூறு C) ஐங்குறுநூறு D) கலித்தொகை
41.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம்.
II. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமானது.
III. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் எனலாம்.
A) I மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) I, II மட்டும் சரி D) I, II, III அனைத்தும் சரி
42. கி.பி. (பொ.ஆ.) _______________ நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர் பூண்டு சீனாவுக்குச் சென்றார். _______________ சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ஜென்” தத்துவம். இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
A) முதலாம், சமண B) ஆறாம், பௌத்த C) நான்காம், இந்து D) எட்டாம், யூதம்
43. கொன்றை வேந்தன் என்பது ______________ நூல்.
A) சிற்றிலக்கிய B) முற்கால அற C) சங்க இலக்கிய D) பிற்கால அற
44. சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம் _______________?
A) அறநெறிக் காலம் B) இருண்ட காலம் C) பக்திக் காலம் D) பொற் காலம்
45. போதி தருமருக்குச் _______________ கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
A) அரேபியர்கள் B) எகிப்தியர்கள் C) அமெரிக்கர்கள் D) சீனர்கள்
46. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – 1. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
II. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் – 2. பேகன்
III. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – 3. மலையமான் திரு முடிக்காரி
IV. எல்லாவற்றையும் கொடுப்பவன் – 4. அதியன்
A) I – 1; II – 2; III – 3; IV – 4 B) I – 4; II – 1; III – 2; IV – 3
C) I – 4; II – 3; III – 2; IV – 1 D) I – 2; II – 4; III – 1; IV – 3
47. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. வள்ளல் எழுவரின் கொடைப் பெருமை – 1. சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார்
II. ஆற்றுப்படை இலக்கியங்கள் – 2. கொடை இலக்கியங்கள்
III. சேர அரசர்களின் கொடைப் பதிவு – 3. பதிற்றுப்பத்து
IV. “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” – 4. வள்ளல்கள்
A) I – 1; II – 2; III – 3; IV – 4 B) I – 4; II – 1; III – 2; IV – 3
C) I – 4; II – 3; III – 2; IV – 1 D) I – 2; II – 4; III – 1; IV – 3
48. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை. இயங்குதலின்றி உலகில்லை, உயர்வில்லை.
II. கடல் அலைகளைப்போல் பணிகளும் ஓய்வதில்லை. அலைகள் ஓய்ந்திடின் கடலுமில்லை.
III. பணிகள் ஓய்ந்திடின் உலகமுமில்லை. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளர வேண்டும்.
A) I மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) I, II, III அனைத்தும் சரி D) I, II மட்டும் சரி
49. சாளரத்தின் கதவுகள், சட்டம்; காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும். கரையான் மண் வீடு கட்டும். அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன். காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை: அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை! – இந்த கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) கொடி முல்லை, வாணிதாசன் B) கொய்யாக் கனி, பெருஞ்சித்திரனார்
C) குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D) கோடை வயல் (ஞானம்), தி.சொ.வேணுகோபாலன்
50.இவர் திருவையாற்றில் பிறந்தவர். மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு “மீட்சி விண்ணப்பம்” – இந்த கூற்று யாரைப்பற்றியது?
A) சி.சு.செல்லப்பா B) தி.சொ.வேணுகோபாலன் C) ந. காமராசன்
51. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
I. கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன? அவன் பணி என்ன? மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
II. காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II இரண்டுமே சரி D) I, II இரண்டுமே தவறு
52.கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு (காலக்கணிதம்) B) பாரதியார் கவிதைகள்
C) இசையமுது (முதலாம் தொகுதி) D) நாமக்கல் கவிஞர் பாடல்கள்
53.ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்! ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! – இந்த பாடல்வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?
A) துரை மாணிக்கம் B) கண்ணபிரான் C) பிச்சமுத்து D) முத்தையா
54. உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன் வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்! பண்டோர் கம்பன், பாரதி, தாசன் சொல்லா தனசில சொல்லிட முனைவேன் – இந்தப்பாடல் வரியின் ஆசிரியர் பிறந்த ஊர் எது?
A) திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி B) சிவகங்கை மாவட்டத்தின் சிறுகூடல்பட்டி
C) தேனி மாவட்டத்தின் பட்டிவீரன் பட்டி D) திண்டுக்கல் மாவட்டத்தின் விருவீடு
55. புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது! வளமார் கவிகள் வாக்குமூலங்கள் இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு! கல்லாய் மரமாய்க் காடுமே டாக மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்! – இந்த பாடல் வரியின் ஆசிரியருடைய பெற்றோர் பெயர் என்ன?
A) சாத்தப்பன் – விசாலாட்சி B) வெங்கட்ராமன் – அம்மணியம்மாள்
C) முருகானந்தம் – சுவர்ணம்மாள் D) சுப்பையா – செல்லம்மாள்
56. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் – இந்த பாடல் வரியின் ஆசிரியர், தமிழக அரசின் _______________ ஆக சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
A) சட்டமன்ற மேலவை உறுப்பினர் B) சட்டமன்ற கீழவை உறுப்பினர்
C) ஆளுநர் D) அரசவைக் கவிஞர்
57. _______________ ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார், கண்ணதாசன்.
A) 1945 B) 1947 C) 1949 D) 1951
58. கீழ்க்கண்ட கூற்றுகளுள் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய சரியான கூற்று எது?
I. திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
II. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
III. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
IV. கண்ணதாசன் அவர்களுக்கு 1960 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது அளித்து இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.
A) I, II மட்டும் சரி B) II, III, IV மட்டும் சரி C) I, III, IV மட்டும் சரி D) I, II, III மட்டும் சரி
59. நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான் மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்றன் – இந்தப் பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) கம்பர் B) ஒட்டக்கூத்தர் C) புகழேந்திப் புலவர் D) ஒளவையார்
60. நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா – இந்தப் பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) வாணிதாசன் B) பாரதிதாசன் C) கண்ணதாசன் D) வாலி
61. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. நாளுக்கு ஒருமுறை மலர்வது – 1. குறிஞ்சி
II. ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது – 2. சண்பகம்
III. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது – 3. மூங்கில்
IV. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது – 4. பிரம்ம கமலம்
A) I – 1; II – 2; III – 3; IV – 4 B) I – 4; II – 1; III – 2; IV – 3
C) I – 4; II – 3; III – 2; IV – 1 D) I – 2; II – 4; III – 1; IV – 3
62. திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்’ – இந்தத் திருமந்திரத்தை பூரணர் யாரிடம் கூறினார்?
I. முதலியாண்டான் II. இராமானுசர்
III. சௌம்ய நாராயணன் IV. கூரேசர்
A) I, II மட்டும் சரி B) II, III மட்டும் சரி C) I, II, IV மட்டும் சரி D) I, II, III, IV அனைத்தும் சரி
63. எம் பெருமானே! உங்களுக்கு இருந்த பரந்த அருள் உள்ளம் இதுவரை எனக்கு இல்லாமல் போனதே! நம் பரமாச்சாரியார் ஆளவந்தாரின் திரு உள்ளத்தை அறிந்தவர் தாங்கள் மட்டுமே! இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவர் தாங்களே! நான் மகிழ்ச்சி பொங்கக் கூறிய ‘எம்பெருமான்’ என்னும் திருநாமம் என்றென்றும் உமக்கு நிலைத்து, நீங்கள் நீடூழி வாழ வேண்டும் – என்று கூறியவர் யார்?
A) இராமானுசர் B) பூரணர் C) முதலியாண்டான் D) கூரேசர்
64. பூரணர் அவர்களின் மகன் பெயர் என்ன?
A) செளம்ய நாராயணன் B) முதலியாண்டான் C) கூரேசர் D) இவற்றில் ஏதுமில்லை
65. சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டார்?
A) இராமானுசர் B) முதலியாண்டான் C) கூரேசர் D) இவற்றில் ஏதுமில்லை
66. பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து _______________?
A) திருமந்திரம் B) மாந்திரீகம் C) யோக ஞானம் D) தீட்சை விதி
67. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! (சிவகங்கை மாவட்டத்தின் பிரான் மலை (பறம்பு மலை)) – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
A) அகநானூறு B) புறநானூறு C) நற்றிணை
68.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.
II. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II இரண்டுமே சரி D) I, II இரண்டுமே தவறு
69. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.
II. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.
A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I, II இரண்டுமே தவறு D) I, II இரண்டுமே சரி
70.சுவாமிகள் என்மேல் கோபம் கொள்ளக் கூடாது. தங்கள் விருப்பப்படியே தான் வந்துள்ளேன். தாங்கள் கூறிய தண்டு, கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே அடியவர்களாகிய எங்கள்மேல் கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும், என்று இராமானுசர் கூறினார். இதில் தண்டு, கொடி என குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?
A) மக்கள், புலவர் B) கையில் வைத்திருக்கும் தடி, கொடி
C) கூரேசர், முதலியாண்டான் D) இவர்களில் யாருமில்லை
No comments:
Post a Comment