வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் - பகுதி 1
இந்தியா என்று அறியப்படும் தேசத்தின் தென்பகுதியாக உள்ள தமிழகம் என்ற நிலப்பரப்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்பழந்தமிழகம் என்ற நிலப்பரப்பைப் பற்றி நான்கு பெருந்தலைப்புகளின் கீழ்க் காண இருக்கின்றோம்.
• பழந்தமிழகப் பின்னணி என்ற தலைப்பில் தமிழகம் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, வேறு ஒரு அயல் இனத்தின் ஆதிக்கம் தன் மீது செலுத்தப்பட்டாலும் இன்றையளவிலும் தன் தனித்தன்மையினின்றும் மாறுபடாமல் காணப்படுகிறது என்பதையும், இலெமூரியாக் கண்டம் எவ்வாறு இருந்து தற்போது எவ்வாறு மாறியது என்பதையும் காணலாம்.
• தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலிலும், சிலப்பதிகாரத்திலும் பழந்தமிழகம் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன என்பதனைக் காணலாம்.
• பழந்தமிழகப் புவியியல் கூறுகள் என்னும் தலைப்பில் பழந்தமிழகம் எவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தாளப்பட்டிருந்தது என்பது பற்றிக் காணலாம்.
• நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் என்னும் தலைப்பில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் எனப் பழந்தமிழர் நாகரிகப் பாதையில் நடையிட்டுச் சென்றனர் என்பது பற்றிக் காணலாம்.
வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்
• தொல்லுயிர்கள் வளர்ச்சியுற்றுப் பெருகிய நிலம் இந்தியாதான் என ஆய்வாளர் கூறுவர்.
• தென் இந்தியா, கங்கை நதி பாயும் நிலப்பரப்புக்கும் இமய மலைக்கும் மண்ணியல் அடிப்படையில் வேறுபட்டது.
• இன்றுள்ள இந்தியப் பெருங்கடல் அன்று பெரு நிலப்பரப்பாக ஆப்பிரிக்கா வரை நீண்டு இருந்தது. பின்னர்க் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது.
• எஞ்சிய பகுதியே இன்றைய தென் இந்தியாவாகும்.
• இதன் பாறைகள் மிகவும் பழைமையானவை.
• இவை உயிர்கள் தோன்றும் முன்பு உலகில் இருந்த கருங்கல் படிவப்பாறை வகையினைச் சேர்ந்தவையாகும்.
• சிந்து கங்கைச் சமவெளி பல ஆயிரக்கணக்கான சதுரக்கல் அளவு பரந்து விரிந்தது.
• இது இமயமலை உண்டாகும் முன்பு கடலாக இருந்து, பின் கடல் பகுதி மறைந்து, மலை ஆறுகள் கொணர்ந்த வண்டல் மண்ணினால் சமவெளியானது என்பர் ஆராய்ச்சியாளர்.
• இவ்வாராய்ச்சியின் பயனாகத் தமிழக வரலாறு தொன்மையான வரலாறு என்றும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய முதுபெரும் வரலாறு என்றும் கூறலாம்.
• இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தின் இயற்கை அமைப்புகளைக் காண்போம். விந்தியமலைத் தொடரும், சாத்பூரா மலைத் தொடரும் நருமதை, தபதி ஆறுகளும், தண்ட காரணியக் காடுகளும் வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கின்றன.
• வட இந்தியாவில் பல்வேறு அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்தன.
• ஆதலால் அங்கு வாழும் மக்களின் மொழி, கலை, பண்பாடு முதலியவற்றில் மாறுதல்கள் பல ஏற்பட்டன.
• ஆனால் தமிழகத்தே இவ்வகை மாற்றங்கள் ஏதும் நிகழாமல் தமிழர்களின் தனித்தன்மை இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழகப் பின்னணி
• விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதியான அன்றைய திராவிட தேசம், இன்றைய பொதுவழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறித்தாலும் கூட மொழி, கலாச்சார, தொல்லியற் பின்னணியில் நோக்கும்போது இக்குறிப்பானது தமிழகத்திற்குப் பெரும்பாலும் பொருந்தும் எனலாம்.
• தமிழகம் இந்தியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகக் காணப்பட்டாலும் கூட, இதன் மொழி, கலாச்சாரம் ஆகியவை தொல்லியல் பாரம்பரியம் கொண்டவை ஆகும்.
• தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
தனித்த பண்டைய தமிழகம்
• திராவிட மொழிகளுள் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசப்படும் மாநிலங்களிலிருந்து தமிழகத்தை ஒரு தனித்துவமான கூறாக ஆக்கி விடலாம்.
• திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் மிகப்பழைய இலக்கியப் பாரம்பரியமுடைய மாநிலம் தமிழகம்தான்.
• கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் மீது வடமொழி ஏற்படுத்திய தாக்கத்தினைப் போன்று தமிழ் மொழியின் மீது அது மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
• சங்க இலக்கியங்களில் வடமொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.
• ஆரிய சமூக அமைப்பில் தமிழகம் இணைந்து கரைந்து போகாமல் தனித்துவத்தைக் காத்துக் கொண்டு நின்றது எனலாம்.
• சுருங்கக் கூறின் தென் இந்தியாவில் ஆரியமயமாக்கும் திட்டம் தோல்வி கண்ட இடமாகவே தமிழகம் விளங்குகிறது.
இலெமூரியாக் கண்டம்
• இந்தியாவில் மிகப் பழைய பாறை அமைப்பைக் கொண்டுள்ள தென்னிந்தியா, புவியியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு நிலப்பரப்பாகும்.
• இந்தத் தென் இந்தியா முன்பு ஒருபுறம் தென் ஆப்பிரிக்கா,தென் அமெரிக்கா ஆகியவற்றுடனும், மறுபுறம் மலேயாத் தீபகற்பத்தின் ஊடாக ஆஸ்திரேலியாவுடனும் இணைந்திருந்தது. இப்பெரிய பரப்பு இலெமூரியாக் கண்டம் எனப்பட்டது.
• பின்னர் இக்கண்டம் கடற்கோள்கள் போன்ற பேரழிவுகளால் சிதைவுற்றுத் தற்போதைய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகின எனப் புவியியலார் கூறுகின்றனர்.
• இவ்வாறேதான் தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதிகள் குமரிக் கண்டம் எனப்பட்ட இலெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கின என்றும் கூறப்படுகிறது.
• ஆனால் இலெமூரியாக் கண்டம் இருந்ததைப் பற்றிய கருத்துகளில் இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே முரண்பாடுகள் உள்ளன.
• இருப்பினும், குமரிக் கண்டம் பற்றிய சான்றுகள் ஓரளவு நம்பகமானவை எனக் கொள்ளப்படுகின்றன.
• மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்கநாடு , ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர்.
• இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும் மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
• இத்தகைய கடற்கோள்களினால் தமிழகத்தின் எல்லை சுருங்க, வேங்கடம் இதன் வட எல்லையாகவும், குமரி இதன் தென் எல்லையாகவும் ஆயின
பழந்தமிழகத்தின் பிரிவுகள்
தென்னிந்தியாவின் புவியியல் கூறுகளை ஆராய்ந்தவர்கள் இந்நிலப்பரப்பை மூன்று தலையாய கூறுகளாகப் பிரித்தனர். அவையாவன:
1. ஈர்ப்புப் பகுதிகள்
2. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
3. ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
தமிழகம் இவ்வட்டவணையில் ஈர்ப்புப் பகுதியாக விளங்குகிறது. இதில் காணப்படும் பல்வேறு தனித்துவம் வாய்ந்த புவியியல் கூறுகளையும் புவியியலார் இனங்காணத் தவறவில்லை. இதனால் இதன் கலாச்சார வளர்ச்சியில் பல்வேறு வகையான தரங்கள் இருப்பதையும் கண்டனர்.
இத்தகைய தனித்தன்மை வாய்ந்த புவியியல் கூறுகளை இனங்கண்டு அவற்றைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்.
பழந்தமிழகப் புவியியல் கூறுகள்
• இன்றைய தமிழகம் பண்டைய தமிழகத்தை விடப் பரப்பளவில் குறைந்தே காணப்படுகிறது.
• இது இந்தியாவின் தென்கிழக்கு மூலையிலே உள்ளது.
• வரலாற்றுக்கு முந்தைய தமிழகம் இன்றைய கேரளம், ஈழம் (இலங்கை) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
• இதுவே கலாச்சார வட்டத்தில் இணைந்திருந்தது.
No comments:
Post a Comment