புவியியல் அமைப்பு
• பொதுவாகத் தமிழகத்தின் புவியியல் அமைப்புகளை உற்று நோக்கும்போது தோற்ற அமைப்பில் இது தலைகீழாக அமைந்த முக்கோணம் போலவே காட்சியளிக்கிறது.
• தரைத் தோற்ற அமைப்பிலும் பொதுவாகக் கிழக்கே சரிந்துதான் உள்ளது.
• வட இந்தியாவில் உள்ளது போன்று மிக உயர்ந்த மலைகளோ, மிக நீண்ட ஆறுகளோ, தார்ப்பாலைவனம் போல் அகன்ற மணற்பாலை நிலங்களோ இல்லாத ஒரு பகுதியாகவே தமிழகம் விளங்குகிறது.
• இது நிலநடுக் கோட்டின் வடக்கில் வெப்ப மண்டலத்தில் அமைந்திருப்பதாலும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலும், கடலிலிருந்து பருவக்காற்று வீசுவதாலும் சம தட்பவெப்ப நிலையை உடையதாக விளங்குகிறது.
• பழந்தமிழர் ஓர் ஆண்டின் காலநிலையை ஆறு பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தனர். இவை முறையே கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகும்.
• தமிழகத்திலுள்ள மலைத் தொடர்கள், குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இந்நிலப்பகுதியைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துள்ளன. இதனையே சங்க இலக்கியங்களில் வரும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் போன்ற நிலப்பிரிவுகள் உணர்த்துகின்றன.
குறிஞ்சி
• தமிழகத்தின் மலைப்பகுதிகளில் குறிஞ்சிப் பூ அதிகமாகக் காணப்பட்டது.
• அதனை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழர் மலைகளையும், அவற்றைச் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர்.
• தமிழகத்தின் குறிஞ்சி நிலப் பகுதியாக மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் மேற்குக் காற்றாடி மலைத் தொடர்கள் அரபிக்கடலை அண்டியும், கிழக்குக் காற்றாடி மலைத்தொடர்கள் வங்கக்கடலைச் சார்ந்தும் அமைந்துள்ளன.
• இவ்வகையான மலைகளில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். இம்மலைப் பகுதியிலும், அடர்ந்த பெருங்காட்டிலும் யானை, புலி, கரடி போன்ற விலங்குகளும், மயில் போன்ற அழகிய பறவைகளும் காணப்பட்டன.
• சிறுசிறு ஆறுகள், அருவிகள் இக்குறிஞ்சி நிலப்பகுதிக்கு நீர்வளம் தந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் அவர்களின் நிலப்பகுதியில் அவ்வளவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை.
• இருப்பினும் தினை விதைத்தலையும், வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்.
• இந்நிலப்பரப்பில் முருகர் வழிபாடு இருந்தது. மேலும் வழிபாட்டு நெறிகளாகப் பலியிடுதல், வெறியாட்டு போன்றவை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.
• இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சிறுகுடி என்று அழைத்தனர். குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
முல்லை
'முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
"மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
• காடு அடர்ந்த நிலப்பரப்பே முல்லை நிலமாகும்.
• இந்நிலப்பரப்பிற்கு தனித்துவம் அங்கே காணப்படும் பூ முல்லைப் பூவாகும்.
• இன்றைய திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் முல்லை நிலத்தைச் சேர்ந்தவைகளாகும்.
• இங்கு வாழ்ந்தோர் ஆயர் அல்லது இடையர் என அழைக்கப்பட்டனர்.
• இவர்களின் முக்கியமான தொழில விவசாயம மற்றும; ஆடு மாடுகளை மேய்ப்பதாகும்.
• இவர்கள் இந்நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களான பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பிற நிலப்பரப்பில் உள்ளவர்களிடம் கொடுத்துப் பண்ட மாற்றாகத் தமக்கு வேண்டியவைகளைப் பெற்றனர்.
• இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சேரி என்று அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.

மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர்.
மருத நிலத்தலைவர்கள் வேந்தன், மகிழ்னன், ஊரன், கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.மருத நிலத்தின் கடவுள் இந்திரன்.
வெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர்.
தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்
“ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968)
என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார்.
• ஆற்றுப்படுகைகள் சேர்ந்த வளமான இடங்கள் மருதம் என அழைக்கப்பட்டன.
• இங்குக் காணப்பட்ட மருதப் பூவே இந்நிலத்திற்கு இப்பெயரை வழங்கியது.
• தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு, தாமிரபரணி, வைகை போன்றன இந்நிலப்பரப்பில் அடங்கும்.
• இந்நில அமைப்பில் அடங்கும் தரை அமைப்பிற்கு ஏற்பத் தமிழக ஆறுகள் வட இந்திய ஆறுகளைப் போல் அல்லாது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே பாய்கின்றன.
• காவிரி ஆறு மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரியிலிருந்து ஊற்றெடுக்கிறது.
• இவ்விடம் தலைக்காவிரி எனவும் அழைக்கப்படுகிறது.
• தஞ்சை வரை ஓடி அங்கிருந்து முக்கோண வடிவில் வங்கக்கடலில் இணைகின்றது. கங்கையைப் போன்று காவிரியும் புனித நதியாகக் கருதப்படுகிறது.
• சேர, சோழ, பாண்டிய மன்னர்களது தலைநகர்கள் ஆற்றங்கரைகளிலேதான் அமைந்திருந்தன.
• சேர மன்னருள் ஒரு குறிப்பிட்ட மரபினரது தலைநகரான கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், பாண்டியரின் தலைநகராகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும் அமைந்திருந்தன.
• மருத நிலத்தில் காணப்பட்ட சமமான தரைப் பகுதி, செழிப்புள்ள மண், போதிய நீர் வசதி ஆகியன ஏனைய நிலங்களைவிட இதனை வளமானதாக ஆக்கின.
• நெல், கரும்பு போன்றவை விளைய ஏற்ற இடமாக அமைந்ததால் இந்நிலப்பரப்பு தன்னிறைவு அடைந்து மக்கள் நிலையாகத் தங்கும் நகர வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம்.
• இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த இடங்கள் நகர், ஊர் என அழைக்கப்பட்டன.
• இம்மக்களின் தலைவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

நெய்தல்
கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன் சேர்ப்பன், பரதவர், துறைவன் புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
"வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.
நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர் நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
• நெய்தல் பூவே நெய்தல் நிலத்திற்குத் தனித்துவத்தை அளித்தது.
• தமிழகத்தைச் சுற்றியுள்ள கடற்கரை நிலப்பரப்பு நெய்தல் நிலமாகும்.
• இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், நுளையர், வலைஞர் என அழைக்கப்பட்டனர்.
• மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்றவை இங்கு வாழ்ந்த மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தன.
• பண்டமாற்று முறையே இந்நிலத்தில் நடைபெற்றதாகத் தெரிகின்றது.
• இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைப் பாக்கம், பட்டினம் என அழைத்தனர்.
• இவர்களின் தலைவர்கள் சேர்ப்பன், புலம்பன் என்று அழைக்கப்பட்டனர்.
• கடற்கரைப் பகுதிகளான இந்நிலப் பகுதியில் துறைமுகங்கள் யாவும் அமைந்திருந்தன.
• கடல் வழியாகப் பல அயல்நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றது.
• தமிழகத்து மிளகு முதலிய நறுமணப் பொருள்களுக்கும் முத்துகளுக்கும் ஈடாகப் பொன்னையும், மதுவையும் பண்டமாற்றாகப் பெற்றுச் செல்லக் கிரேக்கரும், உரோமானியரும் மரக்கலங்களில் வந்து சென்றதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
• எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தாலும் செல்வச் செழிப்பாக வாழ்வைக் களித்தனர்.
• வாணிபம் வளர்ச்சியுற்றதால் துறைமுகப்பட்டினங்கள், நகரங்கள் வளர்ச்சி பெற்றன.
• சேரரின் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியன விளங்கின.
• சோழரின் துறைமுகப் பட்டினங்களாகக் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை அல்லது அரிக்கமேடு ஆகியன விளங்கின.
• கொற்கை, சாலியூர், காயல் ஆகியன பாண்டியரின் துறைமுகங்களாகும்.
பாலை

குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்.
பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்
• பழந்தமிழகத்தின் வறட்சியான நிலப்பரப்பினைப் பாலை நிலம் என அழைத்தனர்.
• இப்பகுதியில் காணப்பட்ட பாலைப்பூவே இப்பெயருக்குக் காரணமாக அமைந்தது.
• மேற்கூறிய நால்வகை நிலங்களும் வறட்சி அடையும்போது அவை பாலை நிலம் என்று அழைக்கப்பட்டன.
• முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
• இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர்.
• இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.
வரலாற்றிற்கு முந்தைய காலத்துத் தமிழக வரலாற்றை நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாறுதல்களையும், பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு நான்கு காலங்களாக வகைப்படுத்தலாம். அவையாவன:
1. பழங்கற்காலம்
2. இடைக் கற்காலம்
3. புதிய கற்காலம்
4. இரும்புக் காலம்
• இவற்றை வரையறை செய்யத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ள புதைபொருட் சின்னங்கள் உதவுகின்றன.
• இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிகளில் ஒன்று ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாகும்.
• வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த புதைபொருட்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன.
• அணிகலன்கள், இரும்பாலாகிய கருவிகள், உரல்கள், மனித எலும்புக் கூடுகள் போன்றன இவற்றுள் அடங்கும்.
• பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல கிடைத்துள்ளன.
• செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அண்மையில் கற்களினாலான கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் சில கிடைத்துள்ளன.
• இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன.
• கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. தமிழகத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்திலும், பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன.
• இதன் மூலம் பழங்கற்கால மக்கள் தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர் என்று அறியலாம்.
• மேலும் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
• பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்திற்குமிடையே இடைக்கற்காலம் என்ற ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
• அக்கால அளவில் வாழ்ந்த மக்கள் மிகச்சிறிய கற்கருவிகள் செதுக்கிக் கொண்டனர் எனத் தெரிய வருகிறது.
• உதாரணமாக சிக்கிமுக்கிக்கல்லாலும், அகேட் (Agate) செர்ட் (Chert), ஜாஸ்பர் (Jasper) போன்ற இரத்தினக் கற்களாலும் இக்கருவிகள் அமைக்கப்பட்டன.
• திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர்புரத்திலும், கருநாடக மாநிலத்தில் பிரமகிரியிலும் கிருக்ஷ்ணா, கோதாவரி போன்ற ஆற்றுப்படுகைகளிலும் இக்கருவிகள் கிடைத்துள்ளன.
• பெரும்பாலும் இடைக்கற்காலத்தில் மக்கள் வேட்டையாடி வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
• அவர்கள் மான், பன்றி, ஆடு, எலி போன்றவைகளை உணவாக உட்கொண்டனர் என்பது தெரியவருகிறது.
• இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கம் அப்போதே தொடங்கிவிட்டது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
• புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன.
• இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது.
• இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) என்ற ஒரு வகைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன.
• கற்களால் உளிகள், சம்மட்டிகள் போன்றவைகளை ஒழுங்காகச் செதுக்கி அவற்றிற்கு மெருகூட்டியுள்ளனர் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது தெரிய வந்தது.
• இவர்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர்.
• இக்கற்காலத்தில்தான் மனிதன் நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டுள்ளான் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆடைகளை நெய்துள்ளனர்.
• ஆடு, மாடுகளை வளர்த்துள்ளனர்.
• குறிப்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வாழ்க்கை வசதிக்கான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
• எடைக்கற்கள், அம்மி, குழவிகள், கற்சட்டிகள் இவற்றுள் அடங்கும். இவர்களிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது.
• தமிழகத்தில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இரும்புக் காலம் தொடங்கிற்று.
• ஆனால் வட இந்தியாவில் புதிய கற்காலத்தை அடுத்துச் செம்புக் காலம் தொடங்கிற்று.
• அதனை அடுத்தே அங்கு இரும்புக் காலம் தொடங்கியது.
• புதிய கற்காலத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் இடையில் செம்பு அல்லது வெண்கலக்காலம் ஒன்று தமிழகத்தில் நிகழாதது வியப்பாக உள்ளது.
• இந்நிலைக்கு இருவேறு காரணங்கள் காட்டப்படுகின்றன.
• ஒன்று, மக்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்குக் குடிபெயர்ந்து வந்தபோது, முதன்முதலாக இரும்பைத் தம்முடன் கொண்டு வந்திருக்கலாம்.
• மற்றொன்று, தமிழகத்தில் புதிய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம்.
• இவற்றுள் இரண்டாம் காரணமே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
• மண்பாண்டங்கள் செய்வதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது, பலவகையான மண்ணையும், பாறைகளையும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்.
• பச்சை மண்பாண்டங்களைச் சூளையில் இட்டுச் சுட்டிருப்பார்கள்.
• அப்போது அவர்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கலாம்.
• திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கண்டபோது அங்கே கற்கருவிகளுடன் கத்தி போன்ற இரும்புக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.
• மேலும் செங்கற்பட்டில் பெரும்பேயர் என்னும் இடத்திலும், கேரளத்தில் தலைச்சேரி என்னும் இடத்திலும் இவ்வாறே கற்கருவிகளும், இரும்புக் கருவிகளும் கலந்தே கிடைத்துள்ளன.
• எனவே தமிழகத்தில் புதிய கற்காலம் முடிவுறும்போதே இரும்புக் காலமும் தொடங்கிவிட்டது என்று கருத இடம் ஏற்படுகிறது.

நாகரிகப் பாதையில் பழந்தமிழகம்

பழங்கற்காலம்

இடைக்கற்காலம்

புதிய கற்காலம்

இரும்புக் காலம்

No comments:
Post a Comment