1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப்.2. ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தில் பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழியைப் புகுத்தினர்.
3. ஆங்கில நிர்வாகத்தில் அதிகமாக பாதிப்பினை ஏற்படுத்திய முறை நிலவரி முறை.
4. ஆங்கிலேயர் இராணுவத்தில் இந்தியப் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி சுபேதார்.
5. நானாசாகிப் கான்பூரில் புரட்சிக்கு தலைமை தாங்கித் தன்னை பேஷ்வா என அறிவித்துக் கொண்டார்.
6. நானாசாகிப்பின் படைக்கு தாந்தியாதோப் என்ற படைத்தளபதி தலைமை பொறுப்பேற்றார்.
7. சர் காலின் காம்ப்பெல் என்பவரால் நானாசாகிப் தோற்கடிக்கப்பட்டார்.
8. தனது மேலதிகாரியைச் சுட்டுக்கொன்று, தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தியப்படை வீரர் மங்கள பாண்டே.
9. லக்னோ புரட்சியில் ஆங்கிலேயருக்க எதிராக புரட்சியில் ஈடுபட்ட தலைவி பேகம் ஹஸ்ரத் மஹால்.
10. மத்திய இந்தியாவில் நடைபெற்ற புரட்சியில் ஈடுபட்ட தலைவி ஜான்சி இராணி லட்சுமிபாய்.
No comments:
Post a Comment