இந்திய விடுதலை இயக்கம்
முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2
1. தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள்அ) தேசிய தலைவர்கள் எவ்வாறு மக்களை கவர்ந்தனர்?
விடை: இந்தியாவின் பெருமைகளை எடுத்துரைத்து மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டினர். இந்திய மக்களிடையே தன்னம்பிக்கை மற்றும் புத்துணர்வை ஏற்படுத்தினர்
ஆ) வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது?
விடை: 1878-ல்
இ) ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை யாது?
விடை: பிரித்தாளும் கொள்கை
ஈ) ஆங்கிலேயர்கள் இந்தியரை எவ்வாறு கருதினர்?
விடை: தாழ்வாகவும், இழிவாகவும் கருதினர்
2. இந்திய தேசியக் காங்கிரஸ்
அ) இந்திய தேசியக் காங்கிரஸ் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?
விடை: 1885-ல்
ஆ) இந்திய தேசியக் காங்கிரஸ் யாருடைய ஆலோசனையால் தோற்றுவிக்கப்பட்டது?
விடை: ஓய்வுபெற்ற ஆங்கில அதிகாரி “ஆலன் ஆக்டேவியன் ஹியூம்” என்பவரின் ஆலோசனையால் தோற்றுவிக்கப்பட்டது.
இ) காங்கிரஸின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது? இதற்கு தலைமை தாங்கியவர் யார்?
விடை: பம்பாயில் நடந்தது. டபிள்யூ.சி.பானர்ஜி தலைமை தாங்கினார்
ஈ) காங்கிரஸின் முதல் மாநாட்டில் கலந்து கொண்ட சில தலைவர்கள் பெயரைக் குறிப்பிடு.
விடை: தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா, எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே, பெரோஷா மேத்தா மற்றும் ஜி.சுப்பிரமணிய அய்யர்.
No comments:
Post a Comment