LATEST

Thursday, January 30, 2020

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 3

இந்திய விடுதலை இயக்கம்  

முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) ஒர் வார்த்தையில் விடையளி  பகுதி 3

1. தீவிரவாதிகள் 

அ) சில தீவிரவாத தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை: பால கங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்த கோஷ்

ஆ) திலகரின் அறிவிப்பு என்ன?
விடை: சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்

இ) திலகர் புதுப்பித்த பண்டிகைகளை குறிப்பிடுக
விடை: கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள்

ஈ) தீவிரவாத தேசியவாதிகளின் விருப்பம் யாது?
விடை: தீவிரவாத தேசியவாதிகள், காங்கிரசின் மிதவாத அணுகுமுறையை மாற்றி, அவற்றினை அடையும் முறைகளையும் மாற்ற விரும்பினர்

2. ஜாலியன்வாலாபாக் படுகொலை

அ) கைது செய்யப்பட்ட முக்கியமான தலைவர்கள் யார்?
விடை: டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு.

ஆ) மக்கள் எங்கு கூடினர்?
விடை: அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில்

இ) அமிர்தசரஸின் ஆங்கில இராணுவ தளபதி யார்?
விடை: ஜெனரல் டயர்

ஈ) இரவீந்திரநாத் தாகூர் செய்தது என்ன?
விடை: படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாகூர் தனது “நைட்வுட்” பட்டத்தை துறந்தார்

No comments:

Post a Comment