LATEST

Thursday, January 30, 2020

சோழ மன்னர்கள் நலங்கிள்ளி - நெடுங்கிள்ளி

நலங்கிள்ளி - நெடுங்கிள்ளி

•    நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இவ்விரு மன்னர்களும் கரிகால் சோழன் வழி வந்தவர்கள்.
•    கரிகால் சோழன் மறைவிற்குப் பிறகு வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது.
•    இதன் விளைவால் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளி சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான்.
•    நெடுங்கிள்ளி உறையூர், ஆவூர் போன்ற ஊர்களைக் கைப்பற்றி ஆவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டு
•    வந்தான். இவ்விருவருள் நலங்கிள்ளி மிக்க ஆற்றல் வாய்ந்தவன். இம்மன்னன், “பகைவர்கள் பணிந்து வந்துகேட்டால், என் அரசையும் தருவேன். அவர்கள் என்னை மதிக்காவிடின் அவர்களை யானையின் காலின் கீழ் அகப்பட்ட மூங்கிலைப் போல நசுக்குவேன்” என்று கூறியவன் ஆவான். கழைதின் யானைக் கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல (புறநானூறு, 73: 9-10)

•    நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் தலைநகராகிய ஆவூரைக் கைப்பற்ற எண்ணி, தன் தம்பியான மாவளத்தானை அனுப்பி ஆவூர்க் கோட்டையை முற்றுகையிடவைத்தான்.
•    இதனைக் கண்ட நெடுங்கிள்ளி போர் புரியாமல் கோட்டை வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளே அடங்கியிருந்தான்.
•    இதனை அறிந்த கோவூர் கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென்று அறவுரை கூறினார்.
•    “நீ நின் மக்களைப் பசியும், பிணியும் அண்டாதவாறு காக்க வேண்டும் அறம் உடையவனாயின் இந்நாடு நினதென்று கூறிக் கோட்டை வாயிலைத் திறந்துவிடு. மறம் உடையவனாயின் போர் செய்யத் திறந்து விடு” என்று உரைத்தார்.
அறவை ஆயின் நினது எனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாக (புறநானூறு, 44: 11-13)

•    கோவூர் கிழார் கூறிய அறிவுரை கேட்டு, ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு நெடுங்கிள்ளி உறையூர்க் கோட்டைக்குச் சென்று அடைத்துக்கொண்டான்.
•    நலங்கிள்ளி பெரும்படையுடன் சென்று உறையூர்க் கோட்டையை முற்றுகையிட்டான்.
•    இதனை அறிந்த கோவூர் கிழார் இம்முறை நலங்கிள்ளியிடம் சென்று நீங்கள் இருவரும் ஒரே சோழர் குடியில் வந்தவர்கள்.
•    ஒரே குடியில் வந்த உங்களுக்குள் ஏன் இந்தப் போர் எனக் கூறிச் சமாதானம் செய்து வைத்தார்.
•    இருப்பினும் காரியாறு என்னும் இடத்தில் இரு மன்னர்களுக்கும் போர் மூண்டது. இறுதியில் நெடுங்கிள்ளி போரில் மடிந்தான்.
•    காரியாற்றுப் போர் மூலம் சோழப்பேரரசின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment