LATEST

Thursday, January 30, 2020

சோழ மன்னர்கள் - கிள்ளிவளவன்

கிள்ளிவளவன் 

கிள்ளிவளவன்

•    கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.
•    இவன் புலவர்களை ஆதரிப்பதிலும், போர் வல்லமையிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.
•    இக்கிள்ளிவளவன், தென் பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருக்கோவிலூர் என்னும் இடத்தில் ஆட்சி புரிந்து வந்தவனாகிய மலையமான் திருமுடிக்காரியுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான்.
•    கிள்ளிவளவன் சேரருடன் போர் புரிந்து கரூரைச் சூறையாடினான்.
•    பின்பு பாண்டியருடனும் போர் புரிந்தான் என நக்கீரர்கூறுகிறார்.
•    அப்போரில் கிள்ளிவளவன் தோற்கடிக்கப்பட்டான் எனத் தெரிகிறது.
•    இம்மன்னன் செம்பியன் எனவும் அழைக்கப்பட்டான். இவன் குளமுற்றம் என்னும் ஊரில் இறந்தான்.
•    எனவே இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் அழைத்தனர்.

பிற சோழ மன்னர்கள்

•    சோழ மன்னர்களில் மேலே கூறப்பட்டவர்களைப் போல் பெரிதும் போற்றப்படாமல் இருந்தாலும் இன்னும் சில சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
•    அவர்களுள் குறிப்பிடத்தக்கவன் செங்கணான் என்னும் மன்னன் ஆவான்.
•    இம்மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறையைக் கழுமலம் என்னும் இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான்.
•    இவன் சிவபெருமானிடத்தில் பக்தி கொண்டு ஆற்றிய சமயப் பணி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
•    கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் பிசிராந்தையார் என்னும் புலவரின் நண்பனாக இருந்தான்.
•    இவன் அறநெறி தவறாமல் சிறிது காலம் ஆட்சி புரிந்து வந்தான்.
•    தித்தன் என்னும் மன்னன் உறையூரில் இருக்கை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான்.
•    கோப்பெரு நற்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்றோரும் சோழ மன்னர்களாகச் சோழ நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.

No comments:

Post a Comment