LATEST

Thursday, January 30, 2020

பாண்டிய மன்னர்கள்

பாண்டிய மன்னர்கள்

•    பாண்டிய நாடு தென்புலம் என்றும் பாண்டிய மன்னர்கள் தென்புலம் காவலர் பெருமான் என்றும் அழைக்கப் பெறுவர்.
•    தென்புலம் என்பது பழனி மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதியாகும்.
•    பாண்டிய அரசிற்கு நீண்டதொரு வரலாறு உண்டு.
•    கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்குப் பாண்டிய மன்னன் தூதுவரை அனுப்பினான் என்பது வரலாறு.
•    பாண்டிய நாடு பெருமையோடு விளங்கியதற்குக் காரணம் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, கடல்கடந்து பண்டைய காலத்திலே வாணிபம் மேற்கொண்டதுதான்.
•    பாண்டிய நாட்டின் தெற்கே கடல்கோள் நடந்ததால் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கிப் போய்விட்டது எனப் புவியியலாளர் கூறுவர்.
•    அப்படிப்பட்ட பாண்டிய நாட்டைப் புகழ் பெற்ற மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
•    பண்டைய காலத்தில் பாண்டியர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.
•    கடல்கோள் காரணமாக அக்கபாடபுரத்திலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிப் பாண்டியர் ஆட்சி புரிந்தனர்.
•    இம்மதுரைக்குக் கூடல் நகர் என்ற வேறு பெயரும் உண்டு. இம்மாநகரம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இம்மதுரையில்தான் மூன்றாவது சங்கம் அமைத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்தனர்.
•    பாண்டிய நாட்டின் கடலில் எடுக்கப்பட்ட முத்துக்கள் அயல்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ப்பட்டன.
•    பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையில் மாட மாளிகைகளும், அகன்ற வீதிகளும் காணப்பட்டன. பாண்டிய மன்னர்கள் நீதி வழுவாது நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர். மேலும் புலவர்களைப் போற்றி வந்தனர்.

No comments:

Post a Comment