வடிம்பலம்ப நின்ற பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
• சங்ககாலப் பாண்டிய மன்னகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் ஆவான்.
• இவனுடைய அரசவையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது என்பர்.
• இவன் முடிசூட்டிக் கொண்டு நெடுங்காலம் ஆண்டு வந்ததால் இம்மன்னன் நெடியோன் என்று பாராட்டப்பெற்றான்.
நிலம்தந்த பேர் உதவி
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் (மதுரைக் காஞ்சி: 60-61)

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
• முதுகுடுமிப் பெருவழுதி என்னும் இயற்பெயருடைய இவன் யாகசாலைகள் பல அமைத்து, யாகங்கள் (வேள்விகள்) செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான்.
• இவன் வேள்விகள் செய்வதற்கு உதவிய அந்தணர்களுக்கு வேள்விக்குடி என்னும் சிற்றூரைத் தானமாக அளித்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
• இவன் பகைவரோடு போர் செய்யும்போது அறநெறியைக் கடைப்பிடித்தான்.
• பகைவர் நாட்டினுள் படையுடன் புகுந்தவுடன், முதற்கண் போர் நடைபெறும் இடத்தில் உள்ள பசுக்கள், அந்தணர்கள், பிணியுடையோர், பெண்கள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பறையடித்து அறிவித்துவிட்டு, அதற்குப் பின்னரே போர் செய்யத் தொடங்குவான் என்று புறநானூறு கூறுகிறது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
• இவன் சங்க காலப் பாண்டியருள் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னன் ஆவான்.
• மிக இளமைக் காலத்திலேயே அரசபதவியை அடைந்தான்.
• ஒரு சமயம் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் ஒன்று கூடிப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர்.
• தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் அப்பகைவர் எழுவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றான்.
• இதனால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எனப்பட்டான்.
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருதுகளத்து அடலே (புறநானூறு , 76: 11-13)
• இப்பாண்டிய மன்னன் பெற்ற வெற்றியைச் சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
• பத்துப்பாட்டில் அமைந்து இருக்கும் மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய பாட்டுகளுக்குப் பாட்டுடைத் தலைவனாக இம்மன்னன் இருக்கின்றான்.

No comments:
Post a Comment