LATEST

Thursday, January 30, 2020

பாண்டிய மன்னர்கள் - கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி 

 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

•    இப்பாண்டிய மன்னன் சங்ககாலப் பாண்டிய மன்னருள் இறுதியில் வாழ்ந்தவனாவான். இவன் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்தான்.
•    இவன் காலத்தில் பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கானப்பேரெயில் என்னும் கோட்டை உள்ள பகுதியை வேங்கைமார்பன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.
•    உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயிலைக் கைப்பற்றித் தனக்கு உரியதாக்கிக் கொண்டான்.
•    எனவே இவன்கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப்பட்டான். கானப் பேரெயில் தற்போது சிவகங்கைக்குக் கிழக்கே 16 கி.மீ தொலைவில் காளையார் கோயில்என்னும் பெயரில் உள்ளது.
•    பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யாவருடனும் பகைமை பாராட்டாமல் மாரி மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனுடனும் நட்புப் பூண்டிருந்தான்.
•    இந்நட்பினைப் பாராட்டி ஒளவையார் புறநானூற்றில் (பாடல் எண் 367) வாழ்த்தியுள்ளார்.
•    இப்பாண்டிய மன்னன் சிறந்த புலவனாகவும், புலவர்களைப் போற்றிய புரவலனாகவும் இருந்தான்.
•    இவனது அரசவையில்தான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று கூறுவர்.
•    திருக்குறளைப் பாராட்டும் வகையில் இவன் பாடியதாக அமைந்த ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது.
•    எல்லாவற்றிற்கும் மேலாக எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம்மன்னனே என்றும் கூறுவர்.
•    இப்பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள் உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன.
•    உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஐயூர் மூலங்கிழாரும், ஒளவையாரும் புறநானூற்றில் பாடியுள்ளனர்.

 பிற பாண்டிய மன்னர்கள்

•    பாண்டிய மன்னருள் மேலும் ஒரு சில மன்னர்கள் புகழ் பெற்று விளங்கினர்.
•    அப்பாண்டிய மன்னர்களைப் பற்றி அகநானூற்றிலும் பிற இலக்கியங்களிலும் சுட்டப்பட்டிருந்தாலும் செய்திகள் அவ்வளவு விரிவாகக் கூறப்படவில்லை.
•    அவர்களுள் சில மன்னர்கள் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி, கீரஞ்சாத்தன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், மதிவாணன், மாலை மாறன், மாறன் வழுதி, முடத்திருமாறன், வெற்றிவேற் செழியன் ஆவர்.

No comments:

Post a Comment