LATEST

Thursday, January 30, 2020

குறுநில மன்னர்கள்

குறுநில மன்னர்கள்

•    மூவேந்தர் என்று சொல்லக்கூடிய பெருமை வாய்ந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியில் அவர்களுக்குக் கீழ் பல குறுநில மன்னர்கள் (சிற்றரசர்கள்) சிறுசிறு பகுதிகளுக்குத் தலைவர்களாக விளங்கினர்.
•    சில குறுநில மன்னர்கள் மூவேந்தர்களை எதிர்த்து வென்று தமது பகுதிகளைச் சுதந்திரமாக்கிக் கொண்டதும் உண்டு.
•    வேளிர், கோசர் போன்ற குறுநில மன்னர்கள் தமிழகத்திற்கு வட திசையிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர்.
 

வேளிர்

•    வேளிர் என்பவர்களைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவ்வேளிர் வடதிசையிலிருந்து அகத்தியருடன் தமிழகம் வந்து 18 குடிகளாக அமர்ந்தனர் என்றும், சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தோன்றிய காலம் முதற்கொண்டே அமைந்திருந்தனர் என்றும் கூறுவர்.
•    இவர்களின் முன்னோர் திருமால் வழிவந்தவர் என்றும் கூறுவர்.
•    எவ்வாறு எனில் வடதிசையில் உள்ள துவாரகை என்னும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுவர்.
•    பெரும்பாலும் மலைப்பகுதிகள் அவர்களது ஆட்சியின் கீழ் இருந்தன.
•    அங்குச் செல்வம் மிக்க நகரங்கள் இருந்தன.
•    நகரங்களைச் சுற்றிக் கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன.
•    குறுநில மன்னர்களான வேளிர் இலக்கியத்தையும், கலையையும் போற்றி ஆதரித்தனர்.
•    கொடையில் நிகரற்று விளங்கினர்.
•    பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதிகமான், நள்ளி ஆகிய கடை ஏழு வள்ளல்கள் வேளிர்கள் ஆவர்.

ஆய் அண்டிரன்

•    வேளிர் குடி வழி வந்தவர்களில் சிறப்புப் பெற்றவன் ஆய் அண்டிரன் ஆவான்.
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் (புறநானூறு , 240: 3)
(அருகா ஸ்ரீ குறைவறக் கொடுக்கும்)

இக்குறுநில மன்னன் பொதியை மலையை ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைத் தனக்குப் பணிய வைத்தான். ஆய் அண்டிரன் சிறந்த பண்பாளன் என்று ஒளவையார் பாடியுள்ளார்.

No comments:

Post a Comment