இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. 1907 ஆம் ஆண்டு சூரத் நகரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
2. 1883-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மசோதா இல்பர்ட் மசோதா.
3. முஸ்லீம் லீக் கட்சியைத் தோற்றுவித்த நவாப் சலிமுல்லாகான் டாக்கா நகரைச் சேர்ந்தவர்.
4. கி.பி.1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தோன்றியது.
5. சென்னையில் தன்னாட்சி கழகத்தின் கிளையினைத் தொடங்கியவர் அன்னிபெசன்ட் அம்மையார்.
6. அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய நியூ இந்தியா பத்திரிகையை ஆங்கில அரசு தடைசெய்தது.
7. கி.பி 1916 ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் ஏற்பட்டது.
8. ஜவஹர்லால் நேரு, காந்தியடிகளை முதன் முதலாகச் சந்தித்த இடம் லக்னோ மாநாடு.
9. முஸ்லீம் இன மக்களை திருப்திபடுத்த, மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
10. ஆங்கிலப் பாராளுமன்றம் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தை இயற்றிய ஆண்டு 1919.
No comments:
Post a Comment