LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 12

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி  12

1. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்.

2. இறைவன் ஜோதி வடிவானவன் என்று கூறியவர் இராமலிங்க அடிகளார்.

3. வள்ளலார் ‘சத்திய தரும சாலையை’ நிறுவிய இடம் வடலூர்.

4. 1872ஆம் ஆண்டு சத்திய ஞான சபையை வள்ளாலர் நிறுவினார்.

5. இராமலிங்க அடிகள் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பு திருவருட்பா.

6. அலிகார் இயக்கம் சர் சையது அகமது கான் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

7. நவீனக் கல்வியையும், சமூகச் சீர்திருத்தங்களையும் முஸ்லீம்களிடையே பரப்ப அமைக்கப்பட்ட முதல் அமைப்பு அலிகார் இயக்கம்.

8. சையது அகமது கான் நிறுவிய பள்ளி பின்னர் அறிவியல் கழகம் என அழைக்கப்பட்டது.

9. முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியே பிற்காலத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் ஆக வளர்ச்சி அடைந்தது.

10. சையது அகமது கான் தாசில்-உத்-அஃலக் எனும் பத்திரிகையை நடத்தினார்.

No comments:

Post a Comment