19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 3
1. பிரம்மஞான சபைஅ) பிரம்மஞான சபையை நிறுவியவர் யார்?
விடை: இரஷ்ய பெண்மணி மேடம் பிளவாட்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் ஹென்றி எஸ் ஆல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டது.
ஆ) பிரம்மஞான சபை நிறுவப்பட்டது ஏன்?
விடை: கடவுள் பக்தி மற்றம் உண்மை அறிவை பெறுவதற்காக பிரம்ம ஞான சபை நிறுவப்பட்டது
இ) 1893-ஆம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் தலைவர் யார்?
விடை: திருமதி. அன்னிபெசன்ட் அவர்கள்
ஈ) பிரம்ம ஞான சபையின் தலைமையகம் எங்குள்ளது?
விடை: சென்னையில்இ அடையார் என்னும் இடத்தில் உள்ளது.
2. இராமகிருஷ்ண மடம்
அ) இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பவர் யார்?
விடை: இராமகிருஷ்ண பரமஹம்சர் வங்காளத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் 1836-இல் பிறந்தவர். தட்சிணேசுவரம் என்னும் இடத்திலுள்ள காளி கோயிலில் அர்ச்சகராக இருந்தவர், இவர் விவேகானந்தரின் குரு.
ஆ) இராமகிருஷ்ண மடத்தினை நிறுவியது யார்?
விடை: சுவாமி விவேகானந்தர்.
இ) உலக சமய மாநாடு எங்குஇ எப்பொழுது நடைபெற்றது?
விடை: 1893-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்.
ஈ) உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார்?
விடை: சுவாமி விவேகானந்தர்.
No comments:
Post a Comment