LATEST

Thursday, January 30, 2020

சங்க கால மன்னர்கள் - கடைச்சங்க மன்னர்கள்

சங்க கால மன்னர்கள் -
கடைச்சங்க மன்னர்கள்


இங்கு நாம் கடைச்சங்கத்தின் மூலமாக எழுந்த இலக்கியங்களில் காணப்படும் மன்னர்களைப் பற்றிக் காணலாம்.

•    சங்க காலத்தில் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது.
•    மேற்குக் கடற்கரைப்பகுதி சேர நாடு என்றும், கிழக்குக் கடற்கரையின் வடபகுதி சோழ நாடு என்றும், அதன் தென் பகுதி பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டன.
•    அவற்றை முறையே சேர, சோழ, பாண்டிய அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர்.
•    கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த பாண்டிய அரசனின் மூன்று மகன்கள் மூவிடங்களுக்கும் சென்று சேர, சோழ, பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற செய்தியும் நிலவுகின்றது.
•    சங்க இலக்கியத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
•    ஆனால் அவர்களுடைய அரசியல் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதுவதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கவில்லை.
•    சங்க கால மன்னர்களை இங்கு நாம் பெரும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று பிரித்துக் காணலாம்.
•    பெரும் மன்னர்கள் என்போர் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர்.
•    குறுநில மன்னர்கள் என்போர் வேளிர், கோசர் போன்ற சிற்றரசர்கள் ஆவர்.
 
சேர மன்னர்கள்
•    செந்தமிழ் வேந்தர் மூவருள் (சேரர், சோழர், பாண்டியர்) சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது.
•    இவர்களுக்கு வானவர் என்ற பெயரும் உண்டு.
•    சேர நாட்டையாண்ட சேர மன்னர்கள் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்கள், மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர்.
•    இவர்களுள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர்.
•    சேர மன்னர்கள் விற்கொடியைக் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment