19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 4
1. அலிகார் இயக்கம்
அ) முஸ்லீம்களின் முதல் சமய இயக்கத்தில் பெயர் என்ன?
விடை: அலிகார் இயக்கம்.
ஆ) சர் சையது அகமது கான் உறுதியாக நம்பியது என்ன?
விடை: நவீன கல்வியையும், சமூகச் சீர்திருத்தங்களையும் முஸ்லீம்களிடையே கொண்டுவர வேண்டும் என உறுதியாக நம்பினார்.
இ) சர் சையது அகமது கானின் சாதனை யாது?
விடை: 1875-ஆம் ஆண்டு அலிகாரில் முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் (ஆயுழு) கல்லூரியைத் தோற்றுவித்தது.
ஈ) சர் சையது அகமது கான் வெளியிட்ட செய்தித்தாளின் பெயர் என்ன?
விடை: தாசில்-உத்-அஃலக்.
2. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
அ) தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களின் மீட்பாளர் யார்?
விடை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.
ஆ) இந்தியாவின் முதல் சட்ட அமைமச்சர் யார்?
விடை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.
இ) இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்?
விடை: 1990-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட்டது.
ஈ) பம்பாய்க்கு அருகில் மகத் பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
விடை: தீண்டத்தகாத மக்களுக்கு மகத் என்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவதற்காகப் பேரணியை தலைமையேற்று நடத்தினார்.
No comments:
Post a Comment