19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. பிரார்த்தனா சமாஜம் ஆத்மராம் பாண்டுரங் என்பவரின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.2. பிராத்தனா சமாஜ சபையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்;ககை முழுவதையும் அர்ப்பணித்தவர் மகாதேவ கோவிந்தரானடே.
3. ஆரிய சமாஜம் 1875 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
4. சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது.
5. சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த இடம் மூர்வி-குஜராத் மாநிலம்.
6. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் மூல் சங்கர்.
7. சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவர் சுவாமி விராஜனந்தரின் சீடர்.
8. சுவாமி தயானந்த சரஸ்வதியின் குறிக்கோள் ‘வேதங்களை நோக்கிச் செல்’.
9. ஆரிய சமாஜம் விலங்குகளைப் பலியிடுதல், உருவ வழிபாடு, மூடப்பழக்கம், சொர்க்கம், நரகம் போன்ற கோட்பாடுகளை எதிர்த்தது.
10. மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் ‘சுத்தி இயக்கம்’.
No comments:
Post a Comment