LATEST

Wednesday, January 29, 2020

இரு உலகப்போர்க்கிடையே உலக நிலை (கி.பி.1919-கி.பி.1939) – கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

 இரு உலகப்போர்க்கிடையே உலக நிலை (கி.பி.1919-கி.பி.1939) – பொருளாதாரப் பெருமந்தம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1


1. 1929 ஆண்டின் இறுதியில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது.

2. பங்கு வர்த்தகம் உச்சக்கட்டத்தை அடைந்த போது அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவர் ஹெர்பர்ட் ஹீவர்.

3. பங்குகளில் மிகப்பெரிய சரிவு 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாளில் ஏற்பட்டது.

4. அமெரிக்க மக்கள் பெருமளவு பங்கு வணிகத்தில் முதலீடு செய்யக் காரணம் மறு விற்பனை செய்து லாபம் பெற.

5. எப்.டி. ரூஸ்வெல்ட் பதிவியிலிருந்தபோது வங்கி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடன் வழங்கியது கூட்டாட்சி ரிசர்வ் வங்கி.

6. 1932-இல் ஹெர்பர்ட் ஹீவர் ஆட்சியின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

7. இரு உலகப்போர்களுக்கிடையில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தால் அதிகளவில் பாதிப்படையாத நாடு சோவியத் ரஷ்யா.

8. பிராங்களின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் 4 மார்ச், 1933.

9. பங்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்ட நாள் 1929 அக்டோபர் 24.

10. 1932 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் பிராங்களின் டி.ரூஸ்வெல்ட்.

No comments:

Post a Comment