ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945)
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2
1. அடால்ஃப் ஹிட்லர்அ) அடால்ஃப் ஹிட்லர் எங்கு பிறந்தார்?
விடை: ஆஸ்திரியாவில் பிறந்தார்
ஆ) அவர் தந்தையின் தொழில் என்ன?
விடை: சுங்க அதிகாரி
இ) ஹிட்லர் எதனைத் தோற்றுவித்தார்?
விடை: நாசிசக் கட்சி
ஈ) ஹிட்லர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
விடை: மெயின் காம்ப் (எனது போராட்டம்)
2. ஹிட்லரின் தீவிரக் கொள்கை
அ) ஹிட்லர் எதற்காக நாடுகளைக் கைப்பற்றினார்?
விடை: ஜெர்மனியின் வளங்களைப் பெருக்குவதற்கும், பெருகி வரும் மக்கள் தொகைக் குடியேற்றத்திற்காகவும் பிற நாடுகளைக் கைப்பற்றினார்.
ஆ) 1925-ஆம் ஆண்டு ஏற்பட்ட லொகார்னோ உடன்படிக்கையை எவ்வாறு மீறினார்?
விடை: 1936-ஆம் ஆண்டு இராணுவ விலக்கு பெறப்பட்ட ரைன்லாந்தைக் கைப்பற்றியதன் மூலம் லொகர்னோ ஒப்பந்தத்தை மீறினார்
இ) ஹிட்லர் போலந்திடம் வேண்டியது என்ன?
விடை: ஜெர்மனியையும் கிழக்கு பிரஷ்யாவையும், போலந்து வழியாக இணைக்கும், இராணுவச்சாலை அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டை கட்டாயப்படுத்தி, டான்சிக் துறைமுகத்தைத் தன்னிடம் ஒப்படைக்கவும், வலியுறுத்தினார்
ஈ) ஹிட்லர் போலந்து மீது எப்பொழுது போர் தொடுத்தார்?
விடை: 1939-ஆம் ஆண்டு செப்டம்பா 1-ஆம் நாள் ஹிட்லர் போலந்து நாட்டின் மீது போர் தொடுத்தார்
No comments:
Post a Comment