LATEST

Wednesday, January 29, 2020

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள் பகுதி 2

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள் பகுதி 2

கடல்வழி போக்குவரத்து
•    கண்டங்களுக்கிடையே பயணம் செய்வதற்கு கருதப்பட்டது. ஆனால் இன்றோ அது அதிக எடையுள்ள பொருள்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.
 
உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழிகள்
•    வட அட்லாண்டிக் வழி: இது மக்கள் நிறைந்த பகுதியாகிய மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் வட அமெரிக்காவில் கிழக்குப் பகுதிகளையும் இணைக்கும் வழியாகும்.
•    நன்னம்பிக்கை முனை வழி: இது மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய பகுதிகளை தென்மேற்கு ஐரோப்பிய பகுதிகளை தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உடனே இணைக்கும் வழியாகும்.
•    பனாமா கால்வாய் வழி: இது வட மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை அக்கண்டங்களின் கிழக்கு கடற்கரை பகுதிகளோடு இணைக்கும் வழியாகும்.
•    டிரான்ஸ் பசுபிக் வழி: இது கிழக்காசிய துறைமுகங்களை வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை துறைமுகங்களோடு இணைக்கும் வழியாகும்.

வான்வழிப்போக்குவரத்து
•    வான்வழிப்போக்குவத்து மிக வேகமான மற்றும் செலவு அதிகமானப் போக்குவரத்து ஆகும்.
•    இது பயணிகள், பொருள்கள் மற்றும் கடிதங்களை கொண்டு செல்ல பயன்படுகிறது.

குழாய் போக்குவரத்து
•    பெரிய இன்ச் லைன் (Big Inch Line) டெக்சாஸ் முதல் நியூஜெரிசி வரை செல்லும் குழாய் வழி
•    டாப்ஸ் (TABS) வட அமெரிக்காவின் டிரான் அலாஸ்கர் குழாய் போக்குவரத்து
•    டாப் லைன் (TAP) சவுதி அரேபியாவின் கைசுமா பகுதியிலிருந்து லெபனானில் உள்ள சைடன் பகுதிவரை 1214 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ள குழாய்ப் போக்குவரத்து ஆகும்.
 

No comments:

Post a Comment