இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
வினா விடை பகுதி 1
1. இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கைஅ) வெர்சேல்ஸ் உடன்படிக்கை
ஆ) ரோம் உடன்படிக்கை
இ) லண்டன் உடன்படிக்கை
ஈ) ஐ-லா-சபேல் உடன்படிக்கை
விடை: அ) வெர்சேல்ஸ் உடன்படிக்கை
2. பிரான்சுக்குக் கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்
அ) ஜாரியா
ஆ) சார்
இ) பொகாரோ
ஈ) இராணிகஞ்ச்
விடை: ஆ) சார்
3. முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு.
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) இந்தியா
ஈ) கொரியா
விடை: ஆ) ஜப்பான்
4. சண்டையும், கைப்பற்றுதலும் என்ற கொள்கையைப் பின்பற்றியவர்கள்
அ) மிதவாதிகள
ஆ) தீவிரவாதிகள்
இ) சர்வாதிகாரி
ஈ) புரட்சியாளர்கள்
விடை: இ) சர்வாதிகாரி
5. செப்டம்பர் 1938-இல் ஹிட்லர் படையெடுப்பதாக மிரட்டப்பட்ட நாடு
அ) யுகோஸ்லாவியா
ஆ) போலந்து
இ) பின்லாந்து
ஈ) செக்கோஸ்லேவேகியா
விடை: ஈ) செக்கோஸ்லேவேகியா
6. ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது
அ) டானன்பர்க்
ஆ) டான்சிக்
இ) ஜட்லாந்து
ஈ) எஸ்தோனியா
விடை: ஆ) டான்சிக்
7. பிலிட்ஸ்கிரீக் என்றால்
அ) மின்னல் போர்
ஆ) பதுங்கு குழிப்போர்
இ) நீர்முழ்கிக் கப்பல் போர்
ஈ) கொரில்லாப் போர்
விடை: அ) மின்னல் போர்
8. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர்
அ) சர் வின்ஸ்டன் சர்ச்சில்
ஆ) கிளமென்ட் அட்லீ
இ) தாட்சர்
ஈ) லாயிட்ஸ் ஜார்ஜ்
விடை: அ) சர் வின்ஸ்டன் சர்ச்சில்
9. ஹிட்லருடன் போர் தொடுக்காத உடன்படிக்கையைச் செய்து கொண்டவர்
அ) கார்பச்சேவ்
ஆ) போரிஸ் எல்ஸ்டின்
இ) ஸ்டாலின்
ஈ) லெனின்
விடை: இ) ஸ்டாலின்
10. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களைத் தாக்கி அழித்த நாடு -------------------
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) பிரான்ஸ்
ஈ) ஜெர்மனி
விடை: அ) அமெரிக்கா
No comments:
Post a Comment