இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2
1. இரண்டாம் உலகப் போர் - காரணங்கள்அ) இத்தாலி – ஜெர்மனி – ஜப்பான் செய்து கொண்ட உடன்படிக்கை யாது?
விடை: ரோம் - பெர்லின் - டோக்கியோ அச்சு ஒப்பந்தம்
ஆ) முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட சில அரசியல் கொள்கைகளைக் குறிப்பிடுக
விடை: ஜனநாயகம், பொதுவுடைமைக் கொள்கை, பாசிசம், நாசிசம் ஆகியவை
இ) வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பின்பற்றிய கொள்கைகள் பற்றி எழுதுக.
விடை: போலியான அமைதிக் கொள்கை
ஈ) ஹிட்லர் எதை மீறினார்?
விடை: மியூனிச் உடன்படிக்கை
2. பார்பேரிய கடல்போர் நடவடிக்கைகள்
அ) பார்பேரிய கடல்போர் எந்த ஆண்டு தொடங்கியது?
விடை: 1941-இல்
ஆ) ஹிட்லர் விரும்பியது யாது?
விடை: கம்யூனிசத்தை அது தோன்றிய மண்ணிலேயே அழிக்க விரும்பினார்
இ) ஹிட்லரின் உத்தரவு என்ன?
விடை: யூகோஸ்லாவியா மற்றும் கிரீஸ் நாடுகள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்
ஈ) அச்சு நாடுகள் பால்கன் நாடுகளை எப்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன?
விடை: 1941, ஏப்ரல் மாத இறுதிக்குள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன
No comments:
Post a Comment