இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 3
1. போர் முடிவுஅ) அமெரிக்க பிரிட்டிஷ்; படைகள் எங்கு களமிறங்கின?
விடை: நார்மண்டியில்
ஆ) இவர்கள் யாருடன் இணைந்து கொண்டனர்?
விடை: பிரான்சில் இருந்த உளவுப் படையுடன் இணைந்து கொண்டனர்
இ) ஹிட்லர் என்ன செய்தார்?
விடை: ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்
ஈ) அமெரிக்கா, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது எப்பொழுது அணுகுண்டுகளை வீசியது?
விடை: அமெரிக்கா 1945 ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டு வீசி ஜப்பானிய நகரங்களை அழித்தது.
2. போரின் விளைவுகள்
அ) ஜப்பானைக் கைப்பற்றியது யார்?
விடை: அமெரிக்கப் படைத் தளபதி ஜெனரல் மெக் ஆர்தர்
ஆ) இரண்டாம் உலகப் போருக்குப் பின் தோன்றிய இரு வல்லரசுகள் யாவை?
விடை: அமெரிக்கா, இரஷ்யா
இ) போருக்கு பின் சுதந்திரம் பெற்ற நாடுகள் யாவை?
விடை: இந்தியா, இலங்கை, பர்மா, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், இந்தோ-சீனா, இந்தோனேஷியா ஆகியவை
ஈ) ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது ஏன்?
விடை: உலக அரங்கில் அமைதியைப் பாதுகாக்கவும், உலக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது.
No comments:
Post a Comment