LATEST

Wednesday, January 29, 2020

உயர் திறன் குழு (High Power Committee)

உயர் திறன் குழு (High Power Committee)

•    தேசிய அளவிலும், அனைத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலும் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் மேலாண்மை திட்டம் வகுப்பதற்காக ஆகஸ்டு 1989ஆம் ஆண்டு திரு.ஜே.சி.பந்த் அவர்கள் தலைமையில், சிறந்த வல்லுநர்களை உறுப்பினர்களாக கொண்ட உயர்திறன் குழு அமைக்கப்பட்டது.
 
ஐந்து வகை பேரிடர்கள்
1.    நீர் மற்றும் கால நிலை சார்ந்தவை (வெள்ளம், புயல், இடி, மின்னல், கடும்புயல் (Hurricane), பனிப்பொழிவு, கடல் கொந்தளிப்பு, ஆலங்கட்டி புயல் (Hailstorm), வறட்சி)
2.    நிலம் மற்றும் மண் சார்ந்தவை (மண் சரிவு, நில நடுக்கம், தீ, அணை உடைப்பு மற்றும் வெடிப்பு)
3.    உயிரியல் சார்ந்தவை ( நோய் பரவல், கால்நடை நோய் பரவல், உணவு விஷமாதல், பூச்சிகள் தொல்லை )
4. வேதியியல்/அணுக்கள் தொடர்புடையவை (அணுக்கதிர், தொழிற்சாலை,வாயுக் கசிவு)
5.    விபத்து சார்ந்தவை (காட்டுத் தீ, எண்ணெய் கசிவு, கட்டிடம் இடிதல், கூட்ட நெரிசல்  வெடிவிபத்து, மின்கசிவு, சாலை விபத்துகள்)
 
உயர் திறன் குழு பேரிடர் மேலாண்மைக்கான திட்டமிடலை நான்கு நிலைகளாக வகைப்படுத்தியுள்ளது.
நிலை 1: பேரிடரை எதிர்கொள்ளவும் கண்காணிக்கவும் தயார் படுத்தும் நிலை
நிலை 2: மாவட்ட அளவிலேயே மேலாண்மை செய்துவிடக்கூடிய பேரிடர்கள்
நிலை 3: மாநில அளவில் மேலாண்மை செய்துவிடக்கூடிய நிலையிலான பேரிடர்கள்
நிலை 4: மிகக் கடுமையான பேரிடர், தேசிய அளவிலான மேலாண்மை தேவைப்படும் நிலை.

No comments:

Post a Comment