LATEST

Wednesday, January 29, 2020

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)

சரியான முறையிலும், உரிய நேரத்திலும் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள கொள்கை முடிவுகள் எடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாணையம் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்கிறது.
•    தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதலளித்தல்
•    பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்களை, தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்திற்குட்பட்டு அங்கீகரித்தல்.
•    பேரிடர் புனரமைப்பிற்கான நிதி ஆதாரங்களை பரிந்துரைத்தல்
•    மாநில பேரிடர் ஆணையத்தினால் விடுவிக்கப்பட வேண்டிய மாநிலத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.
•    தேசிய வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு பேரிடரால் பாதிக்கப்பட்ட அயல்நாடுகளுக்கு உதவுதல்
•    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்துவதற் கான நெறிமுறைகளை உருவாக்குதல்.

பேரிடர் மேலாண்மை பரிமாணங்கள்

•    பேரிடர் மேலாண்மையில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை குறைந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் இப்பணியை ஒரு வணிகமாக செயல்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
•    அவசரநிலை மேலாண்மையில் பயிற்சி அளித்தலும் தனியே ஒரு வணிகமாக உருவாகியுள்ளது.  Certified Emergency Manager, Certified Business Continuity Professional போன்ற சான்று பெற்ற அலுவலர்கள் பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
•    பேரிடர்களின்போது ஏற்படும் அவசர நிலையை நிர்வகிப்பதற்காகத் தேவைப்படும் பல்வேறு கருவிகள், பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதும் ஒரு தொழிலாக பரிமாணம் அடைந்துள்ளது.
•    பேரிடர் தொடர்பான தொகுப்புகள், நூல்கள், கடந்தகால அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைத்து நூலகங்கள், ஆவணக்கிடங்குகள், அருங்காட்சியகம் போன்றவைகளும் வளர்ந்து வரும் பேரிடர் மேலாண்மை முறைகளுடன் ஒருங்கிணைந்து உள்ளன.
•    வணிக மயமாக்கல் பணிகள் மூலம் பேரிடர் மேலாண்மைப் பணிகள் எளிதாகவும், குறித்த காலத்தில் முடிவு பெறவும் பேரிடர் ஏற்படுத்தும் இழப்புகளை தவிர்க்கவும் பெரும் பங்கு வகிக்கின்றன.
•    இத்தகைய வணிக ரீதியிலான அமைப்புகளும் நிறுவனங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வகிக்கின்றன.

No comments:

Post a Comment