LATEST

Wednesday, January 29, 2020

இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945) ஒரு வரி வினாக்கள் பகுதி 9

இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945) 

ஒரு வரி வினாக்கள் பகுதி 9


1. வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி முதல் உலகப் போருக்கான முக்கிய குற்றவாளி நாடு ஜெர்மனி

2. ஜெர்மனி ஜெர்மானியர்களுக்கே, இத்தாலி இத்தாலியர்களுக்கே போன்ற கொள்கைகள் மக்களிடையே தேசிய எழுச்சியை ஏற்படுத்தியது.

3. உலகில் அமைதி, பாதுகாப்பை நிலைநிறுத்த முதல் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்டது சர்வதேச சங்கம்


4. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் மூன்று நாடுகளும் ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு ஒப்பந்தத்தை எற்படுத்தின

5. முதல் உலகப்போருக்குபின் உண்டான பல புதிய நாடுகளுக்கு தேசியக் கொள்கைகள் கிடையாது.

6. போலந்து, ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா போன்ற நாடுகளில் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட உரிமை சுயநிர்ணய உரிமை

7. நாசிசத் தலைவர் அடால்ஃப் ஹிட்லர்

8. வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் போலியான அமைதிக் கொள்கையை பின்பற்றினர்

9. இராணுவச்சேவையை கட்டாயம் என நடைமுறைப் படுத்தியவர் ஹிட்லர்

10. இத்தாலி மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து ரோம்-பெர்லின்-டோக்கியோ கூட்டணியை ஹிட்லர் உருவாக்கிய ஆண்டு 1937

No comments:

Post a Comment