இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2
1. சி.இராஜகோபாலாச்சாரிஅ) இராஜகோபாலாச்சாரி எங்கு பிறந்தார்
விடை: தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்
ஆ) 1939-ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரி முதலமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?
விடை: இரண்டாவது உலகப்போரின் போது ஆங்கில அரசு இந்தியத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதை கண்டித்து, 1939-ஆம் ஆண்டு தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்
இ) இவர் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்திய திட்டம் யாது
விடை: குலக்கல்வித் திட்டம்
ஈ) சாணக்கியர் என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை: இவருடைய தந்திரமான அரசியல் செயல்களால் ‘சாணக்கியர்’ என அழைக்கப்படுகிறார்
2. கே.காமராஜர்
அ) காமராஜர் எப்படி அரசியலில் நுழைந்தார்?
விடை: 1924-இல் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் அரசியலில் நுழைந்தார்
ஆ) 1930-இல் எங்கு சிறையில் அடைக்கப்பட்டார்?
விடை: அலிப்பூர் சிறையில்
இ) 1947-ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடியை எங்கு ஏற்றினார்?
விடை: சத்தியமூர்த்தியின் வீட்டில்
ஈ) காமராஜர் எப்பொழுது இறந்தார்?
விடை: அக்டோபர் 2, 1975-இல் காலமானார்
No comments:
Post a Comment