LATEST

Friday, January 31, 2020

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு வினா விடை பகுதி 1

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு

 வினா விடை பகுதி 1

1. வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட தூண்டியவர் --------
அ) ஹைதர் அலி
ஆ) திப்புசுல்தானின் மகன்கள்
இ) சிவாஜி
ஈ) ஷாஜகான்
விடை: ஆ) திப்புசுல்தானின் மகன்கள்

2. மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின் முதல் அமைப்பு
அ) இந்திய தேசிய காங்கிரஸ்
ஆ) முஸ்லீம் லீக்
இ) சுயராஜ்ஜிய கட்சி
ஈ) சென்னை சுதேசி சங்கம்
விடை: ஈ) சென்னை சுதேசி சங்கம்

3. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் ----------
அ) பி.இரங்கையா நாயுடு
ஆ) இராஜாஜி
இ) காமராஜர்
ஈ) பாரதியார்
விடை: அ) பி.இரங்கையா நாயுடு

4. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர்
அ) டி.எஸ் ராஜன்
ஆ) பக்தவச்சலம்
இ) இராஜகோபாலாச்சாரி
ஈ) வ.உ.சி
விடை: இ) இராஜகோபாலாச்சாரி

5. 1908-ஆம் ஆண்டு பாரதியார் சென்னையில் மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டி கொண்டாடியது.
அ) சுயராஜ்ஜிய நாள்
ஆ) பிறந்தநாள்
இ) குடியரசு நாள்
ஈ) சேவை நாள்
விடை: அ) சுயராஜ்ஜிய நாள்

6. பிரிட்டிஷாரின் கைது ஆணைக்கு எதிராக பாரதியார் தப்பியோடியது ----------
அ) சென்னை
ஆ) பெங்களுர்
இ) ஹைதராபாத்
ஈ) பாண்டிச்சேரி
விடை: ஈ) பாண்டிச்சேரி

7. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயர் -------
அ) ராஜ்பவன்
ஆ) ராஷ்டிரபதி பவன் 
இ) சத்தியமூர்த்தி பவன்
ஈ) விதான் சபா
விடை: இ) சத்தியமூர்த்தி பவன்

8. 1940-ஆம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்திக்க இருந்தது
அ) நேரு
ஆ) காந்திஜி
இ) ஜின்னா
ஈ) திலகர்
விடை: ஆ) காந்திஜி

9. தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
அ) 9 வருடங்கள்
ஆ) 8 வருடங்கள்
இ) 10 வருடங்கள்
ஈ) 7 வருடங்கள்
விடை: அ) 9 வருடங்கள்

10. காமராஜரின் பிரபலமான கொள்கை
அ) ‘எஸ்’ திட்டம்
ஆ) ‘எல்’ திட்டம்
இ) ‘கே’ திட்டம்
ஈ) ‘ஜெ‘ திட்டம்
விடை: இ) ‘கே’ திட்டம்

No comments:

Post a Comment