சமூக அறிவியல்
சமணமும் பௌத்தமும் பகுதி 1
1. சமண சமயத்துக்கு உறுதியான அமைப்பைத் தந்தவர்அ) வர்த்தமான மகாவீரர்
ஆ) ஆதிநாதர்
இ) ரிஷபதேவர்
விடை: அ) வர்த்தமான மகாவீரர்
2. சமண சமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை
அ) உருவ வழிபாடு
ஆ) கொல்லாமை
இ) தீண்டாமை
விடை: ஆ) கொல்லாமை
3. தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் ஒன்று.
அ) கிர்னார்
ஆ) கழுகு மலை
இ) ஹதிகும்பா
விடை: ஆ) கழுகு மலை
4. புத்தர் அறிவுணர்வு பெற்ற இடம்
அ) குந்தக் கிராமம்
ஆ) மான் பூங்கா
இ) கயா
விடை: இ) கயா
5. பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்
அ) சந்திர குப்தர்
ஆ) அசோகர்
இ) பிந்துசாரர்
விடை: ஆ) அசோகர்
6. வெற்றியாளர் அல்லது ஜீனர் என்று அழைக்கப்பட்டவர் மகாவீரர்.
7. சமணம் வலியுறுத்திய போதனைகள் மும்மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
8. கோமதீஸ்வரர் சிற்பம் அமைந்துள்ள இடம் சிரவணபெலகொலா.
9. புத்தரின் போதனைகள் திரிபீடகம் என்று அழைக்கப்படுகின்றன.
10. பௌத்தத் துறவிகளின் அமைப்பு சங்கம் எனப்பட்டது.
No comments:
Post a Comment