LATEST

Saturday, January 18, 2020

TNPSC புவியியல் - பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை பகுதி 2

பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஒரு வரி வினாக்கள் பகுதி 2 


1. பேரிடர் என்பது ஒரு எதிர்மறையான விளைவு.

2. இந்தியா நான்கு அதிர்வலை மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

3. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் ஹைதராபாத்ல் நிறுவப்பட்டுள்ளது.

4. பாறைத்துகள்கள் நீருடன் சேர்ந்து நகர்வதை சேறு வழிதல் என்கிறோம்.

5. பனிப்பாறை வீழ்ச்சிகள் உயர் அட்சப்பகுதிகளிலும் மற்றும் உயரமாக மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

6. இயற்கையின் செயலினால் இயற்கைப் பேரிடர் ஏற்படுகின்றன.

7. மனிதனின் கவனக்குறைவால், அறியாமையால் மனிதப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.

8. சுனாமி அலைகள் மணிக்கு 500 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.

9. கொலம்பியாவில் 1985இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அர்மேரோ நகரம் முழுவதும் புதையுண்டு போனது.

10. புயலால் தென்னிந்திய கடற்கரைப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment