LATEST

Wednesday, January 29, 2020

ஐக்கிய நாடுகள் சபை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

ஐக்கிய நாடுகள் சபை

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. ஐ.நா.சபை தற்சமயம் 193 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2. அவையின் முடிவுகளை ரத்து செய்யும் உரிமை நிரந்தர உறுப்பினர்களுக்கு உள்ளது.

3. அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் சென்ற விண்வெளி வீரர்கள் அமெரிக்க நாட்டைச் சார்ந்தவர்கள்

4. ஐ.நா.வின் கொடி இளம் நீல நிற பின்னணியில் அமைந்துள்ளது.

5. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவர் எப்.டி.ரூஸ்வெல்ட்

6. ஐ.நா,சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் நியூயார்க் நகரம் 

7. ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் பொதுச் சபையில் உறுப்பினராக உள்ளன.

8. ஒவ்வொரு நாடும் பொது அவைக்கு 5 பிரிதிநிதிகளை அனுப்பலாம்

9. ஐ.நா.வின் பொதுச் சபை ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் கூடும்

10. 1953-ம் ஆண்டு இந்தியாவைச் சார்ந்த பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமதி.விஜயலட்சுமி பண்டிட்

No comments:

Post a Comment